Hotspot 2 Much Review: ஹாட்ஸ்பாட் 2 மச் விமர்சனம்.

buzzhy avatar   
buzzhy
இந்த படத்தை விஷ்ணு விஷால் தயாரித்துள்ளார். ஆனால், 2ம் பாகம் எந்தளவுக்கு கனெக்ட் ஆகிறது, திரைக்கதை எந்தளவுக்கு சுவாரஸ்யமாக உள்ளது என்பது குறித்த விரிவான விமர்சனத்தை இங்கே பார்க்கலாம் வாங்க....
Rating:
2.5/5
Star Cast: அஸ்வின் குமார், பிரியா பவானி சங்கர்
Director: விக்னேஷ் கார்த்திக்

சென்னை: ஹாட்ஸ்பாட் படத்தை இயக்கி விமர்சகர்களின் பாராட்டுக்களை அள்ளிய விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் அடுத்து உருவாகியுள்ள படம் தான் ஹாட்ஸ்பாட் 2 மச். பிரியா பவானி சங்கர், ஆதித்யா பாஸ்கர், ரக்‌ஷன் விஜே, தம்பி ராமைய்யா, எம்.எஸ். பாஸ்கர், பவானி ஸ்ரீ, அஸ்வின் உள்ளிட்ட பலர் நடிப்பில் இந்த படத்தையும் முதல் பாகத்தை போலவே வித்தியாசமான விஷயங்களையும் சமூகத்துக்கு தேவையான அம்சங்களையும் கொண்டு விக்னேஷ் கார்த்திக் இயக்கியுள்ளார்.

இந்த படத்தை விஷ்ணு விஷால் தயாரித்துள்ளார். ஆனால், 2ம் பாகம் எந்தளவுக்கு கனெக்ட் ஆகிறது, திரைக்கதை எந்தளவுக்கு சுவாரஸ்யமாக உள்ளது என்பது குறித்த விரிவான விமர்சனத்தை இங்கே பார்க்கலாம் வாங்க..

 
Hotspot 2 Much Review in Tamil  Vignesh Karthik new idea works partially
Photo Credit:

ஹாட்ஸ்பாட் 2 மச் கதை: பல சிறு சிறு கதைகளை ஆந்தாலஜி பாணியில் தான் ஹாட்ஸ்பாட் படத்தையே இயக்கி இருந்தார் விக்னேஷ் கார்த்திக். இந்த படத்தில் அதிக அடல்ட் கன்டென்ட் எடுத்துக் கொள்ளாமல், 3 கதைகளை தொட்டு படமாக்கியுள்ளார். இந்த முறை விக்னேஷ் கார்த்திக்கு பதிலாக பிரியா பவானி சங்கர் வந்து தயாரிப்பாளரிடம் கதை சொல்கிறார்.

அதில், முதல் கதை இரண்டு பெரிய நடிகர்களின் ரசிகர்கள் போட்டுக் கொள்ளும் சண்டை தான். அந்த நடிகர்களின் பெயரை குறிப்பிடவில்லை என்றாலும், அடையாளங்கள் மூலம் தெள்ளத் தெளிவாக விஜய் மற்றும் அஜித்தை தான் குறிப்பிட்டு இயக்குநர் முதல் கதையை நீட்டி முழக்கி கொடுத்துள்ளார்.

அந்த கதையை தொடர்ந்து தம்பி ராமைய்யா, சஞ்சனா திவாரியின் ஆடை சுதந்திரம் கதை பல முக்கியமான விஷயங்களை போல்டாக எடுத்து பேசுகிறது.

கடைசியாக நிகழ்காலத்தில் இருந்து அஸ்வின் எதிர்காலத்தில் உள்ள பவானிஸ்ரீக்கு போன் போட்டு பேசி காதல் வளர்க்கும் கதை என 3 கதைகளை ஒன்றாக சேர்த்து இந்த ஹாட்ஸ்பாட் 2 மச் படத்தை உருவாக்கி உள்ளார்.

படம் எப்படி இருக்கு?: ரசிகர்கள் சண்டை கதையை எடுத்துக் கொண்டது சமூகத்துக்கும் சமூக வலைதளங்களில் ரசிகர்களாக இளைஞர்கள் கெட்டு சீரழிவதை கலாய்த்து அவர்களுக்கு அட்வைஸ் பண்ணும் கதையாக அமைந்துள்ளது. ரக்‌ஷன் மற்றும் ஆதித்யா பாஸ்கர் நடித்துள்ள அந்த கதையில், கடைசியாக எம்.எஸ். பாஸ்கரை வைத்து பண்ண சம்பவம் சிறப்பான ஒன்று.

ஆனால், அந்த முதல் கதை ரொம்பவே சுவாரஸ்யம் இல்லாமல், லெந்தாக சென்றது ஹாட்ஸ்பாட் 2 மச் படத்தை எதிர்பார்த்து வந்த ரசிகர்களை ரொம்பவே ஏமாற்றி விடுகிறது. அடுத்தடுத்த கதைகளும் ஃபிரெஷ்ஷாக இருந்தாலும், ஸ்க்ரீனில் பெரிதாக தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

கடைசியாக வரும் எதிர்கால காதல் கதை கடந்த ஆண்டு வெளியான ஹவுஸ்மேட் படத்தை பார்த்த உணர்வையே மீண்டும் தருவது மைனஸ் ஆக மாறியுள்ளது.

பிளஸ்: வழக்கமான கமர்ஷியல் படங்களை கொடுக்காமல், அதில் சமூக அக்கறையை சேர்த்து புதிய கதைகளை புதுமையாக சொல்ல விக்னேஷ் கார்த்திக் மெனக்கெடுவது தெளிவாக தெரிகிறது. ஆனால், அதை இன்னமும் சிறப்பாக செய்தால், படங்கள் வெற்றியடைய நிறைய வாய்ப்பு இருக்கு. படத்தில் நடித்த அனைத்து நடிகர்களும் கொடுத்த வேலையை போதுமான அளவுக்கு செய்துள்ளனர். ஆனால், அவுட் ஆஃப் பவுண்டரிக்கு சென்று அந்த கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்திருந்தால் மேலும், சிறப்பாக இருந்திருக்கும்.

மைனஸ்: ஹாட்ஸ்பாட் படத்தில் இருந்த அந்த த்ரில்லிங்கான எக்ஸ்பீரியன்ஸ் மற்றும் போல்ட்டான விஷயங்கள் இந்த படத்தில் இல்லை என்பதே பெரிய மைனஸ் ஆக உள்ளது. தணிக்கைக்காக பல இடங்களில் சமரசம் செய்துக் கொண்டு தான் காட்சிகளையே உருவாக்கினோம் என்று டைரக்டரும் பேட்டியளித்துள்ளார். ஆனால், படமாக பார்க்கும் போது ரசிகர்களை பாதிக்க வேண்டிய விஷயங்கள் பாதி அளவுக்கே பாதிப்பை கடத்துவது தான் படத்திற்கு பெரிய பலவீனமாக உள்ளது. வித்தியாசமான படங்களை விரும்பி பார்க்கும் ரசிகர்கள் இந்த படத்தை தாராளமாக ட்ரை பண்ணலாம்.

Walang nakitang komento