OTT | இடைவேளைக்குப் பின் அவிழ்க்கப்படும் முடிச்சுகள், குற்றவாளி யார் என்பதைத் தெரிந்துகொள்ளும் ஆர்வம் மேலோங்குகிறது. க்ளைமாக்ஸ் நெருங்கும்போது, விறுவிறுப்பும் கூடவே நம்முடன் பயணிக்கிறது.
- 1-MIN READ | News18 Tamil Tamil Nadu
Last Updated :January 4, 2025, 3:33 PM IST Published by
Khalilullah S
01
ஃபீல் குட் கதைகளுக்கும், சைக்காலஜிக்கல் த்ரில்லர் கதைகளுக்கும் பெயர் போனது மலையாள சினிமா. கொஞ்சம் ஸ்லோ ஸ்கிரீன்ப்ளே தான் என்றாலும், அடுத்து என்ன? எதற்காக இது நடக்கிறது என்பதை மனித மனங்களின் உளவியலை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் 'Bougainvillea'. சோனி லிவ் ஓடிடி தளத்தில் காணக்கிடைக்கிறது. குஞ்சாக்கோ போபன், பகத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
02
கார் விபத்து ஒன்றில் பாதிக்கப்படும் ராய்ஸ் தாமஸ் (குஞ்சாக்கோ போபன்) மனைவி ரீத்துவுக்கு (ஜோதிர்மயி) நினைவுத்திறன் இழப்பு ஏற்படுகிறது. எதையும் நியாபகம் வைத்துக்கொள்ள முடியாத அவர், ரேமா என்ற வீட்டுப் பணியாளர் உதவியுடன் வாழ்கிறார். இப்படியான நிலையில், தேனியில் கல்லூரி மாணவி ஒருவர் காணாமல் போகிறார்.
03
இது தொடர்பான வழக்கை விசாரிக்கும் காவல் அதிகாரி டேவிட் கோஷி (பகத் பாசில்) சில நிகழ்வுகளால் ரீத்து மீது சந்தேகம் கொண்டு விசாரணையைத் தொடங்குகிறார். இந்த விசாரணையில் ஒவ்வொரு பூதமாகக் கிளம்புகிறது. மர்மமான பின்னணி ஒவ்வொன்றாக வெளியே வர, இறுதியில் யார் குற்றவாளி என்பதைச் சொல்லும் படம் தான் 'போகெய்ன்வில்லா'.
04
தொடக்கத்தில் திரைக்கதை மெதுவாக நகர்வது போன்ற உணர்வு எழலாம். கொஞ்சம் கொஞ்சமாக விரியும் கதையில் ரீத்து கதாபாத்திரத்தின் மனநிலை, நுணுக்கமான உணர்வுகள், ஆழமான காட்சிகள் படத்தின் மீது நம்மை ஒன்ற வைக்கின்றன. பகத் பாசில் விசாரணையின்போது வெளிவரும் சம்பவங்கள் அடுத்து என்ன என்ற ஆர்வத்தையும், குஞ்சாக்கோ போபன் குறித்த மர்மங்களையும் வெளிக்கொண்டு வருகிறது.
05
இடைவேளைக்குப் பின் அவிழ்க்கப்படும் முடிச்சுகள், குற்றவாளி யார் என்பதைத் தெரிந்துகொள்ளும் ஆர்வம் மேலோங்குகிறது. க்ளைமாக்ஸ் நெருங்கும்போது, விறுவிறுப்பும் கூடவே நம்முடன் பயணிக்கிறது. உளவியல் ரீதியான பாதிப்புகளும், பதைபதைக்கும் காட்சிகளும் ஆர்வத்தைத் தூண்டுகின்றன. மொத்தமாகப் பொறுமையுடன் நகரும் திரைக்கதையுடன் பயணித்தால் உளவியல் த்ரில்லரை உள்வாங்கிக் கொள்ளலாம்.
06
மர்மங்களையும், குழப்பங்களையும் உள்வாங்கிக் கொண்டு அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் ரீத்து கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஜோதிர்மயி. 'சைலண்டாக' சம்பவம் செய்யும் கதாபாத்திரத்தில் குஞ்சாக்கோ போபன் நடிப்பு கவனிக்க வைக்கிறது. பகத் பாசிலுக்குப் பெரிய அளவில் வேலை இல்லை என்றாலும், ஒவ்வொரு காட்சிகளும் நிறைவைத் தருகிறார்.
07
அடர்ந்த வனப்பகுதியில் மலைகளையும், பதைபதைப்பையும் கடத்துகிறது ஆனந்த் சந்திரனின் கேமரா. சுஷின் ஷ்யாமின் பின்னணி இசை படத்துக்குத் தேவையான விறுவிறுப்பையும், காட்சிகள் கோரும் உணர்வையும் பார்வையாளர்களிடையே ஏற்படுத்துவது படத்துக்குப் பலம். சோனி லிவ் ஓடிடியில் காணக்கிடைக்கும் இந்தப் படம் சைக்காலஜி த்ரில்லர் ரசிகர்களுக்கு ஏற்ற வீக் எண்ட் ஓடிடி சாய்ஸ்.
- FIRST PUBLISHED : January 2, 2025, 2:10 PM IST
OTT | சைக்காலஜிக்கல் த்ரில்லர் ரசிகர்களுக்கான விருந்து... வீக் எண்ட்ல மிஸ் பண்ணக்கூடாத படம்!
ஃபீல் குட் கதைகளுக்கும், சைக்காலஜிக்கல் த்ரில்லர் கதைகளுக்கும் பெயர் போனது மலையாள சினிமா. கொஞ்சம் ஸ்லோ ஸ்கிரீன்ப்ளே தான் என்றாலும், அடுத்து என்ன? எதற்காக இது நடக்கிறது என்பதை மனித மனங்களின் உளவியலை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் 'Bougainvillea'. சோனி லிவ் ஓடிடி தளத்தில் காணக்கிடைக்கிறது. குஞ்சாக்கோ போபன், பகத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
MORE
GALLERIES