Kaalidas 2 Review: காளிதாஸ் 2 விமர்சனம்.

buzzhy avatar   
buzzhy
படத்தின் கதையை பொறுத்தவரையில் ஒரு அப்பார்ட்மெண்டில் ஒரு குழந்தை காணாமல் போகிறது. அது தொடர்பாக காவல் அதிகாரிகளான பரத் மற்றும் பவானி ஸ்ரீ இணைந்து அந்த வழக்கை விசாரிக்கிறார்கள். ஆனால் குழந்தையை கண்டுபிடி..
Rating:
2.5/5

சென்னை: இயக்குநர் ஸ்ரீ செந்தில் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் காளிதாஸ் 2. பரத், பவானி ஸ்ரீ, சங்கீதா, பிரகாஷ்ராஜ், கிஷோர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்திற்கு சாம் CS இசையமைத்துள்ளார். படத்தை ஃபைவ் ஸ்டார் செந்தில் மற்றும் யோகேந்திரன் என இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர். முழுக்க முழுக்க போலீஸ் இன்வெஸ்டிகேஷன் படமாக உருவாகி உள்ள இந்த படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம்.

படத்தின் கதையை பொறுத்தவரையில் ஒரு அப்பார்ட்மெண்டில் ஒரு குழந்தை காணாமல் போகிறது. அது தொடர்பாக காவல் அதிகாரிகளான பரத் மற்றும் பவானி ஸ்ரீ இணைந்து அந்த வழக்கை விசாரிக்கிறார்கள். ஆனால் குழந்தையை கண்டுபிடிப்பதற்குள் குழந்தை கொல்லப்படுகிறது. இந்த குழந்தையைக் கொன்றவர்கள் யார் என்ற கேள்வி பலருக்கும் இருக்கும்போது, அந்த அப்பார்ட்மெண்டில் மேலும் ஒரு கொலை நடைபெறுகிறது. இந்த கொலைகளை எல்லாம் செய்தது அந்த அப்பார்ட்மெண்டில் இருக்கும் ஒரு இளைஞர் என்ற சந்தேகம் வருகிறது. குற்றவாளியை நெருங்கிப் போகும்போது மீண்டும் ஒரு கொலை நடக்கிறது. இறுதியாக இந்த கொலைகளை செய்தது எல்லாம் யார் அதற்கு காரணம் என்பது தான் படத்தின் மீதிக் கதை.

 
Kaalidas 2 Review  Bharath   s Police Thriller Struggles With Slow Screenplay but Delivers a Strong Climax

திரைக்கதை: ஒரு த்ரில்லிங்கான சஸ்பென்ஸிவான போலீஸ் ஸ்டோரியைக் கொடுக்க இந்த கதை போதுமானது தான் என்றாலும், படத்தின் திரைக்கதையில் ரசிகர்களின் பொறுமையைச் சோதித்து விட்டார் திரைக்கதை ஆசிரியர் அரவிந்த் ஆனந்த். முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகை சங்கீதா நடித்திருக்கும்போதே கிளைமாக்ஸ் இதுவாகத்தான் இருக்கும் என்று பலரும் யோசித்து இருந்தாலும், க்ளைமாக்ஸில் வைத்த சஸ்பென்ஸ் மிகவும் அருமை. இன்னும் சொல்லப்போனால் ஒரு சஸ்பென்ஸிவ் இன்வெஸ்டிகேஷன் படம் பார்த்த திருப்தியைக் கொடுத்தாலும், திரைக்கதை நகர்வில் அரவிந்த் ஆனந்த் சோதித்த பொறுமையை சமாளித்து திருப்தி கொள்ளும் அளவுக்கு இல்லை.

ப்ரத்: படத்தின் பின்னணி இசையில் முதல் காட்சியில் இருந்தே சாம் CS மிரட்டி விட்டுட்டார். சில காட்சிகளில் எல்லாம் இந்த காட்சிக்கு இந்த அளவுக்கு பின்னணி இசை தேவையா என்று எல்லாம் யோசிக்க வைக்கும் அளவுக்கு, தனது தொழிலுக்கு உண்மையாக இருந்துள்ளார். படத்தின் முதல் காட்சியில் இருந்து, ப்ரீ க்ளைமாக்ஸ் காட்சி வரை ஆடியன்ஸைப் போலவே பரத் வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டு இருக்கிறார். ஆடியன்ஸ் அமர்ந்து கொண்டு பார்க்கிறார்கள் என்றால், பரத் நடந்து கொண்டும், அவ்வப்போது படுத்துக் கொண்டும் பார்த்துக் கொண்டிருந்தார். ப்ரீ கிளைமாக்ஸில் இருந்துதான் பரத் படத்தின் கதையை நகர்த்திக் கொண்டு போகும் கதாபாத்திரமாக இருக்கிறார்.

 
Kaalidas 2 Review  Bharath   s Police Thriller Struggles With Slow Screenplay but Delivers a Strong Climax

மொத்ததில் படம் எப்படி?: படத்தின் மைனஸ் என்றால் பரத்தின் கதாபாத்திரத்தை மிகவும் வலுவாக அமைக்காததும், திரைக்கதையை இன்னும் ஷார்ப்பாக அமைக்காததுதான். அதேபோல் பிளஸ் என்றால் பரத்தின் நடிப்பு, அதுவும் எல்லா திறமைகளும் இருந்தும் காவல்துறையில் இருக்க கூடிய காவலர்கள் அதையும் மீறி எப்படி எல்லாம் செயல்பட முயற்சிக்கிறார்கள் என்ற அழுத்தத்தை வெளிப்படுத்தி அனைத்து காட்சிகளையும் அவர் அணுகியது சிறப்பு, சாம் CS இசை, சுரேஷ் பாலாவின் ஒளிப்பதிவு சிறப்பு. புவன் ஸ்ரீனிவாசனின் எடிட்டிங் படத்திற்கு பலம். மொத்தத்தில் திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தி இருந்தால் ஒரு பிளாக்பஸ்டர் படமாகவே வந்திருக்கும்.

Walang nakitang komento