Con City Review: ’கான் சிட்டி’ விமர்சனம்.. அர்ஜுன் தாஸின் நூதன மோசடி கை கொடுத்ததா?..

buzzhy avatar   
buzzhy
யோகி பாபு ஹீரோவாக வேண்டும் என நினைக்க, அவருடைய அம்மாவாக வரும் வடிவுக்கரசிக்கு உடல் நலம் சரியில்லை என டொனேஷன் பெற அதற்கு பிறகு அவங்க ரெண்டு பேரும் சேர்த்து செய்யும் ஸ்கேமும் சமூகத்தில் நாள் தோறும் அரங்..
Rating:
3.5/5
Star Cast: அர்ஜுன் தாஸ், அன்னா பென்
Director: ஹரிஷ் துரைராஜ்

 

சென்னை: பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ், அன்னா பென், யோகி பாபு, வடிவுக்கரசி, ராதா ரவி, விடிவி கணேஷ், அருள் தாஸ், இமான் அண்ணாச்சி உள்ளிட்ட பலர் நடிப்பில் ஜூன் 26ம் தேதி வெளியாக காத்திருக்கும் படம் தான் 'கான் சிட்டி' (Con City).

 

ஏமாற்றாதே.. ஏமாறாதே.. என்கிற அடிப்படை தத்துவத்தை வைத்து தான் இந்த படத்தை அட்டகாசமாக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் உருவாக்கியுள்ளார். சதுரங்க வேட்டையில் தொடங்கி ஸ்கேம் 1992, லக்கி பாஸ்கர் என பல படங்கள் மோசடி கதைகளை கையில் எடுத்து ரசிகர்களை வியப்பின் உச்சிக்கே கொண்டு சென்று வெற்றிப் பெற்ற நிலையில், அதே பாணியில் ஒரு படத்தை கொடுத்திருக்கிறார் ஹரிஷ் துரைராஜ்.

 
Con City Review in Tamil  Arjun Das and Anna Benn starrer Scam Movie is a laughable and relatable

வில்லனாகவும் நெகட்டிவ் கதாபாத்திரங்களில் அதிகம் மிரட்டிய அர்ஜுன் தாஸ், நெகட்டிவ் ஷேட் கொண்ட ஹீரோவாக இந்த படத்தில் செம சிக்சர் அடித்துள்ளார். படத்தில் நடித்த ஒவ்வொரு கதாபாத்திரங்களும் தங்களின் முழு பலத்தை கிடைக்கிற கேப்பில் எல்லாம் காட்டியுள்ளனர். சரி, படத்தின் கதை, பிளஸ், மைனஸ் உள்ளிட்ட முழுமையான விமர்சனங்களை இங்கே பார்க்கலாம் வாங்க..

கான் சிட்டி கதை: பக்கத்து ஸ்டேட்டில் ஹோட்டல் ஒன்றை நடத்தி வரும் சரவணன் (அர்ஜுன் தாஸ்), மித்ரா (அன்னா பென்) நடத்தி வருகின்றனர். அவர்களுடன் ஜானகி (வடிவுக்கரசி), ஜாக்கி (யோகி பாபு) உள்ளிட்டோரும் அந்த ஹோட்டலில் பணியாற்றுகின்றனர். மித்ராவின் மகனாக கோட் படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரம் அகிலன் நடித்துள்ளார். படத்தின் தொடக்கத்திலேயே பள்ளியில் இருந்து ஜீவாவை (அகிலன்) ஒருவர் கடத்திச் செல்கிறார். பள்ளியில் உள்ள சிசிடிவி மூலம் கடத்திச் சென்றது யார் என்பதை பார்த்த உடனே ஒட்டுமொத்த குடும்பமும் அதிர்ச்சி அடைகின்றனர்.

7 ஆண்டுகளுக்கு முன்னதாக அவர்கள் எல்லாம் யார்? அவர்கள் என்ன மாதிரியான மோசடிகளை செய்து வந்தனர். இப்போ அவர்களை குழந்தையை கடத்தி வைத்துக் கொண்டு மிரட்டுவது யார்? கடைசியில் மகனை காப்பாற்றினார்களா? இல்லையா? என்பது தான் இந்த கான் சிட்டி படத்தின் கதை.

 
Con City Review in Tamil  Arjun Das and Anna Benn starrer Scam Movie is a laughable and relatable

படம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயனின் டாக்டர், துல்கர் சல்மானின் லக்கி பாஸ்கர் என 2 படங்களை மிக்ஸ் செய்து எடுத்தால் எப்படி இருக்குமோ அப்படியொரு கதையாக படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குநர் ஹரிஷ் துரைராஜ். படத்திலேயே கொரியன் ஓல்டு பாய் படத்தின் ரெஃபரன்ஸ் வரும் இடமெல்லாம் தியேட்டரே பிளாஸ்ட் தான்.

கதை சில படங்களை நினைவுப் படுத்தினாலும், திரைக்கதையில் ஹரிஷ் துரைராஜ் விளையாண்டுள்ள விதம் தான் படத்தை கடைசி வரை ரசித்து, சிரிக்க பார்க்க வைக்கிறது. அர்ஜுன் தாஸ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போல மிமிக்ரி செய்யும் இடமும், அருகே இருக்கும் இபி அதிகாரி விடிவி கணேஷ் போல அவரிடமே மிமிக்ரி செய்யும் இடத்தில் செம ஸ்கோர் செய்கிறார்.

