மனித உளவியல்
👇
* நாம் உண்மையில் இருப்பதை விட, கண்ணாடியில் பார்க்கும்போது 5 மடங்கு அழகாக தெரிகிறோம்.
* 99% பேர், "நான் உங்களிடம் ஒன்று கேட்கவேண்டும் " என்று யாராவது சொல்லும்போது பதற்றம் அடைகின்றனர். ( அப்போ நம்ம சப்ப பீசா) 😂
* ஒருவர் நம்மை பார்த்துக் கொண்டிருக்கிறார் என்பதை கண்டுபுடிக்க திடீரென உங்கள் கைக்கடிகாரத்தை பாருங்கள். ஒருவேளை அந்நபர் உங்களை பார்த்துக்கொண்டிருந்தார் என்றால் அவரும் தன்னையறியாமல் தன் கைக்கடிகாரத்தை பார்ப்பார்.
* பரீட்சைகள் நம்முடைய புத்திசாலித்தனத்தை சோதிப்பதில்லை. நம்முடைய நினைவாற்றலையே அளவிடுகிறது.
* போலியாக சிரிப்பது ஒருக்கட்டத்தில் நம்மை உண்மையிலேயே மகிழ்ச்சி அடைய வைக்கும்.
* நாம் பொய் பேசும்போது அதிகமாக கண்களை இமைக்கிறோம்.
* ஒரு ஆண் பெரும் வெற்றியை தழுவும்போது தனக்கு அதிகமான பெண் துணைகள் தேவை என்று எண்ணுகிறார். ஒரு பெண் பெரும் வெற்றியை அடையும்போது தனக்கு ஆண் துணையே தேவையில்லை என்று எண்ணுகிறார்.
*
* ஒருவர் தொடர்ந்து பேசவேண்டும் என்று நினைத்தால், அவரின் கண்களையே பாருங்கள். அவர் தொடர்ந்து பேசுவார்.
*
* 28 நாட்களுக்கு நம்மால் ஒரு விடயம் இல்லாமல் வாழமுடியுமென்றால் (உதா. மது, தொலைபேசி ), வாழ்நாள் முழுக்க 100% நம்மால் அது இல்லாமல் வாழமுடியும்.
*
* உளவியல் படி, ஒரு பெண்ணிடம் பொய் பேசுவதை தவிர்க்கவும். பெரும்பாலும், பெண்கள் உண்மையை தெரிந்து வைத்துக்கொண்டுதான் உங்களிடம் அதைப்பற்றியே கேட்பார்கள்.
*
* அதேநேரம் ஆண்களை விட அதிகமாக பொய் பேசுபவர்கள் பெண்களே, பொய்யை எளிதில் கண்டுபிடிக்கும் திறன் கொண்டதும் பெண்களே..
*
* நம்முடைய நெருங்கிய நண்பரை திருமணம் செய்வதன் மூலம் 70% விவாகரத்துக்கான வாய்ப்பை குறைக்கலாம்.
* ஆண்களை விட பெண்களே அதிக நகைச்சுவை மிக்கவர்கள். ஆனால், நெருக்கமானவரை தவிர வேறு யாரிடமும் அவர்கள் அதனை வெளிக்காட்டுவதில்லை.
*
* ஒருவரை முழுமையாக புரிந்துக்கொள்ள குறைந்தபட்சம் மூன்றிலிருந்து நான்கு ஆண்டுகள் தேவைப்படுகிறது.
*
* சமூக வலைத்தளங்களில் பார்த்துக் கொண்டவர்கள் நிஜத்தில் பார்த்துக்கொண்டவர்களை விட சீக்கிரமாக இணைந்துவிடுவார்கள்
* நாம் ஒரு பிரச்சனை பற்றி ஆழமாக சிந்தித்து கொண்டே தூங்கிவிட்டால், நம் மூளை அன்றிரவு முழுக்க இயங்கிக்கொண்டு தான் இருக்கும். மறுநாள் நாம் சோர்வாக விழிப்போம்.
*
* உலகத்தில் உள்ள கோடிஸ்வரர்களில் பெரும்பான்மையினர் அகநோக்குனர் (introvert) ஆவர்
* ஒரு சுற்றுலாவிற்கு செல்வதற்குமுன் ஒரு நல்ல வாசனை திராவியத்தை வாங்கி அந்த சுற்றுலாவின்போது அதை பயன்படுத்துங்கள். அடுத்தமுறை அந்த வாசனையை நுகரும்போது அந்த சுற்றுலாவின் ஞாபகம் வரும்
* நம்மால் ஒருவர் மீது ஒருமுறைதான் நம்பிக்கை வைக்க முடியும். அந்த நம்பிக்கையை அவர் உடைத்துவிட்டால், எவ்வளவு முயற்சித்தாலும் அதே அளவிலான நம்பிக்கையை மீண்டும் அவர்மேல் வைக்க இயலாது.
*
* "நீங்கள் எது வேண்டுமென்றாலும் செய்யலாம் " என்று சொல்லும்போது நாம் ஒன்றும் செய்வதறியாது விழிப்போம் . "நீங்கள் இதை மட்டும் செய்யக்கூடாது " என்று சொல்லும்போது நாம் அடுத்து என்ன செய்யவேண்டும் என்பதில் மிக தெளிவாக இருப்போம்
* ஆண்களுக்கு அதிகம் சிரிக்கும் பெண்களை பிடிக்கும் ஆனால் பெண்களுக்கு அதிகம் சிரிக்காத ஆண்களை பிடிக்கும்.
*
* ஒரு சராசரி மனிதர் ஏறக்குறைய 70000 விடயங்களை ஒரு நாளில் சிந்திக்கிறார்.
*
* அறிவாளிகள் என்றும் அவர்களை குறைத்து மதிப்பிடுவார்கள்.
*
* நகைச்சுவையை எளிதாக புரிந்துக்கொள்ளுபவரால், பிறருடைய சிந்தனையை அறிந்துகொள்ள முடியும்.