اگلا

உன் கெண்டக்காலு தெரியுதடி 4K 60FPS HD Video Song | Un Kendakaalu Theriyuthadi | Karisakattu Poove

0 مناظر· 20/08/26
buzzhy
buzzhy
سبسکرائبرز
0
میں موسیقی

🎶 Un Kendakaalu is a melodious Tamil folk-style song from the movie Karisakattu Poove.

🎤 Sung beautifully by Mano and Swarnalatha, the song is loved for its expressive vocals and rural flavor.

🎼 Music composed by legendary Ilaiyaraaja gives the track a timeless folk melody feel.

✍️ Lyrics written by Kasthuri Raja beautifully capture village-style romance and emotion.

✨ A memorable Tamil folk melody cherished by music lovers.

👍 Like | 🔁 Share | 🔔 Subscribe for more Tamil folk & evergreen video songs.

🔖 Hashtags (Tags)

#UnKendakaalu
#KarisakattuPoove
#Mano
#Swarnalatha
#Ilaiyaraaja
#KasthuriRaja
#TamilFolkSongs
#EvergreenTamilSongs
#TamilCinema
#TamilMusic

🔑 Keywords (Comma-Separated)

Un Kendakaalu song, Un Kendakaalu video song, Karisakattu Poove songs, Mano Swarnalatha songs, Ilaiyaraaja folk songs, Kasthuri Raja lyrics songs, Tamil folk songs, evergreen Tamil songs, Tamil melody songs, Tamil cinema songs

Lyrics:
பாடகர்கள் : மனோ மற்றும் ஸ்வர்ணலதா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ஏ…..ஹே…..ஏ…..
பெண் : ஏ…….ஏ……ஏ……

ஆண் : உன் கெண்டக்காலு தெரியுதடி
சீல கட்ட இறக்கு
உன் சீல கட்ட இறக்கு
அத சுண்டி சுண்டி எட்டு வச்சா
மனசுக்குள்ள சுளுக்கு
என் மனசுக்குள்ள சுளுக்கு

பெண் : உன் நெத்தியில சுருண்ட முடி
மேல கொஞ்சம் ஒதுக்கு
அட மேல கொஞ்சம் ஒதுக்கு
அது சுத்தி சுத்தி பொரண்டு பொரண்டு
புடிக்க வைக்குது கிறுக்கு
மெல்ல புடிக்க வைக்குது கிறுக்கு

ஆண் : நீ வளைஞ்ச கேப்பதாளு
அடி புளிச்ச கம்பங் கூழு
பெண் : நான் இனிச்ச வேரு கரும்பு
என்ன கடிச்சு பாத்து விரும்பு

ஆண் : நீ வளைஞ்ச கேப்பதாளு
அடி புளிச்ச கம்மங் கூழு
பெண் : நான் இனிச்ச வேரு கரும்பு
என்ன கடிச்சு பாத்து விரும்பு

ஆண் : உன் கெண்டக்காலு தெரியுதடி
சீல கட்ட இறக்கு
உன் சீல கட்ட இறக்கு
பெண் : உன் நெத்தியில சுருண்ட முடி
மேல கொஞ்சம் ஒதுக்கு
அட மேல கொஞ்சம் ஒதுக்கு

பெண் : ஊசி குள்ள நுலைஞ்சிகிட்ட
நூல போல மாட்டிகிட்டேன்
ஆசையில அறிவுகெட்டு அகபட்டுட்டேன்
ஆண் : நான் நிமித்தி காட்டுறேன் தோளு
உன் வயசுக்கு ஏத்துறேன் பாலு
பெண் : நீ முறுக்கி சுத்தின நூலு
என்ன வளைச்சி கட்டுற ஆளு

