திராவிடக் கட்சிகளின் தமிழ் ஆர்வம்
திராவிடக் கட்சிகள் ஒரு காலத்தில் தமிழின் முக்கியத்துவத்துக்குப் போராடினார்கள். அரசியல் இருந்தாலும், ஒரு உண்மை இருந்தது.
காலப்போக்கில் அரசியலுக்கு மட்டுமே தமிழ் என்றாகி விட்டது.
தமிழின் வளர்ச்சிக்கோ, முக்கியத்துவத்துக்கோ, மேம்படுத்துவதற்கோ எந்த முயற்சிகளும் இல்லாமல் போனது.
தமிழில் கலந்த வட மொழி சொற்களுக்கு இணையான மாற்றுத் தமிழ் வார்த்தைகளைத் திராவிடக் கட்சிகள் முயற்சிக்கவில்லை.
திராவிடக்கட்சிகள் வந்த பிறகு வட மொழி சொற்கள் முன்புக்கு தற்போது குறைந்துள்ளது மட்டுமே ஆறுதல்.
இதற்கு எடுத்துக்காட்டாகக் கருப்பு வெள்ளை படங்களையும், தற்போதைய படங்களையும் கவனித்தால் புரிந்து கொள்ள முடியும்.
இணையான தமிழ் சொற்கள்
ஆங்கில சொற்களுக்கு இணையான தமிழ் சொற்களை பிரபலப்படுத்தாததால், இன்னமும் சில வார்த்தைகளுக்கு ஆங்கிலச் சொற்களையே பயன்படுத்த வேண்டிய நிலை.
எடுத்துக்காட்டுக்கு ஊடகம் என்ற வார்த்தை கடந்த வருடங்களில் தான் பிரபலமானது. இது போன்ற ஏராளமான வார்த்தைகளைப் புழக்கத்தில் கொண்டு வந்து இருக்க முடியும் ஆனால், செய்யவில்லை.
செய்தித்துறைக்கு என்று எந்தக் கட்டுப்பாடும், நெருக்கடியும் இல்லை.
எனவே, மக்களை எளிதில் சென்றடையும் இவர்களே தங்கிலீஷ் வார்த்தைகளைப் பயன்படுத்தி மக்களையும் இதற்கு பழக்கப்படுத்துகின்றனர்.
தமிழ் வளர்ச்சித்துறை என்றுள்ளது ஆனால், இந்த துறையால் என்ன பயன் என்று பட்டியலிட்டால் விரல் விட்டு எண்ணிவிடலாம்.
திராவிடக் கட்சிகள் தமிழை அரசியலுக்கு மட்டுமே பயன்படுத்துகின்றன, தமிழை வளர்க்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை.
சீமான்
முப்பாட்டன் முருகன் என்று வாய் அடிக்க மட்டுமே சீமானுக்கு முருகன் பயன்படுகிறார் ஆனால், முருகன் புகழுக்கு ஒரு பிரச்சனை என்றால் சீமான் எங்கே இருக்கிறார் என்றே தெரியாது.
கந்தசஷ்டி கவசத்தை கறுப்பர் கூட்டம் அசிங்கப்படுத்திய போது சீமான் வாயே திறக்கவில்லை.
முஸ்லீம் அமைப்புகள் தொடர்ந்து திருப்பரங்குன்றம் விளக்கு ஏற்றுவதில் பிரச்சனை செய்து வருகிறார்கள், வீம்புக்கு என்றே கோவிலில் ஆடு வெட்ட எடுத்து செல்கிறார்கள், சிக்கந்தர் மலை என்கிறார்கள்.
ஒரு சாரார் இது குறித்து Thiruparankundram Files என்று ஆவணப்படம் எடுத்து வரலாற்றை மாற்றும் அளவுக்கு முயன்றுள்ளார்கள்.
அரசியலுக்கு மட்டுமே முருகன்
ஆனால், இது போன்று கண் முன்னே நடக்கும் வரலாற்று திரிப்புக்கெல்லாம் வாய் திறக்காத, சிறு ஆதரவைக் கூட தெரிவிக்காத சீமான்,
முருகனை (War of God) பற்றி வெளிவர இருக்கும் தெலுங்கு படத்தில் வடக்கு கடவுளாக காண்பிக்கிறார்கள் என்று கொடி பிடித்துள்ளார்.
முருகனுக்கு தமிழகத்தில் அவமானம் ஏற்படும் போதெல்லாம் அமைதியாக இருந்து, தற்போது கொதிக்கும் சீமானுக்கு கேள்வி கேட்க அருகதை இல்லை.

சீமான் மட்டுமல்லாது, மாற்று மதத்தினர் கூட தற்போது முருகன் மீது கரிசனம் காண்பிக்கிறார்கள். எப்படி பாருங்க!
இதே நபர்கள் தான் இந்து மதத்தையும், கடவுளையும் இழிவு செய்வது ஆனால், தற்போது முருகன் மீது திடீரென்று பாசம் வந்து விட்டது.
இதையெல்லாம் பார்க்க எரிச்சல் ***** ஆக உள்ளது.
ஆனால், என்ன செய்வது சொரணையில்லாத தமிழக இந்துக்களால் அனைத்து அவமானங்களையும், நாடகங்களையும் கடந்து செல்ல வேண்டியதாக உள்ளது.