மொபைல்போன்..!
ஒரு ஆசிரியை தன் ஆரம்பப் பள்ளி மாணவர்களிடம் நீங்கள் இறைவனிடம் விரும்பியதை கேட்பதாக வைத்துக்கொண்டு அதனை ஒரு கட்டுரையாக எழுதித் தாருங்கள் என்று கேட்டுக் கொண்டார்.
.
மாணவர்களும் தங்களது விருப்பங்களை கட்டுரையாக எழுதிக் கொடுத்தார்கள்.
அவற்றை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு வந்த ஆசிரியை ஒவ்வொன்றாக வாசிக்க ஆரம்பித்தார்கள்
அந்த கட்டுரைகளில் ஒன்று அவகளுடைடைய மனதைத் தொட்டு விட்டது.
அழ ஆரம்பித்து விட்டார்கள்
அந்த நேரம் வீடு வந்த கணவன் இதனைப் பார்த்து விட்டு ஏன் அழுகிறாய் என வினவினான்.
ஒரு மாணவரின் வரிகள் என்னை அழ வைத்து விட்டன என்றார்.
என்ன எழுதியுள்ளார் என அவர் வினவ,
இதோ எடுத்துப் படித்துப் பாருங்கள் என கொடுத்தார்.
அவர் வாசிக்க ஆரம்பித்தார்.......
இறைவா! என்னை நீ mobile phone ஆக ஆக்குவாயாக என்று
சிறப்பு பிரார்த்தனை செய்கின்றேன்.
ஏனெனில்,
• வீட்டில் பிரத்தியேக இடம் கிடைக்கும்.
• எந்த இடையூறுகளும் இல்லாமல் நான் சொல்வதைக் கேட்பார்கள்.
•என் தந்தை களைப்படைந்து வேலையிலிருந்து வரும் வேளைகளில்
அவருடைடைய அருகாமை எனக்கு கிடைக்கும்
• கவலையான நேரங்களில் கூட தாய் என்னோடு நெருங்கி இருப்பாள்.
•என்னை கையில் சுமப்பதற்காக எனது சகோதரர்கள் சண்டை இட்டுக் கொள்வார்கள்.
• மொத்த குடும்பமும் எனக்காக அனைத்தையும் விட்டு விடுவார்கள்.
• இறைவா நான் இறுதியாக கேட்பதெல்லாம் அவர்களை நான் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பது தான்...
நான் உன்னிடம் அதிகமாய் ஒன்றும் கேட்டு விடவில்லை ...
ஒரு mobile phone னைப் போல வாழ வேண்டும் என்று மட்டுமே கேட்கிறேன்.
வாசித்து முடித்த கணவன் சொன்னான்....
பாவம் அந்த குழந்தை....
அவனது பெற்றோர்கள் எவ்வளவு மோசமானவர்களாய் இருக்கும் என்று...
இதை கேட்டு விட்டு மீண்டும் அழுத ஆசிரியை சொன்னார்
அதை எழுதியது நம் குழந்தை தான் என்று....!
