"live not for ourselves but always for other's " - மக்களின் புத்தாண்டு Resolution...

2 weeks ago 16

Last Updated:December 31, 2024 11:00 AM IST

2025 New Year Resolution| பல கனவுகளுடன் 2025-ல் அடி எடுத்துவைக்கும் பொதுமக்களின் New Year Resolution பற்றி பல்வேறு சுவாரஸ்ய பதில்கள் நம்மிடம் பகிர்ந்தனர். அவைகள் பற்றி இங்கு காணலாம்.

X

2025

2025 - புது வருடத்தை நோக்கி செல்லும் மக்களின் கருத்துகள்

மகிழ்ச்சியும் மனநிறைவும் ஒவ்வொருவரின் உள்ளங்களிலும், இல்லங்களிலும் நிறையட்டும் என ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துகளைத் தெரிவித்து, இந்தப் புத்தாண்டை வரவேற்க தயாராகி வருகிறார்கள் பொதுமக்கள்.

வண்ணமயமான வானவேடிக்கைகளுடன், வாழ்க்கையிலும் ஒளிமயமான எதிர்காலம் அமையும் என்ற நம்பிக்கையில் 2025 க்கு அடியெடுத்து வைக்கிறார்கள் பொதுமக்கள். அந்த வகையில் 2025 வரவேற்கும் பொதுமக்களின் கருத்துக்கள் உங்களுக்காக.

2025 ஆண்டில் நல்ல வேலைக்கு செல்ல வேண்டும். யாரையும் காயப்படுத்த கூடாது, நன்றாக படிக்க வேண்டும், நல்ல மதிப்பெண் எடுக்க வேண்டும், நமக்காக வாழாமல் பிறருக்காக வாழ வேண்டும், காலையில் சீக்கிரமாக எழுந்திருக்க வேண்டும், உணவு முறையில் சில மாற்றங்கள் தேவை, உடலை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும், குடும்பத்தோடு நியூ இயர் செலப்ரேட் பண்ண வேண்டும், வாழ்வில் சில மாற்றங்கள் தேவை போன்ற பல கருத்துக்களை பொதுமக்கள் தெரிவித்தனர்.

இதையும் வாசிக்க: Kesari Recipe: நியூ இயர் ஸ்பெஷல் ஸ்வீட்... டேஸ்டான கல்யாண வீட்டு கேசரி செய்ய உங்களுக்கான டிப்ஸ்...

தொடர்ந்து பேசிய மக்கள் இந்த ஆண்டு ஃபெஞ்சல் புயலை வாழ்வில் மறக்க முடியாது. இது போன்ற இயற்கை பேரிடர் இனி வரும் காலம் நடைபெறாமல் இருக்க இறைவனை வேண்டுகிறோம். வரும் ஆண்டில் live not for ourselves but always for other's நமக்காக வாழாமல் பிறருக்காகவும் வாழவேண்டும் என முக்கிய கருத்தை முன் வைத்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First Published :

December 31, 2024 11:00 AM IST

Read Entire Article