Dridam (2026 Malayalam) | கொலையாளி யார்?

buzzhy avatar   
buzzhy
மீண்டும் ஒரு காவல்துறை கதை படம் Dridam.

Dridam

இடுக்கி மாவட்டத்தில், ஓர் கிராமத்தில் உள்ள காவல்நிலையத்தில் SI யாக பதவி ஏற்கிறார் விஜய்.

அதுவரை குற்றங்களே அதிகம் இல்லாத அந்த இடத்தில் கொலை, கொள்ளை என்று தொடர, விஜய்க்கு மேலிடத்து அழுத்தத்தால் நெருக்கடி ஏற்படுகிறது.

அதை விஜய் கடந்தாரா? குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டனரா? என்ன ஆனது என்பதே Dridam.

அமைதியான காவல்நிலையம்

குற்றங்களே அதிகம் நடைபெறாததால், இப்பகுதி காவல்நிலையத்துக்கு SI (Sub Inspector) நீண்ட நாட்களுக்கு பிறகே நியமிக்கப்படுகிறார்.

காவல்நிலையம் இருக்கும் இடமும் மிக அமைதியாகவும், இயற்கை சூழ்ந்தும் உள்ளது. இது போன்ற இடத்தில் பணி கிடைப்பதே அதிர்ஷ்டம்.

சிறு வயதாக விஜய் இருந்தாலும், பதவியின் காரணமாக அங்குள்ளவர்கள் மிகுந்த மரியாதையோடும், அவருக்கு உதவியாகவும் நடந்து கொள்கின்றனர்.

அதிலும் மூத்த காவல்துறை (Assistant of SI) நபராக வரும் கிருஷ்ணன், மிக உதவியாகவும், பொறுப்பாகவும், என்னென்ன பிரச்சனைகள் உள்ளன என்பதை மிக பக்குவமாக கூறுவார்

அமைதியாகச் செல்லும் பணியில் திடீரென்று கை மட்டும் தனியாகக் கிடைக்க, யார் கொல்லப்பட்டது என்ற விசாரணை துவங்குகிறது.

விசாரணை

மலையாளத்தில் மட்டும் எப்படி இவ்வளவு விசாரணை படங்கள் வருகிறது என்று வியப்பாக உள்ளது.

ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் தனித்துவமாக உள்ளது. முந்தைய படங்களை நினைவு படுத்துவதில்லை.

இப்படத்தில் விசாரணை ஆகச்சிறந்ததாக இல்லையென்றாலும், மோசமில்லை.

எந்தத்தடயமும் கிடைக்காமல், விஜய் திணறுவதும், மேல் அதிகாரிகளின் நெருக்கடியால் மன உளைச்சலுக்கு ஆளாவதும் இயல்பாக உள்ளது.

துவக்கத்தில் சாதாரணமாக இருக்கும், பயப்படும் விஜய், இறுதியில் அதிரடியாக மாறுவது, கதாப்பாத்திரமாக இல்லாமல் நாயகனாகத்தான் தெரிந்தார்.

விஜயாக நடித்துள்ள Shane Nigam முந்தைய படங்களில் Ishq ரொம்பப் பிடிக்கும்.

தமிழர்கள்

மலையாளத் திரையுலகினருக்குத் தமிழர்கள் மீது அப்படியென்ன கோபமோ தெரியவில்லை! எப்போதும் தமிழர்களை எதிர்மறையாகவே காண்பிக்கிறார்கள்.

நான் பார்க்கும் பெரும்பான்மை படங்களில் அவ்வாறு தான் உள்ளது. நானும் இதை பெரும்பாலான விமர்சனங்களில் கூறி வருகிறேன்.

பல நேரங்களில் கோபமாகவும் உள்ளது. வேறு மாநிலத்தவரைக் காண்பிக்க வாய்ப்பிருந்தும் தமிழர்கள் பக்கமே சுற்றுகிறார்கள்.

தமிழர்கள் என்றாலே, கந்து வட்டி, திருடன், ஏமாற்றுபவர், ரவுடி, கட்டப்பஞ்சாயத்து, கொலைகாரன் என்றே காண்பிக்கிறார்கள்.

சுருக்கமாக, வேற்று நாட்டினர் மலையாளப்படங்களை பார்த்தால், யார் தமிழன்? இவர்கள் மிக மோசமானவர்கள் போல! என்று நினைக்கும் அளவுக்கு உள்ளது.

ஒளிப்பதிவு பின்னணி இசை

கேரளா படமென்றாலே இயற்கைக்குப் பஞ்சம் இருக்காது. இப்படத்தில் கதையே கிராமத்தைச் சுற்றி என்பதால், அருமையாக உள்ளது.

பின்னணி இசையும் சிறப்பாக உள்ளது.

யார் பார்க்கலாம்?

இதுவொரு ஆகச்சிறந்த படம் அல்ல, பொழுது போகவில்லையென்றால் பார்க்கக் கூடிய படம்.

விசாரணை மற்றும் த்ரில்லர் படங்களை விரும்பிப்பார்ப்பவர்கள் பார்க்கலாம்.

இறுதி ட்விஸ்ட் பலரும் எதிர்பாராதது.

Jio Hotstar ல் காணலாம்.

irected by Martin Joseph
Written by Jomon John, Linto Devasia
Produced by Mukesh R. Mehta, C.V. Sarathi
Starring Shane Nigam
Cinematography P. M. Unnikrishnan
Edited by V. S. Vinayak
Music by Sreerag Saji
Release date 8 May 2026
Running time 128 minutes
Country India
Language Malayalam

No comments found