இபி அலுவலகத்தில் பணத்தை ஆட்டையைப் போடும் இடங்களில் எல்லாம் அவரது நடிப்பு கனகச்சிதமாக பொருந்தி போகிறது. அதே போல 2ம் பாதியில் குழந்தையை காப்பாற்ற அவர் போடும் டோல்கேட் ஸ்கேம் மற்றும் வாட்டர் கரன்ட் ஐடியா எல்லாம் அடிபொலி.

அர்ஜுன் தாஸ் தான் இப்படி ஃபிராடுத்தனம் பண்ணுகிறார் என்று பார்த்தால் நாயகியாக நடித்துள்ள அன்னா பென் அவர் எந்த விஷயத்தில் ஏமாந்தாரோ அதையே தனது பிசினஸாக மாற்றி காசு சம்பாதிக்கும் இடத்தில் எல்லாம் தனது மெச்சூரிட்டியான நடிப்பு மூலம் கொட்டுக்காளி நடிகை தூள் கிளப்புகிறார்.

 
Con City Review in Tamil  Arjun Das and Anna Benn starrer Scam Movie is a laughable and relatable

யோகி பாபு ஹீரோவாக வேண்டும் என நினைக்க, அவருடைய அம்மாவாக வரும் வடிவுக்கரசிக்கு உடல் நலம் சரியில்லை என டொனேஷன் பெற அதற்கு பிறகு அவங்க ரெண்டு பேரும் சேர்த்து செய்யும் ஸ்கேமும் சமூகத்தில் நாள் தோறும் அரங்கேறிக் கொண்டு தான் இருக்கின்றன. இப்படியெல்லாம் ஸ்கேம் நடக்குமா? என்று நினைத்தால் அவர்கள் தான் முட்டாள்கள். குயிக் மணி என்கிற பெயரில் ஏகப்பட்ட ஸ்கேம்கள் இதை விட ஃபேமிலிசு ரேஞ்சுக்கு அரங்கேறிக் கொண்டு தான் வருகின்றன.

மனிதர்களின் பேராசை மற்றும் பணத்தாசை அவர்களை எந்தளவுக்கு சிக்கலில் கொண்டு வந்து விடும் என்றும் ஏமாற்றுவதும், ஏமாறுவதும் தவறு என்கிற தத்துவத்தை முடிந்த வரை கலகலப்பான திரைக்கதையுடன் யோகி பாபு மற்றும் விடிவி கணேஷின் காமெடி காட்சிகள் மூலம் கடத்தியிருப்பது டைரக்டரின் புத்திசாலித்தனத்தையே காட்டுகிறது.

 
Con City Review in Tamil  Arjun Das and Anna Benn starrer Scam Movie is a laughable and relatable

பிளஸ்: அர்ஜுன் தாஸ், அன்னா பென், விடிவி கணேஷ், யோகி பாபு, வடிவுக்கரசியின் டார்க் டைமிங் காமெடி காட்சிகள் என நடிகர்களின் நடிப்பு படத்துக்கு பெரிய பலமாக உள்ளது. பின்னணி இசை மற்றும் பழைய பாடல் பாணியில் "ஏமாறாதே.. ஏமாற்றாதே" என கிளைமேக்ஸில் வரும் பாடல் மூலம் படத்துக்கு பெரிய பலமாக மாறியுள்ளார் இசையமைப்பாளர் ஷான் ரோல்டன். வில்லனாக வரும் பல்ப் அடி கல்யாண சுந்தரம் (நந்தகோபால்) போலீஸ்காரரின் நடிப்பும் அவரது காட்சிகளும் படத்துக்கு புதுசாகவும் நம்பும்படியுமாக இருந்தது.

இன்றைய தேதியில் எந்த விஷயத்தை சொன்னாலும், போர் அடிக்காமல் நகைச்சுவை காட்சிகள் நிறைந்து தியேட்டருக்கு வரும் ரசிகர்களை திருப்திப்படுத்தினால் மட்டுமே கல்லா கட்ட முடியும் என்பதை அறிந்து இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் கிராஃப்ட்டிலும் கமர்ஷியலிலும் காட்டியுள்ள கெட்டிக்காரத்தனம் காரணமாக இந்த வாரம் தமிழ் சினிமாவுக்கு ஒரு பாக்ஸ் ஆபீஸ் வெற்றிப் படமாக கான் சிட்டி மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மைனஸ்: ஏற்கனவே பார்த்த சில படங்களின் சாயல்கள் சில இடங்களில் தெரிவதும், இந்த காட்சி இப்படித்தான் நகரும் என்பது ஏற்கனவே தெரிந்து விடும் சூழலில் குறையும் சுவாரஸ்யங்கள் உள்ளிட்டவை படத்துக்கு மைனஸ் ஆக மாறியுள்ளன. ஆனால், அதையெல்லாம் மறக்கடிக்கும் விதமாக திரைக்கதையும் நடிகர்களின் நடிப்பும் திடீரென வரும் குபீர் காமெடி காட்சிகளும் கண்டிப்பாக தியேட்டருக்குச் செல்லும் உங்களை சிரிக்க வைத்து திருப்திகரமாகவே வழியனுப்பும் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை.

Hiçbir yorum bulunamadı