Leader Review: லீடர் விமர்சனம்.

buzzhy avatar   
buzzhy
லெஜண்ட் சரவணன், பாயல் ராஜ்புத், சந்தோஷ் பிரதாப், ஷாம், ஆண்ட்ரியா, லால், குழந்தை நட்சத்திரம் இயல் என அனைவரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பாத்திரங்களை ஏற்று கனகச்சிதமாக நடித்துள்ளனர். மேலும், விடிவி கணேஷ்..
Rating:
3.5/5
Star Cast: லெஜண்ட் சரவணா, பாயல் ராஜ்புத்
Director: துரை செந்தில்குமார்

சென்னை: லெஜண்ட் சரவணா தயாரித்து நடித்துள்ள 'லீடர்' திரைப்படம் உலகம் முழுவதும் இன்று (ஏப்ரல் 3) திரையரங்குகளில் வெளியானது. எதிர்நீச்சல், காக்கிச் சட்டை, கொடி, பட்டாஸ் மற்றும் கருடன் படங்களை இயக்கிய இயக்குநர் துரை செந்தில்குமார் இந்த படத்தை உண்மையாகவே பட்டாஸாகவே இயக்கி உள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.

லெஜண்ட் சரவணன், பாயல் ராஜ்புத், சந்தோஷ் பிரதாப், ஷாம், ஆண்ட்ரியா, லால், குழந்தை நட்சத்திரம் இயல் என அனைவரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பாத்திரங்களை ஏற்று கனகச்சிதமாக நடித்துள்ளனர். மேலும், விடிவி கணேஷ், அறந்தாங்கி நிஷா, ஐஸ்வர்யா உள்ளிட்டோரும் படத்தில் கொடுத்த வேலையை சரியாக செய்துள்ளனர்.

 
Leader Review in Tamil  Legend Saravana s family emoton packaged spy thriller is a big surprise
Photo Credit:

லெஜண்ட் திரைப்படத்தைத் தொடர்ந்து லெஜண்ட் சரவணா நடித்துள்ள லீடர் திரைப்படம் கண்டிப்பாக ஜெயிலர், விக்ரம், லியோ படங்களுக்கு இணையாக இருக்கும் என ஆடியோ லாஞ்சில் லெஜண்ட் சரவணா சொல்லியிருந்த நிலையில், அவர் சொன்ன அளவுக்கு படம் இருந்ததா? இல்லையா? என்பது குறித்த விரிவான விமர்சனத்தை இங்கே பார்க்கலாம்.

லீடர் படத்தின் கதை: தனது மகளுக்கே தான் அப்பா என சொல்ல முடியாத அளவுக்கு இக்கட்டான சூழ்நிலையில், மகளுடன் போலியாக அப்பா - மகளாக நடித்துக் கொண்டு மெக்கானிக் வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார் சக்திவேல் (லெஜண்ட் சரவணா). தூத்துக்குடி ஹார்பரையே அழிக்க திட்டமிட்டுள்ள டெவில் (சந்தோஷ் பிரதாப்) செயலை தடுக்கத் துடிக்கும் போலீஸ் அதிகாரியாக ஆண்ட்ரியா நடித்துள்ளார். புதிதாக எஸ்பியாக பதவியேற்றுள்ள ஷாம் நல்லவரா? கெட்டவரா? என்கிற கோணத்தில் அவரது கதாபாத்திரம் உள்ளது.

ஹீரோயின் பாயல் ராஜ்புத்தை லெஜண்ட் சரவணாவே சுட்டுக் கொன்றது ஏன்? மகளை காப்பாற்ற மட்டுமே போராடுகிறாரா? அவருடைய உண்மையான முகம் என்ன? தூத்துக்குடி துறைமுகத்தையே டெவில் அழித்து விட்டாரா? அதை ஹீரோ முறியடித்தாரா? இல்லையா? என்பது தான் இந்த லீடர் படத்தின் கதை.

