Pookie Review: 'பூக்கி’ விமர்சனம்.

buzzhy avatar   
buzzhy
விஜய் ஆண்டனி மருமகனின் படம் எப்படி இருக்கு?.. கிக்கா? கிரிஞ்சா?
Rating:
3.0/5
Star Cast: அஜய் தீஷன், தனுஷா
Director: கணேஷ் சந்திரா

சென்னை: விஜய் ஆண்டனி தயாரிப்பில் கணேஷ் சந்திரா இயக்கத்தில் அஜய் தீஷன், தனுஷா, பாண்டியராஜன், விவேக் பிரசன்னா, பிளாக் பாண்டி உள்ளிட்ட பலர் நடிப்பில் இன்று வெளியாகி உள்ளது 'பூக்கி' திரைப்படம். இந்த படத்தை எடிட்டிங் செய்து இசையமைத்துள்ளார். இடைவேளைக்கு முன்பாக வந்து 'உச்சா' போயிட்டு வாங்க என விஜய் ஆண்டனியே வந்து சொல்வது, ஒரு பாடலுக்கு மாஸ் டான்ஸ் ஆடுவது என கேமியோவாகவும் கலக்கியுள்ளார்.

மார்கன் படத்தில் நீச்சல் வீரராக நடித்து தண்ணிர் நினைவுகளை வைத்து ககன மார்க்கம் செய்பவராக நடித்து அசத்திய அஜய் தீஷன் இந்த படத்தில் அதிகபட்சமாக சட்டை இல்லாத உடலுடன் தோன்றி இளம் பெண்களை கவரும் முயற்சியில் இறங்கியுள்ளார்.

 
Pookie Review in Tamil  Vijay Antony relative Ajay Dhishan s love breakup drama is Gen Z fun

அறிமுக நடிகை தனுஷா க்யூட்டாகவும் சப்பியாகவும் தோன்றி காதல், பிரேக்கப், காமெடி, டான்ஸ் என முடிந்தவரை தனது ஒட்டுமொத்த திறமையையும் ஸ்க்ரீனில் இறக்கியுள்ளார். இன்றைய Gen Z என சொல்லப்படும் இளைஞர்களின் காதல் மற்றும் பிரேக்கப் கதையாக உருவாகியுள்ள 'பூக்கி' படம் எந்தளவுக்கு ரசிக்க வைத்தது என்பது குறித்த விரிவான விமர்சனத்தை இங்கே பார்க்கலாம் வாங்க..

'பூக்கி' கதை: கைலாஷ் (அஜய் தீஷன்) மற்றும் ஆழி (தனுஷா) காதலர்களான இருவரும் தங்களை 'பூக்கி' என்றே அழைத்துக் கொண்டு 6 வருஷம் சீரியஸாக லவ் பண்ணிட்டு இருந்தாங்க. ஒரு நாள் காரில் போகும் போது இருவருக்குள்ளும் ஏற்படும் சண்டையின் போது அவங்க ரெண்டு பேரும் மாற்றி மாற்றி அறைந்துக் கொள்வதை ஸ்மார்ட் போன் வைத்திருக்கும் அத்தனை விர்ச்சுவல் வாரியர்ஸ்களும் வீடியோ எடுத்து டிரெண்ட் செய்ய இருவரும் பிரேக்கப் செய்து பிரிகின்றனர்.

6 வருட காதலை இவர்கள் இருவரும் மறந்தார்களா? வாழ்க்கையில் இன்னொரு துணையை தேடி மூவ் ஆன் ஆனாங்களா? இல்லையா? என்பது தான் இந்த 'பூக்கி' படத்தின் கதை.

படம் எப்படி இருக்கு?: டிரைலரில் ஆரம்பத்தில் சிம்பு வருவதை போலவே படம் முழுக்க சிம்புவின் தத்துவ பேட்டி வீடியோக்கள் கதையுடன் ஒன்றி கடைசி வரை வருவது புதிய ட்ரீட்மெண்ட்டாகவே அமைந்தது. மேலும், ஹஸ்க்கி வாய்ஸில் நாய், பூனைகள் பேசுவது, மாவீரன் பட பாணியில் ஒரு ஃபைட் என ஏகப்பட்ட கலாட்டாக்களும் நிறைந்துள்ளன.

