இந்த திட்டங்களின் வட்டி விகிதங்கள் ஒவ்வொரு காலாண்டுக்கு ஒருமுறை மதிப்பாய்வு செய்யப்படுகின்றன. எனவே, முதலீட்டாளர்கள் ஒவ்வொரு காலாண்டிலும் மாற்றத்தை கண்காணிக்கிறார்கள். இதற்கிடையில், இந்த முறை 2025 ஜனவரி-மார்ச் காலாண்டிற்கான இந்தத் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தில் மத்திய அரசு எந்த மாற்றமும் செய்யவில்லை.
நடப்பு காலாண்டிற்கான வட்டி விகிதங்கள் (ஜனவரி-மார்ச் 2025):
சேவிங்ஸ் அக்கௌன்ட் : 4 சதவீதம்
1 இயர் போஸ்ட் ஆஃபீஸ் டைம் டெபொசிட்ஸ்: 6.9 சதவீதம்
2 இயர் போஸ்ட் ஆஃபீஸ் டைம் டெபொசிட்ஸ்: 7.0 சதவீதம்
3 இயர் போஸ்ட் ஆஃபீஸ் டைம் டெபொசிட்ஸ்: 7.1 சதவீதம்
5 இயர் போஸ்ட் ஆஃபீஸ் டைம் டெபொசிட்ஸ்: 7.5 சதவீதம்
5 இயர் ரெக்யூரிங் டெபொசிட்ஸ்: 6.7 சதவீதம்
நேஷனல் சேவிங் சர்டிஃபிகேட் (NSC): 7.7 சதவீதம்
கிசான் விகாஸ் பத்ரா (KVP): 7.5 சதவீதம் (115 மாதங்களில் மெச்சூரிட்டி)
பப்ளிக் ப்ராவிடென்ட் ஃபண்டு (PPF) : 7.1 சதவீதம்
சுகன்யா சம்ரித்தி அக்கௌன்ட்: 8.2 சதவீதம்
சீனியர் சிட்டிசன் சேவிங் ஸ்கிம்: 8.2 சதவீதம்
மன்த்லி இன்கம் அக்கௌன்ட்: 7.4 சதவீதம்.
பேங்க் ஃபிக்ஸடு டெபாசிட்ஸ் மற்றும் போஸ்ட் ஆஃபீஸ் டெபாசிட்ஸ்: வட்டி விகிதங்கள் ஒப்பீடு
போஸ்ட் ஆஃபீஸ் தற்போது 6.9 முதல் 7.1 சதவீதம் வரை வட்டி விகிதங்களை வழங்குகிறது. பேங்க்குகள் 6.5 முதல் 8.05 சதவீதம் வரை வட்டி விகிதங்களை வழங்குகின்றன. இந்த விகிதங்கள் 60 வயதுக்கு உட்பட்ட குடிமக்களுக்கான 1 முதல் 3 ஆண்டுகள் வரையிலான ஃபிக்ஸடு டெபொசிட்கள் ஆகும். மூத்த குடிமக்களுக்கு அதிக வட்டி வழங்கப்படுகிறது. அறிக்கையின்படி, தற்போது அதிக வட்டி செலுத்தும் வங்கி (8.05%) பந்தன் வங்கி ஆகும்.
இதையும் படிக்க: அக்டோபர் 2024ல் இபிஎஃப்ஓ-வில் இணைந்த 13.41 லட்சம் உறுப்பினர்கள்...!
கடந்த நான்கு காலாண்டுகளில் வட்டி விகிதங்கள் மாறவில்லை. ஆனால், ரிசர்வ் வங்கியின் மானிட்டர் பாலிசி ரிவ்யூ ஆனது பிப்ரவரி அல்லது ஏப்ரல் மாதங்களில் வட்டி விகிதங்களைக் குறைக்க வாய்ப்புள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது.
சிறுசேமிப்புத் திட்டங்கள் என்றால் என்ன?
சிறுசேமிப்புத் திட்டங்கள் என்பது அரசாங்கத்தால் நடத்தப்படும் சேமிப்புத் திட்டங்களாகும். அவை குடிமக்களை தொடர்ந்து சேமிக்க ஊக்குவிக்கின்றன. இந்தத் திட்டங்களில் மூன்று வகைகள் உள்ளன. அவை, சேவிங்ஸ் டெபாசிட்ஸ், சோசியல் செக்யூரிட்டி ஸ்கீம்ஸ் மற்றும் மன்த்லி இன்கம் பிளான் ஆகியனவாகும்.
இதையும் படிக்க: Budget 2025: சேமிப்பை அதிகரிக்க FD-களுக்கு வரிச் சலுகைகளை முன்மொழியும் வங்கிகள்.. முழு விவரம் இதோ!
சேவிங்ஸ் அக்கௌன்ட்கள் 1-3 ஆண்டுகள் தடவை டெபாசிட்களும் மற்றும் 5 ஆண்டுகளுக்கான ரெக்யூரிங் டெபொசிட்ஸ்களுடன் வருகின்றன. நேஷனல் சேவிங் சர்டிஃபிகேட் (NSC) மற்றும் கிசான் விகாஸ் பத்ரா (KVP) ஆகியவையும் இதில் அடங்கும். சமூக பாதுகாப்புத் திட்டங்களில் பப்ளிக் ப்ரோவிடென்ட் ஃபண்டு (PPF), சுகன்யா சம்ரித்தி அக்கௌன்ட் மற்றும் சீனியர் சிட்டிசன் சேவிங்ஸ் அக்கௌன்ட் ஆகியவை அடங்கும். மாதாந்திர வருமானத் திட்டத்தில் மன்த்லி இன்கம் அக்கௌன்ட் அடங்கும்.
First Published :
January 04, 2025 5:56 PM IST