Jana Nayagan First Review: ஜன நாயகன் முதல் விமர்சனம்..

buzzhy avatar   
buzzhy
நடிகர் விஜய் அரசியலுக்கு வர முடிவு செய்த நிலையில், ஜன நாயகன் படம் தான் தனது கடைசி படம் என்றும் மக்களுக்காக என் சினிமாவை விடுகிறேன் என ஆடியோ வெளியீட்டு விழாவில் நாசர் மீண்டும் நடிக்க வரவேண்டும் என கோரி..

இயக்குநர் அ. வினோத் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பாபி தியோல், பிரகாஷ் ராஜ், நாசர், நரேன், பிரியாமணி உள்ளிட்ட பலர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள 'ஜன நாயகன்' திரைப்படம் வரும் ஜனவரி 9ம் தேதி அடுத்த வாரம் திரைக்கு வருகிறது. அனிருத் இசையில் ஏற்கனவே வெளியான பாடல்கள் எல்லாம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து டிரெண்டாகி வருகிறது.

நடிகர் விஜய் அரசியலுக்கு வர முடிவு செய்த நிலையில், ஜன நாயகன் படம் தான் தனது கடைசி படம் என்றும் மக்களுக்காக என் சினிமாவை விடுகிறேன் என ஆடியோ வெளியீட்டு விழாவில் நாசர் மீண்டும் நடிக்க வரவேண்டும் என கோரிக்கை வைத்த நிலையிலும் தனது முடிவை மீண்டும் உறுதியாக அறிவித்தார்.

 
Jana Nayagan First Review in Tamil  Vijay s last movie will be big treat for his fans
Photo Credit:

தெலுங்கில் அனில் ரவிப்புடி இயக்கத்தில் பாலகிருஷ்ணா, காஜல் அகர்வால், ஸ்ரீலீலா, அர்ஜுன் ராம்பால் நடிப்பில் வெளியான பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் தான் இந்த படம் என ஏகப்பட்ட உறுதியான தகவல்கள் வெளியான நிலையில், படத்தின் பாடல்கள் மற்றும் போஸ்டர்களும் அதை உறுதிப்படுத்தும் விதமாகவே வெளியாகி உள்ளன. இந்நிலையில், ஜன நாயகன் படத்தை தணிக்கை குழு அதிகாரிகள் பார்த்த நிலையில், படத்தின் முதல் விமர்சனம் குறித்த தகவல்கள் கசிந்துள்ளன.

ஜன நாயகன் முதல் விமர்சனம்: ப்ரண்ட்ஸ், கில்லி, போக்கிரி, நண்பன் என ஏகப்பட்ட ரீமேக் படங்களில் நடித்துள்ள விஜய் தனது கடைசி படத்தை ஒட்டுமொத்த ரசிகர்களும் கொண்டாட வேண்டும் என்பதற்காக பாலகிருஷ்ணாவின் பகவந்த் கேசரி படத்தின் உரிமையை வாங்கி அதன் ஃபிளாஷ்பேக் போர்ஷனில் வில்லன் அர்ஜுன் ராம்பாலின் அப்பாவாக நடித்துள்ள ஆடுகளம் நரேன் போர்ஷனில் அரசியல் கதையை கொஞ்சம் கூடுதலாக நீட்டி உருவாக்கியுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

 
Jana Nayagan First Review in Tamil  Vijay s last movie will be big treat for his fans
Photo Credit:

மேலும், பிரகாஷ் ராஜ் அரசியல்வாதியாக நடித்துள்ளதாக கூறுகின்றனர். கில்லி, சிவகாசி படங்களில் விஜய், பிரகாஷ் ராஜ் காம்பினேஷன் மிரட்டியதை போல இந்த காம்பினேஷன் வேறலெவலில் வெறித்தனமாக இருக்கும் என்றும் கூறுகின்றனர்.

பகவந்த் கேசரி படத்திலேயே அதிகப்படியான ஆக்‌ஷன் காட்சிகள் இருந்த நிலையில், விஜய் அதை எந்தளவுக்கு இன்னும் ஆக்ரோஷமாக கொடுக்க முடியும் என முடிவு செய்து ஏகப்பட்ட ஸ்டண்ட் காட்சிகளில் உசுரை கொடுத்து நடித்துள்ளார் என்கின்றனர்.

தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் அ. வினோத் எப்படி ஆக்‌ஷன் காட்சிகளை மிரட்டலாக உருவாக்கி இருந்தாரோ அதை விட பல மடங்கு லியோ ஸ்டைல் ஆக்‌ஷன் காட்சிகள் ஜன நாயகன் படத்தில் இருக்கும் என்கின்றனர். மேலும், அரசியல் வசனங்கள், பெண்களுக்கான பாதுகாப்பு கதை என படம் தளபதி ரசிகர்களுக்கான ட்ரீட்டாக இருக்கும் என்பது உறுதி என்கின்றனர்.

 
Jana Nayagan First Review in Tamil  Vijay s last movie will be big treat for his fans
Photo Credit:

மமிதா பைஜுவை எடுத்து வளர்க்கும் விஜய் அவரை ராணுவத்தில் சேர்க்க போராடுவது, கடைசியாக கிளைமேக்ஸில் வில்லன் ஆட்களை அவர் பந்தாடுவது உள்ளிட்ட காட்சிகள் பகவந்த் கேசரி படத்தை போலத்தான் இருக்கும் என்றும் ஆனால், அந்த படத்தை பார்த்தவர்களே இந்த படத்தை பார்த்தாலும் கடைசி வரை படம் ரசிக்கும்படியாக உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. இன்று வெளியாகும் டிரைலரில் விஜய்யை ஃபோகஸ் செய்தே காட்சிகள் உருவாக்கப்பட்டு இருக்கும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால், கண்டிப்பாக படத்தின் மையக் கதை புரியும் படி இயக்குநர் அ. வினோத் டிரைலரை கொடுப்பார் என்றும் தெரிகிறது.

কোন মন্তব্য পাওয়া যায়নি