பொதுவாக புத்தாண்டு என்றாலே, மக்கள் அந்த ஆண்டு முதல் சில நல்ல பழக்க வழக்கங்களை கடைப்பிடிக்கவும், சில கெட்ட பழக்கங்களை கைவிடுவது பற்றிய முடிவுகளை எடுப்பார்கள். அந்த வகையில், இந்த புத்தாண்டில் உங்கள் உடல் ஆரோக்கியம் சம்பந்தமான, யதார்த்தமான சில இலக்குகளை அமைப்பதன் மூலம் உங்கள் இதய ஆரோக்கியத்தை பேணிக் காக்க முடியும்.
- 2-MIN READ | News18 Tamil Tamil Nadu
Last Updated :December 18, 2024, 4:57 PM IST Published by
Sivaranjani E
01
2025-ஆம் ஆண்டில் உங்கள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவத உதவும் சில முக்கிய வழிகாட்டுதல்களை ஃபோர்டிஸ் மருத்துவமனை, கல்யாண் இன்டர்வென்ஷனல் கார்டியாலஜி பிரிவின் ஆலோசகரும், மருத்துவருமான விவேக் மகாஜன் உங்களுக்கு வழங்கியுள்ளார். பொதுவாக புத்தாண்டு என்றாலே, மக்கள் அந்த ஆண்டு முதல் சில நல்ல பழக்க வழக்கங்களை கடைப்பிடிக்கவும், சில கெட்ட பழக்கங்களை கைவிடுவது பற்றிய முடிவுகளை எடுப்பார்கள். அந்த வகையில், இந்த புத்தாண்டில் உங்கள் உடல் ஆரோக்கியம் சம்பந்தமான, யதார்த்தமான சில இலக்குகளை அமைப்பதன் மூலம் உங்கள் இதய ஆரோக்கியத்தை பேணிக் காக்க முடியும்.
02
புத்தாண்டு தீர்மானங்கள் ஒரு சிறந்த எதிர்காலத்திற்கான ஒரு வாக்குறுதி மற்றும் நம்பிக்கையாக திகழ்கிறது. அதிக உடற்பயிற்சி செய்தல், நன்றாக சாப்பிடுதல், புகைபிடிப்பது அல்லது மது அருந்துவது போன்ற பழக்கங்களை நிறுத்துதல் உள்ளிட்ட சில பொதுவான புத்தாண்டு தீர்மானங்கள், உண்மையில் உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கும், உங்கள் இதயத்திற்கும் முக்கிய பங்காற்றும்.
03
இருப்பினும், பெரும்பாலான மக்கள் தங்கள் தீர்மானங்களை மிகவும் கட்டுப்படுத்த முயற்சி செய்கிறார்கள், இதனால் அது நீண்ட காலத்திற்கு நீடிக்க முடியாமல் போகலாம். 2025-ஆம் ஆண்டில் உங்கள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான, யதார்த்தமான இலக்குகளை நீங்கள் அமைக்க விரும்பினால், ஃபோர்டிஸ் மருத்துவமனை, கல்யாண் இன்டர்வென்ஷனல் கார்டியாலஜி பிரிவின் ஆலோசகரும், மருத்துவருமான விவேக் மகாஜன் சில முக்கிய வழிகாட்டுதல்களை உங்களுக்கு வழங்கியுள்ளார். இதனை பின்பற்றுவதன் மூலம் உங்கள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும்.
04
உட்காரும் வாழ்க்கைமுறையை தவிர்த்தல்: அதிக நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்திருப்பதற்கு பதிலாக, அவ்வப்போது ஒரு சிறய நடைபயிற்சியில் ஈடுபடுவது உடல்நலத்திற்கு நல்லது. ஒருவேளை மேசை முன்பாக உட்கார்ந்து கொண்டே வேலை செய்ய வேண்டிய சூழல் இருந்தால், ஒரு சிறிய இடைவெளி எடுத்து ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் 20-30 நிமிடங்கள் அறையைச் சுற்றி நடக்க வேண்டும். இத்தகைய உட்காரும் வழக்கம், புகைப்பிடிப்பதற்கு சமமான நவீனகால வழக்கமாக இருப்பதாக கூறப்படுகிறது, மேலும் இது உங்கள் வாழ்க்கைத் தரம் மற்றும் இதய ஆரோக்கியத்தை தீவிரமாக பாதிக்கலாம்.
05
முழு தானியங்களை எடுத்துக்கொள்தல்: முழு தானியங்கள் போன்ற சிறந்த உணவுகளை தேர்வு செய்ய வேண்டும். காய்கறிகள், பருப்பு வகைகள், கோழி, முட்டை, பால் மற்றும் பருப்பு வகைகள் போன்ற உணவுகளையும் தேர்வு செய்யவும். ஆரோக்கியமான, சீரான உணவு, இதய நோய் மற்றும் டைப் 2 நீரிழிவு நோய் போன்ற பிற நாட்பட்ட நிலைகளை உருவாக்கும் அபாயத்தைக் கணிசமாகக் குறைக்கிறது.
