Madurai Flower Price|கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டில் மல்லிகை பூவின் விலை 1800க்கு விற்பனை செய்யப்படுகின்றது
- 1-MIN READ | News18 Tamil Tamil Nadu
Last Updated :December 24, 2024, 4:24 PM IST Published by
pradeepa mReported by
Yuvathika
01
கோவில் நகரம் என்று சொல்லக்கூடிய மதுரை பழமையான கோவில்களுக்கு மட்டுமல்லாமல் மல்லிகை பூவிற்கும் பேமஸ் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. ஏனென்றால் மதுரையின் தனி சிறப்புகளில் ஒன்றான மதுரை மல்லிக்கு என்று எப்போதும் தனி மவுசு உள்ளது.
02
இந்நிலையில், மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் பூக்களின் வரத்தை பொருத்தும் விழாக்கள் மற்றும் நிகழ்ச்சிகளை பொருத்தும் மல்லிகை பூவின் விலை ஏறுவதும், இறங்குவதும் இருக்கும். சத்திரப்பட்டி, உசிலம்பட்டி போன்ற பகுதிகளில் இருந்தும் தென் மாவட்டங்களான தேனி, திண்டுக்கல், விருதுநகர் போன்ற மாவட்டங்களில் இருந்தும் மல்லிப்பூ மதுரை சந்தைக்கு இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும்.
03
இதனை அடுத்து கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை திடீரென்று உயர்ந்துள்ளது.அதன்படி, மதுரை மல்லிகை பூவின் விலை 500-ல் இருந்து 1000 ரூபாய் வரைக்கும் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்பொழுது 1800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது.
04
அதேபோல் மெட்ராஸ் மல்லி ரூ.600, பிச்சி ரூ.800, முல்லை ரூ.800, செவ்வந்தி ரூ.100, சம்பங்கி ரூ.160, செண்டு மல்லி ரூ.60, கனகாம்பரம் ரூ.800, ரோஸ் ரூ.200, பட்டன் ரோஸ் ரூ.250, பன்னீர் ரோஸ் ரூ.300, கோழிக்கொண்டை ரூ.80, அரளி ரூ.250, தாமரை (ஒன்றுக்கு) ரூ.18 மற்ற பூக்களின் விலையும் கணிச்சமாக உயர்ந்துள்ளது.
05
கிறிஸ்துமஸ் பண்டிகை என்பதினால் பூக்களின் விலை உயர்ந்து உள்ளதாவும், பூக்களின் வரத்தைப் பொறுத்து நாளை பூக்களின் விலை ஏறுவதும் இறங்குவதும் இருக்கும் என்று கூறுகின்றனர்.
- FIRST PUBLISHED : December 24, 2024, 4:24 PM IST
Madurai Flower Price: வந்தாச்சு கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்... எகிறிய மதுரை மல்லிகை பூவின் விலை...
கோவில் நகரம் என்று சொல்லக்கூடிய மதுரை பழமையான கோவில்களுக்கு மட்டுமல்லாமல் மல்லிகை பூவிற்கும் பேமஸ் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. ஏனென்றால் மதுரையின் தனி சிறப்புகளில் ஒன்றான மதுரை மல்லிக்கு என்று எப்போதும் தனி மவுசு உள்ளது.
MORE
GALLERIES