பழிக்குப் பழி வாங்குவது ஆளுமைக்கு அழகு அல்ல என்பதைப் பற்றி யோசிப்போம்!
கருப்பின மக்களின் காவலனாய் , கலங்கரை விளக்கமாய் விளங்கிய நெல்சன் மண்டேலா ஜனாதிபதியான பின் முதல்கட்ட பாதுகாப்புப் படையினரோடு உணவகம் ஒன்றில் உணவருந்த சென்றிருந்தார்.
அவரவர் விரும்பிய உணவை ஏற்பாடு செய்துக் கொண்டு அமர்ந்திருந்தார்கள்.
அப்போது மண்டேலா அமர்ந்திருந்த
எதிர் மேசை இருக்கை ஒன்றில்
ஒரு மனிதன் மட்டும் தனியாக அமர்ந்திருந்தார்.
உடனே நெல்சன் மண்டேலா
ஒரு படை வீரனை அனுப்பி
அந்த மனிதரை தங்களுடன்
வந்து ஒரே இருக்கையில் அமர்ந்து உணவருந்துமாறு சொன்னார்.
அந்த மனிதரும் வந்து அமர்ந்து உணவருந்தினார்.
பின்னர் அந்த மனிதர் சாப்பிட்டு முடித்தப் பிறகு புறப்பட்டுச் சென்றுவிட்டார்.
அப்போது அங்கிருந்த படைவீரன் ஒருவன் மண்டேலாவைப் பார்த்து அந்த மனிதன் சரியான நோயாளியைப் போல் தெரிகிறான்.
உண்ணும் போது அவரின் கை கால் எல்லாம் நடுங்கிக் கொண்டிருந்தன என்று கூறினான்.
அதற்கு மண்டேலா நீ சொல்வது தவறு.
முன்பு நான் சிறையில் இருந்தபோது இந்த மனிதர்தான் சிறை காவலராக இருந்தார்.
என்னை அடிக்கடி அவர் கொடுமைப்படுத்தும் போதெல்லாம்
நான் களைப்பாலும், தாகத்தாலும் குடிக்க தண்ணீர் கேட்பேன்.
அப்போது இந்த மனிதர் என் தலை மீது சிறுநீர் கழித்து விட்டுச் செல்வது வழக்கம்.
தென் ஆப்பிரிக்கா ஜனாதிபதியான என்னை இனம் கண்டு விட்டார்.
நான் இப்போது பதிலுக்குப் பதில் செய்வேன் என்று நடுங்கியிருப்பார் எனக் கூறினார்.
ஆனால் பழி வாங்குவது என்னுடைய பழக்கம் இல்லை.
பழிவாங்கும் மனநிலை ஒரு போதும் ஒரு தேசத்தையோ, தனி மனிதனையோ கட்டி எழுப்பாது.
அதேநேரம் சில நேரங்களில் சில காரியங்களுக்காக மனதில் தோன்றும் சகிப்புத்தன்மை பெரிய சாம்ராஜ்ஜியங்களை உருவாக்கும் என்றார் நெல்சன் மண்டேலா.
இவர்கள்தான் போற்றுதற்குரிய தலைவர்களாக மாறுகிறார்கள்.
'இன்னாச் செய்தாரை ஒறுத்தல் அவர் நாண
நன்னயம் செய்து விடல்'