ஆண் : பாசி புடிச்ச பழைய தண்ணிய
பதுக்கிவைக்கிற கொளத்துலதான்
தாமரைப்பூ வளர்ந்திருக்கு தெரிஞ்சுக்கடி
பெண் : நீ வரிஞ்சு கட்டுற வேட்டி
உன் ஆம்பளதனத்த காட்டி
ஆண் : நான் நெனப்பு தட்டுறேன் கூட்டி
அது பறக்குது கொடி காட்டி

பெண் : தெனமும் நாராக நாராக ஏங்கல
மனசும் நாளாக நாளாக தூங்கல
ஆண் : எனக்கும் பைத்தியம்தான் புடிச்சிருக்கு
பெண் : ஹையோ ……
ஆண் : உனக்கு வைத்தியம்தான் தெரிஞ்சிருக்கு

பெண் : நான் அரச்ச சந்தன கொழம்பு
என்ன வாசனை புடிச்சு பொழங்கு
ஆண் : நான் இறுக்கி புடிச்ச உடும்பு
என் அணைப்புக்குள்ள நீ அடங்கு

பெண் : உன் நெத்தியில சுருண்ட முடி
மேல கொஞ்சம் ஒதுக்கு
ஆண் : யம்மா
பெண் : அட மேல கொஞ்சம் ஒதுக்கு
ஆண் : உன் கெண்டக்காலு தெரியுதடி
சீல கட்ட இறக்கு
உன் சீல கட்ட இறக்கு

பெண் : வேரு முத்தி வெளஞ்ச கடலை
நெலத்துக்குள்ள மறஞ்சிருக்கு
ஆசை முத்தி மனசுக்குள்ள
நெறஞ்சிருக்கு
ஆண் : நீ பழுத்த வாழ தாரு
உன்ன பழுக்க வச்சது யாரு
பெண் : நீ வடிச்ச நெல்லு சோறு
உன்ன கொலைய வச்சது யாரு

ஆண் : தோலு முத்தி பழுத்த பழம்
ரகசியமா கனிஞ்சிருக்கும்
வாசனைதான் வெளிய வந்து
ஆள வளைக்கும்
பெண் : நான் அவிச்சு கொட்டுன கெழங்கு
அட ஆறி போயிடும் முழுங்கு
ஆண் : நான் வெளஞ்சு முத்தின கருது
உன் நெனைப்பு என் பக்கம் வருது

பெண் : மெதுவா பாவாடை
காத்தோட போகுது
ஆண் : ஆத்தி
பெண் : எசவா உன் பார்வை
என் மேல தாவுது

ஆண் : உனக்கும் ஆசை வந்து
மோதி நின்னுகிச்சு
எனக்கும் காதல் வந்து
சேர்ந்து பத்திகிச்சு

பெண் : நீ இறுக்கி சுத்துற கயிறு
அட கலங்கி போகுது உசுரு
ஆண் : நீ மொளைச்சு நிக்கிற பயிறு
நல்ல இழுத்து கடைஞ்ச தயிரு

பெண் : உன் நெத்தியில சுருண்ட முடி
மேல கொஞ்சம் ஒதுக்கு
அட மேல கொஞ்சம் ஒதுக்கு
அது சுத்தி சுத்தி பொரண்டு பொரண்டு
புடிக்க வைக்குது கிறுக்கு
மெல்ல புடிக்க வைக்குது கிறுக்கு

ஆண் : உன் கெண்டக்காலு தெரியுதடி
சீல கட்ட இறக்கு
உன் சீல கட்ட இறக்கு
அத சுண்டி சுண்டி எட்டு வச்சா
மனசுக்குள்ள சுளுக்கு
என் மனசுக்குள்ள சுளுக்கு

பெண் : நான் இனிச்ச வேரு கரும்பு
என்ன கடிச்சு பாத்து விரும்பு
ஆண் : நீ வளைஞ்ச கேப்பதாளு
அடி புளிச்ச கம்மங் கூழு

பெண் : …………………………
ஆண் : ……………………

مزید دکھائیں

 0 تبصرے sort   ترتیب دیں


اگلا