Avanti il prossimo

Dhurandar | Tamil Dubbed Movie

26 Visualizzazioni· 31/01/26
movies4u
movies4u
Iscritti
0

⁣An underworld saga following a network of criminals,
informants and operatives whose lives intersect, navigating covert

operations, espionage and betrayals.


⁣துரந்தர் என்பது 2025ஆம் ஆண்டின் இறுதியில் இந்தி மொழியில்
வெளியான திரைப்படமாகும். இப்படத்தின் இயக்குநர், திரைக்கதை, இணை
தயாரிப்பாளர் ஆதித்தியா தார் ஆவார். இத்திரைப்படம் இந்திய உளவாளி
பாகிஸ்தானில் நடத்தும் உளவு வேலைகளை மையமாகக் கொண்ட மயிர்க்கூச்செறியும்
அதிரடித் திரைப்படம் ஆகும்.
ஜோதி தேஷ்பாண்டேவின் ஜியோ ஸ்டூடியோஸ்,
ஆதித்தியா மற்றும் லோகேஷ் தாரின் பி62 ஸ்டூடியோஸ் இப்படத்தின் தயாரிப்புப்
பணிகளை மேற்கொண்டது. இப்படத்தின் முக்கிய நடிகர்கள் ரன்வீர் சிங், அக்சய்
கண்ணா, சஞ்சய் தத், மாதவன், அர்ஜூன் ராம்பால், சாரா அர்ஜுன் மற்றும் ரகேஷ்
பேடி ஆவார். துணை நடிகர்களாக மானவ் கோகில், தானிஷ் பண்டோர், சௌமியா
தாண்டன், கௌரவ் கெரே மற்றும் நவீன் கௌசி நடித்துள்ளனர். இரண்டு பாகங்கள்
கொண்ட துரந்தர் திரைப்படத்தின் முதல் பாகம், ஒரு இந்திய இரகசிய உளவாளி
பாகிஸ்தான் நாட்டின் கராச்சி நகரத்தில் குற்றவியல் மற்றும் அரசியல் பாதாள
உலகிற்குள் ஊடுருவி ஒரு பத்தாண்டுகளாக இந்திய உளவு நடவடிக்கையை
மேற்கொள்கிறார்.
இப்படத்தின் ஒளிப்பதிவு வேலைகள் சூலை 2024 முதல் அக்டோபர் 2025 முடிய
தாய்லாந்து, பஞ்சாப், மும்பை, லடாக் மற்றும் இமாச்சலப் பிரதேசம் பகுதிகளில்
நடைபெற்றது. இப்படத்தின் இசை அமைப்பாளர் சஸ்வத் சச்தேவ், ஒளிப்பதிவு
விகாஷ் நவ்லகா மற்றும் படத்தொகுப்பை சிவகுமார் வி. பணிக்கர் செய்துள்ளனர்.

Mostra di più

 0 Commenti sort   Ordina per


Avanti il prossimo