Last Updated:January 06, 2025 1:22 PM IST
Oversleeping | தூக்கமின்மை, சோர்வு, இரவு வெகு நேரம் கழித்து தூங்குவது அல்லது சில மருத்துவ நிலை ஆகியவற்றின் விளைவாக அதிக தூக்கம் ஏற்படலாம்.
அதிக நேரம் தூங்குவது உடல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும். இதுதொடர்பான முழு தகவல்களை இங்கே தெரிந்து கொள்ளலாம்.
இரவு போதுமான நேரம் நன்றாக தூங்குவது உங்கள் மன மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமாகும். இது உங்கள் வாழ்க்கை தரத்தையும் ஒட்டுமொத்த நல்வாழ்வையும் மேம்படுத்துகிறது. போதுமான நேரம் தூங்காததால் ஏற்படும் உடல்நலக் கேடுகளைப் பற்றி நீங்கள் நிச்சயம் அறிந்திருப்பீர்கள். அதேபோல், அதிக நேரம் தூங்குவதும் உடல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா?.
இது பல சுகாதார நிலைமைகளுக்கு பங்களிக்கலாம் அல்லது அடிப்படை உடல்நலப் பிரச்சனைகளை வெளிப்படுத்தும் அறிகுறிகளாக இருக்கலாம். தூக்கமின்மை, சோர்வு, இரவு வெகு நேரம் கழித்து தூங்குவது அல்லது சில மருத்துவ நிலை ஆகியவற்றின் விளைவாக அதிக தூக்கம் ஏற்படலாம். இந்த குளிர்காலத்தில் நீங்கள் வழக்கத்தை விட அதிக நேரம் தூங்குகிறீர்களா?. அப்படியென்றால் அதிகமாக தூங்குவதால் ஏற்படும் பக்க விளைவுகளை தெரிந்துகொள்ளுங்கள்.
அதிக நேரம் தூங்குவதால் ஏற்படும் மோசமான விளைவுகள்!
- இது உங்கள் மன ஆரோக்கியத்தை பாதிக்கலாம். பொதுவாக அதிக நேரம் தூங்குவது என்பது மனச்சோர்வு மற்றும் பதட்டத்துடன் தொடர்புடையது. அதிகமாக தூங்குபவர்கள் அதிக சோர்வு, குறைந்த ஆற்றல் நிலைகள் மற்றும் அடிக்கடி மனநிலை மாற்றங்கள் ஆகியவற்றை அனுபவிக்கலாம்.
- அதிக நேரம் தூங்குவதால் இதய நோய், நீரிழிவு மற்றும் தலைவலி உள்ளிட்ட சுகாதார நிலைமைகளின் அபாயத்தையும் அதிகரிக்கும். இது முதுகு வலியையும் உண்டாக்கும். இதற்கு நீண்ட நேரம் உடல் எந்த இயக்கமும் இன்றி இருப்பதே காரணம். சீரான உடற்பயிற்சி முதுகுவலி மற்றும் பல சிக்கல்களைத் தடுக்க உதவும்.
- அதிகமாகவோ அல்லது குறைவாகவோ தூங்குவது உங்கள் உடல் எடையை அதிகரிக்கச் செய்யும். ஏனென்றால் நேரம் தவறி சாப்பிடுவது, உணவு முறை மற்றும் நாள் முழுவதும் உடல் செயல்பாடின்றி இருப்பது போன்றவையும் காரணமாக இருக்கிறது.
ஒருவர் எவ்வுளவு நேரம் தூங்க வேண்டும்?
- பெரியவர்கள் 7-9 மணிநேர தூக்கத்தை இலக்காகக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அடிக்கடி பரிந்துரைக்கிறார்கள். இருப்பினும், ஒவ்வொரு இரவும் உங்களுக்குத் தேவையான தூக்கத்தின் அளவு வயது, உடல் செயல்பாடு மற்றும் வாழ்க்கை முறை போன்ற பல காரணிகளைப் பொறுத்து மாறுபடும்.
- நீங்கள் அதிக நேரம் தூக்கத்தில் இருந்தால், இதனால் வரக்கூடிய சிக்கல்களைத் தடுக்க மருத்துவர்கள் அல்லது அங்கீகாரம் பெற்ற நிபுணர்களின் உதவியை நாடுங்கள். மேலும், உங்கள் தூக்க சுழற்சியை சரிசெய்ய தேவையான மாற்றங்களைச் செய்யுங்கள். ஒரே நேரத்தில் தூங்கவும் எழுந்திருக்கவும் முயற்சி செய்யுங்கள். ஒரு நாளைக்கு குறைந்தது 30 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்யுங்கள். மேலும், இரவு தூங்குவதற்கு சற்று நேரத்திற்கு முன் கஃபைன், மதுபானம் மற்றும் உணவு உட்கொள்வதைத் தவிர்க்கவும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கு வழங்கப்பட்டவை பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே; மருத்துவ ஆலோசனை இல்லை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் அவசியம் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். News18Tamilnadu இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)
First Published :
January 06, 2025 1:22 PM IST