 
Leader Review in Tamil  Legend Saravana s family emoton packaged spy thriller is a big surprise
Photo Credit:

படம் எப்படி இருக்கு?: கோலிவுட்டின் துரந்தர் என்று சொல்லும் அளவுக்கு ஒரு பக்காவான ஸ்பை த்ரில்லர் படத்தை லெஜண்ட் சரவணாவை வைத்து கொடுத்ததற்கே இயக்குநர் துரை செந்தில்குமாரை பாராட்ட வேண்டும். ரஜினிகாந்த், விஜய், அஜித் போன்ற டாப் ஹீரோக்கள் நடித்தால் கண்டிப்பாக பெரிய பாக்ஸ் ஆபீஸ் சாதனை படமாக மாறக்கூடிய கதையை தன்னை நம்ப் வந்த லெஜண்ட் சரவணாவுக்கு கொடுத்து அந்த படத்தை கடைசி வரை அனைத்து ரசிகர்களும் எங்கேயும் சலிப்புத் தட்டாமல், சுவாரஸ்யம் குறையாமல், ஏகப்பட்ட ட்விஸ்ட்டுகளை வைத்து கிளைமேக்ஸ் வரை சர்ப்ரைஸ் வைத்து ஒரு டாம் க்ரூஸின் மிஷன் இம்பாசிபிள் படத்தை பார்ப்பது போன்ற உணர்வை தனது எழுத்திலும் இயக்கத்திலும் துரை செந்தில்குமார் கொடுத்துள்ளார்.

முதல் படத்தை விட நடிகராக பக்கவாக மாறிவிட்டார் லெஜண்ட் சரவணா என்று தான் சொல்ல வேண்டும். ஜெயிலர், விக்ரம், லியோ போன்ற படங்களுக்கு கொஞ்சமும் குறையாத அளவுக்கான ஒரு திரைக்கதையை லெஜண்ட் சரவணாவை வைத்து இயக்கி படத்தை தியேட்டருக்கு எந்தவொரு எதிர்பார்ப்பும் இன்றி பார்க்கச் சென்றவர்களுக்கு செம சர்ப்ரைஸ் விருந்து காத்திருக்கிறது.

பிளஸ்: ஜிப்ரானின் பின்னணி இசை படத்துக்கு மிகப்பெரிய பலம். பரபரப்பு கொஞ்சம் கூட குறையாமல், படம் ஆரம்பித்ததில் இருந்து கடைசி வரை ஜெட் வேகத்தில் சென்ற அளவுக்கு இருந்த ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங் படத்தை தூக்கி நிறுத்தியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். பாயல் ராஜ்புத் கதாபாத்திரம், சந்தோஷ் பிரதாப் கதாபாத்திர ட்விஸ்ட்டுகள், ஆண்ட்ரியா, ஷாம் உள்ளிட்டோரின் பங்களிப்பு, 2ம் பாதியில் அந்த வெளிநாட்டில் மாணவர்களை காப்பாற்றும் காட்சிகள் எல்லாமே படத்திற்கு மிகப்பெரிய பலம். குழந்தை நட்சத்திரம் இயல் செம க்யூட்டாக நடித்து கடைசி வரை படத்தை பார்க்க வைக்கிறார்.

மைனஸ்: ஆரம்பத்தில் கொஞ்சம் தெறி படத்தை பார்த்ததை போலவும், ஏற்கனவே பார்த்து பழக்கப்பட்ட பல டாப் நடிகர்களின் படங்களை போலவும் இருந்தது மைனஸ். அறந்தாங்கி நிஷா, விடிவி கணேஷ் போர்ஷன் எல்லாம் காமெடிக்கு பெரிதாக கைகொடுக்கவில்லை. கிளைமேக்ஸில் அடுத்தடுத்து அடுத்து வரும் சில ட்விஸ்ட்டுகளும் சில சிக்கல்களை திரைக்கதைக்கு கொடுக்கிறது. ஆனால், ஒட்டுமொத்தமாக ஒரு பக்கா பேக்கேஜ் ஆக்‌ஷன் என்டர்டெயின்மெண்ட் ஸ்பை த்ரில்லர் படமாக லீடர் லீடு செய்கிறது!

Nema komentara