இன்றைய தலைமுறையினர் லவ் பிரேக்கப்பில் இருந்து தங்களை மீட்க என்னவெல்லாம் செய்றாங்க, என்பதை ஒரு பெரிய லிஸ்ட் போட்டு அதையெல்லாம் ட்ரை பண்ணி பார்க்கும் கைலாஷ் மற்றும் ஆழி இருவரும் அதிலிருந்து மீள முடியாமல் தவிக்கும் இடங்களில் அவர்களது நடிப்பு ரொம்பவே நேச்சுரலாக அமைந்துள்ளது.

 
Pookie Review in Tamil  Vijay Antony relative Ajay Dhishan s love breakup drama is Gen Z fun

விஜய் ஆண்டனி படத்துக்கு பின்னணி இசை, பாடல்கள் என அதகளம் செய்துள்ளார். "பூக்கிக்கும் பூக்கிக்கும் சண்டை" பாடல் கண்டிப்பாக இளைஞர்களை விட குழந்தைகளை கவர்ந்துவிடும். ஒரு பக்கம் ஹீரோ வாரணம் ஆயிரம் சூர்யா போல சிக்ஸ் பேக் ஏற்ற ஜிம்முக்கு போக அங்கே அவருக்கு ஒரு காதல் செட்டாகும் என்றும் பார்த்தால் ஸ்ட்ரெச்சரில் ஏற்றும் நிலை தான் ஏற்படுகிறது.

இன்னொரு பக்கம் ஹீரோயின் அமைதியை தேடி ஆன்மிக பயணம் போறேன் என போலி சாமியாரிடம் சென்று மாட்டிக் கொள்வது என இளைஞர்களின் காதல் கதையை தாண்டி பல அரசியல் மற்றும் மோசடிகளையும் டச் செய்துள்ளனர்.

ஹீரோவுக்கு ஒரு காதல் செட்டாக அது திடீரென பரியேறும் பெருமாள் கதை போல சென்று விடுகிறது. இன்னொரு பக்கம் அப்பாவின் ஆசையை தீர்த்து வைக்க டிராகன், 3 பிஹெச்கே படமெல்லாம் ஓடுகிறது. நிறைய காட்சிகளும், நிறைய கிளை கதைகளும் இருவருக்குள் இடையேயான ஈகோ கிளாஷ் சண்டை மற்றும் பிரேக்கப் பஞ்சாயத்தை குறைத்து விடுகிறது.

பிளஸ்: விஜய் ஆண்டனியின் இசை இந்த படத்துக்கு பெரிய பலமாக அமைந்துள்ளது. அஜய் தீஷன், தனுஷா இருவரும் இன்றைய காலக்கட்ட காதலர்களை அப்படியே பிரதிபலித்துள்ளனர். ஏகப்பட்ட குழப்பங்கள் நிறைந்து அவர்களது வாழ்க்கை நகர்வதை பல காட்சிகளின் வழியே சொல்லியிருக்கும் விதம் அருமை. சிம்புவின் காட்சிகள் எல்லாமே தியேட்டரில் நிச்சயம் ரசிகர்களை சிரிப்பலையில் ஆழ்த்திவிடும். சிம்பு ரசிகர்கள் கடுப்பாகாமல் இருந்தால் சரி தான்.

 

 

மைனஸ்: படத்தின் நீளம் மிகப்பெரிய குறையாக மாறி நிற்கிறது. ஏஐ எல்லாம் வைத்து விஜய் ஆண்டனி எடிட்டிங்கில் தனது திறமையை காட்டினாலும், படத்தின் நீளத்தையும் தேவையற்ற காட்சிகளை 'கட்' செய்திருந்தாலும் படம் இன்னமும் க்ரிஸ்ப்பாக இளைஞர்களை மட்டுமின்றி அனைவரையும் கவரும் வகையில் அமைந்திருக்கும். காதலில் இருக்கும் டாக்ஸிக், காதலர்கள் அடித்துக் கொள்வது, பாடி ஷேமிங் காமெடி, ஓவர் டோஸான ஏஐ காட்சிகள், சிம்புவின் வீடியோக்கள் கூட ஒரு இடத்தில் இருந்தால் நல்ல ரெஸ்பான்ஸ் வந்திருக்கும். ஆனால், அதுவும் பல இடங்களில் ரிப்பீட் ஆவது கிரிஞ்சாகத்தான் உள்ளது. சில குறைகளை நீக்கி விட்டு பார்த்தால் இந்த காதலர் தினத்தை இளைஞர்கள் மற்றும் காதலர்கள் தாராளமாக 'பூக்கி' படம் பார்த்து கொண்டாடலாம்.

No comments found