06
இனிப்பான பானங்களை உட்கொள்வதை நிறுத்துங்கள்: உங்கள் உணவில் இருந்து சர்க்கரையை முற்றிலுமாக அகற்றுவது மிகவும் கடினமாகத் தோன்றினால், சோடாக்கள், காக்டெயில்கள் மற்றும் மாக்டெயில்கள் போன்ற சர்க்கரை நிறைந்த பானங்களை உட்கொள்வதை முதலில் நிறுத்துங்கள். நீங்கள் நிறைய காபி அல்லது டீ குடிப்பராக இருந்தால், உங்கள் விருப்பத்திற்குரிய காஃபின் கலந்த பானத்தில் சர்க்கரை போடுவதை மெதுவாக நிறுத்துங்கள். அதிகப்படியான சர்க்கரை கொழுப்பு கல்லீரல் நோய், இதய பிரச்சினைகள் மற்றும் நீரிழிவு ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது, எனவே முடிந்தவரை சர்க்கரையைத் தவிர்க்கவும்.
07
தூக்கத்திற்கு முன்னுரிமை கொடுங்கள்: இரவில் குறைந்தது 7 முதல் 8 மணிநேரம் தூங்குவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். சரியான தூக்கமின்மை மனநலப் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் மற்றும் உங்கள் இதயத்தை எதிர்மறையாக பாதிக்கும்.
08
மொபைலில் குறைந்த நேரத்தை செலவிடுங்கள்: உங்கள் மொபைலில் முடிவில்லாமல் ஸ்க்ரோலிங் செய்வதற்குப் பதிலாக, அதிகமாக வெளியே சென்று உங்கள் சுற்றுப்புறங்களை அனுபவிக்கத் தொடங்குங்கள். இது மனச்சோர்வு, பதட்டம் மற்றும் தனிமை ஆகியவற்றை ஏற்படுத்தும், இவை அனைத்தும் இதய ஆரோக்கியத்தை பாதிக்கின்றன.
09
மது அருந்துவது, புகைப்பிடிப்பதை நிறுத்துங்கள்: மது அருந்துவது, புகைப்பிடிப்பது ஆகிய இரண்டையும் நிறுத்துவது, உங்கள் இரத்த அழுத்தம் மற்றும் இதயத் துடிப்பைக் கணிசமாகக் குறைக்கும் மற்றும் உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும், மேம்பட்ட வாழ்க்கைத் தரத்திற்கும் வழி செய்யும்.
10
வருடாந்தர உடல் பரிசோதனை: உங்கள் குடும்பத்தில் இதய நோயின் வரலாறு இல்லாவிட்டாலும், வருடாந்தர சுகாதாரப் பரிசோதனைக்கு செல்லுங்கள், பிரச்சனைகளுக்கான அறிகுறிகளை நமது உடல் வெளிப்படுத்தும் முன்பே, சுகாதார நிபுணர்கள் அறிகுறிகளைக் கண்டறிய முடியும் என்பதால், ஆண்டுதோறும் பரிசோதனை செய்துகொள்ளவது நல்லது.
- FIRST PUBLISHED : December 18, 2024, 4:57 PM IST
New Year Resolution 2025 : உங்கள் இதயத்தை பாதுகாக்க உறுதிமொழி எடுங்கள்.. அதற்கான வழிமுறைகள் இதோ..!
2025-ஆம் ஆண்டில் உங்கள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவத உதவும் சில முக்கிய வழிகாட்டுதல்களை ஃபோர்டிஸ் மருத்துவமனை, கல்யாண் இன்டர்வென்ஷனல் கார்டியாலஜி பிரிவின் ஆலோசகரும், மருத்துவருமான விவேக் மகாஜன் உங்களுக்கு வழங்கியுள்ளார். பொதுவாக புத்தாண்டு என்றாலே, மக்கள் அந்த ஆண்டு முதல் சில நல்ல பழக்க வழக்கங்களை கடைப்பிடிக்கவும், சில கெட்ட பழக்கங்களை கைவிடுவது பற்றிய முடிவுகளை எடுப்பார்கள். அந்த வகையில், இந்த புத்தாண்டில் உங்கள் உடல் ஆரோக்கியம் சம்பந்தமான, யதார்த்தமான சில இலக்குகளை அமைப்பதன் மூலம் உங்கள் இதய ஆரோக்கியத்தை பேணிக் காக்க முடியும்.
MORE
GALLERIES