Published: Tuesday, January 7, 2025, 7:29 [IST]
சேமிக்க விரும்பும் அனைவராலும் ஒட்டுமொத்தமாக பிக்சட் டெபாசிட்களைப் போல மொத்தமாக முதலீடு செய்ய முடியாது. இதற்காக கொண்டுவரப்பட்ட திட்டம் தான் ரெக்கரிங் டெபாசிட் (RD). RD திட்டத்தை போஸ்ட் ஆபீஸ் மற்றும் வங்கிகள் வழங்குகிறது. மாத சம்பளக்காரர்கள் தங்கள் வருமானத்தில் மாதம் மாதம் சேமிக்க விரும்பினால், இந்தத் திட்டத்தின் மூலம் பலன் பெறலாம். சேமிப்பை அதிகரிக்க விரும்பும் முதலீட்டாளர்களுக்காக தற்போது ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா புதிய RD திட்டத்தை தொடங்கியுள்ளது. SBI கொண்டு வந்திருக்கும் புதிய RD திட்டத்தின் பெயர் "ஹர் கர் லக்பதி".
லக்பதி RD திட்டத்தில் யார் யார் முதலீடு செய்யலாம்?: SBI வங்கியின் லக்பதி RD திட்டத்தில் அனைத்து இந்திய குடிமகனும் தனிக்கணக்காகவோ அல்லது கூட்டுக் கணக்காகவோ தொடங்கலாம். 10 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் தங்கள் கணக்கை தாமாகவே நிர்வகிக்கலாம்.10 வயதுக்கும் குறைவாக உள்ள குழந்தைகளுக்கு கணக்கு தொடங்கப்பட்டால், அதை அவர்களின் பெற்றோர்கள் அல்லது சட்டபூர்வ பாதுகாவலர்கள் நிர்வகிக்கலாம்.
முதலீட்டு காலம்: லக்பதி RD திட்டத்தின் முதலீட்டு காலம் 3 முதல் 10 ஆண்டுகள்.
முன்கூட்டியே கணக்கை மூடுவதற்கு எவ்வளவு அபராதம்?: ஒருவர் தாங்கள் தேர்ந்தெடுத்த RD திட்டத்தின் முதிர்வு காலம் முடிவதற்கு முன்பே கணக்கை மூடினால் டெபாசிட் செய்யப்பட்ட தொகை ரூ.5 லட்சத்திற்கு குறைவாக இருந்தால் 0.50 சதவீதம் அபராதம் வசூலிக்கப்படும். அதுவே செலுத்தப்பட்ட தொகை ரூ.5 லட்சத்திற்கு அதிகமாக இருந்தால் அபராதம் 1 சதவீதமாக இருக்கும். கணக்கை தொடங்கி 7 நாட்களுக்குள் மூடும் பட்சத்தில் எந்த வித வட்டியும் செலுத்தப்படாமல் அபராதம் பிடித்தம் செய்யப்படும்.
தவணை செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டால் என்ன நடக்கும்?: 5 ஆண்டுகள் அல்லது அதற்கும் குறைவான RD திட்டங்களுக்கு மாதத்திற்கு 100 ரூபாய்க்கு ரூ.;1.50 காசுகள் அபராதம் விதிக்கப்படும். 5 ஆண்டுக்கு மேல் முதிர்வு காலம் கொண்ட RD திட்டங்களுக்கு ஒவ்வொரு மாதமும் 100 ரூபாய் டெபாசிட் தொகைக்கு 2 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும்.
வட்டி விகிதம்: RD திட்டத்தின் முதலீட்டு காலம் 3 முதல் 10 ஆண்டுகள் வரையில் வழங்கப்படுகிறது. இதில் 3 மற்றும் 4 ஆண்டு RD திட்டங்களுக்கு 6.75% வட்டி விகிதம் பொது வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது. மூத்த குடிமக்களுக்கு 7.25% வட்டி விகிதம் வழங்கப்படுகிறது.
ரூ.1 லட்சம் வருமானம் பெற எவ்வளவு சேமிக்க வேண்டும்?: பொது வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு மாதமும் ரூ.2,500 என்ற வீதத்தில் 3 ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால் 6.75 சதவீத வட்டி விகிதத்தில் முதிர்வு காலத்தின் முடிவில் ரூ.1 லட்ச ரூபாயை பெறலாம். அதற்கும் குறைவாக முதலீடு செய்ய விரும்புவர்கள் மாதம் ரூ.1810 என்ற வீதத்தில் முதலீடு செய்தால் 4 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ.1 லட்ச ரூபாயை பெறலாம். இன்னும் குறைவாக முதலீடு செய்ய விரும்புவார்கள் ரூ.1,407-ஐ 5 ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால், 6.50% வட்டி விகிதத்தில், முதிர்வு காலத்தின் முடிவில் ரூ.1 லட்சத்தைப் பெறலாம்.
மூத்த குடிமக்கள் மூன்று மாதமும் ரூ.2480 முதலீடு செய்தால் 7.25% வட்டி விகிதத்தில் 3 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ.1 லட்ச ரூபாயை பெறலாம். அதற்கும் குறைவாக முதலீடு செய்ய வேண்டுமானால் 1791 ரூபாயை 4 ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால் 7.25% வட்டி விகிதத்தில் ரூ.1 லட்ச ரூபாயை பெறலாம் இன்னும் குறைவாக 1389 ரூபாயை 5 ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால் 7 சதவீத வட்டி விகிதத்தில் 1 லட்ச ரூபாயை பெற முடியும்.
தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary
SBI Har Ghar Lakpati RD: Monthly Investment Plan to Earn Rs.1 Lakh
Discover how much you need to invest monthly in SBI Har Ghar Lakpati RD to accumulate Rs.1 lakh. Plan your savings smartly with this recurring deposit scheme.