பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) எப்போதும் மக்களுக்கான சேவையில் தங்களின் செயல்பாடுகளை எளிமையாகவும், வெளிப்படையாகவும் செய்ய முயற்சி செய்துகொண்டே வருகிறது.
- 1-MIN READ | News18 Tamil Tamil Nadu
Last Updated :December 31, 2024, 8:37 AM IST Published by
Sivaranjani E
01
EPF- இல் கணக்கு வைத்திருக்கும் 7 கோடி ஊழியர்களுக்கு மத்திய அரசு அட்டகாசமான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) எப்போதும் மக்களுக்கான சேவையில் தங்களின் செயல்பாடுகளை எளிமையாகவும், வெளிப்படையாகவும் செய்ய முயற்சி செய்துகொண்டே வருகிறது.
02
அந்தவகையில் மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் மூத்த அதிகாரி விடுத்த அறிக்கையில் இனி பிஎஃப் பணத்தை ஏடிஎம் மூலமே எளிதாக எடுத்துக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதற்காக, நாட்டின் தொழிலாளர்களுக்கு சிறந்த சேவைகளை வழங்குவதற்காக, அதன் தகவல் தொழில்நுட்ப அமைப்புகளை மேம்படுத்தும் பணியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
03
” நாங்கள் தொழில்நுட்ப அமைப்புகளை சிறப்பாக செயல்படுத்த பல முன்னெடுப்பு முயற்சிகளை செய்து வருகிறோம். அப்படி இதற்கு முன்பும் பல மேம்பாடுகளை உருவாக்கியுள்ளோம். உதாரணமாக சீக்கிரமாக கிளைம் ( Claim ) பணம் கிடைக்கவும், ஊழியர்களே தாங்களாக அட்வான்ஸ் பணத்தை கிளைம் செய்து கொள்ளவும் வழிவகை செய்துள்ளோம்” என்று மத்திய தொழிலாளர் நலத்துறை செயலாளர் சுமிதா தாவ்ரா கூறியுள்ளார்.
04
அதுமட்டுமன்றி வரும் ஆண்டில் EPFO உறுப்பினர்கள் பல முக்கிய மாற்றங்களை எதிர்பார்க்கலாம். குறிப்பாக நாட்டின் எந்த ஏடிஎம் சேவை மூலமும் பிஎஃப் பணத்தை எடுத்துக்கொள்ளும் வசதி செய்யப்படும் என்று கூறியுள்ளார்.
05
”எங்களின் முக்கிய நோக்கம் EPFO வின் ஐடி கட்டமைப்பு வங்கி அமைப்புகளுக்கு இணையான சேவை தரத்தை கொடுக்க முயற்சி செய்வதேயாகும். எனவே 2025 ஆண்டில் பெரிய மாற்றங்களை சந்திப்பீர்கள். ஆனால் எப்போது என்பதை குறிப்பிட்டு சொல்ல முடியாது.
06
ஏடிஎம் - இல் பணம் எடுக்க, டெபிட் கார்டு போல் பிஎஃப் கார்டு கொடுக்கப்படும். அதை பயன்படுத்தி எந்த ஏடிஎம் இயந்திரத்திலும் பணம் எடுத்துக்கொள்ளலாம். ஆனால் ஒட்டுமொத்த பிஎஃப் பணத்திலிருந்து 50% பணத்தை மட்டுமே உங்களால் எடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது “ என்று சுமிதா தாவ்ரா கூறியுள்ளார்.
- FIRST PUBLISHED : December 31, 2024, 8:37 AM IST
PF வாடிக்கையாளர்களே.. 2025 முதல் வரும் புது ரூல்ஸ்.. இனி பணம் எடுப்பது ரொம்ப ஈசி..!
EPF- இல் கணக்கு வைத்திருக்கும் 7 கோடி ஊழியர்களுக்கு மத்திய அரசு அட்டகாசமான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) எப்போதும் மக்களுக்கான சேவையில் தங்களின் செயல்பாடுகளை எளிமையாகவும், வெளிப்படையாகவும் செய்ய முயற்சி செய்துகொண்டே வருகிறது.
MORE
GALLERIES