Best Suspense Thriller Film On OTT | இந்த படத்தில் கதை, ஹீரோ மற்றும் வில்லன் என்று பிரித்து பார்க்க முடியாத வகையில் பின்னப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தை பார்க்க ஆரம்பித்துவிட்டால், அது முடியும் வரை எழுந்திருக்கவே மனம் வராது.
- 1-MIN READ | News18 Tamil Tamil Nadu
Last Updated :December 30, 2024, 1:57 PM IST Published by
Soundarya Kannan
01
இந்தியாவில் சஸ்பென்ஸ் திரில்லர் படங்களுக்கு அதிக ரசிகர்கள் உள்ளனர். அஜய் தேவ்கனின் த்ரிஷ்யம், த்ரிஷ்யம் 2, பட்லா போன்ற திரைப்படங்கள் வெற்றி பெற்றதற்கு இதுவே காரணம். ஆனால், தென்னிந்திய சினிமாவும் இதுபோன்ற படங்களைத் தயாரிப்பதில் பின் தங்கவில்லை என்றே சொல்லலாம். இந்நிலையில், இரண்டு வருடங்களுக்கு முன்பு வெளியான ஒரு தென்னிந்திய படம் பற்றி தான் இன்று நாம் பார்க்கப் போகிறோம். அந்தப் படத்தின் பெயர் தான் ‘ஜன கன மன’.
02
மலையாளத்தில் தயாரிக்கப்பட்ட 'ஜன கன மன' திரைப்படம் 2022ஆம் ஆண்டு வெளியானது. இதில் சுராஜ் வெஞ்சாரமூடு மற்றும் பிருத்விராஜ் சுகுமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இந்த திரைப்படத்தின் கதை சக்தி வாய்ந்தது மற்றும் இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், நீங்கள் ஹீரோவாக கருதும் நபர் இறுதியில் வில்லனாக மாறுகிறார்.
03
'ஜன கன மன' திரைப்படம் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றி அடைந்தது. இந்த படம் 5 மடங்கு அதிகமாக வசூலித்ததால் தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும், இந்தப் படத்தை பார்க்க ஆரம்பித்துவிட்டால், அது முடியும் வரை எழுந்திருக்கவே மனம் வராது.
04
முதலில் ஒரு பல்கலைக்கழகப் பேராசிரியர் கொலை செய்யப்படுவது காட்டப்படுகிறது. இதற்குப் பிறகு, கொலை வழக்கை விசாரிக்கும் பொறுப்பு ஏசிபி சஜ்ஜன் குமாரிடம் (சூரஜ் வெஞ்சாரமூடு) ஒப்படைக்கப்படுகிறது. இதை தொடர்ந்து அரவிந்த் சுவாமிநாதன் (பிருத்விராஜ் சுகுமாரன்) நுழையும் போது கதையில் ஒரு பெரிய திருப்பம் ஏற்படுகிறது.
05
இதையடுத்து, ஒரு மணி நேரத்துக்குப் பிறகு ‘ஜன கன மன’ படத்தின் மொத்தக் கதையும் மாறுகிறது. அரவிந்த் சுவாமிநாதன் நீதிமன்றத்தில் சஜ்ஜன் குமாருக்கு எதிரான வழக்கை எதிர்த்து போராடுகிறார். பின்னர் கிளைமாக்ஸில், பேராசிரியரின் கொலையின் பின்னணியில் உள்ள ரகசியம் வெளிப்படுகிறது. டிஜோ ஜோஸ் ஆண்டனி இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.
06
'ஜன கன மன' படத்தில் கதை, ஹீரோ மற்றும் வில்லன் என்று பிரித்து பார்க்க முடியாத வகையில் பின்னப்பட்டிருக்கிறது. இப்படத்தில் பிருத்விராஜின் நடிப்பு பலராலும் பேசப்பட்டது. அதே சமயம் சுராஜ் வெஞ்சாரமூடு தனது கதாபாத்திரத்தில் திறம்பட நடித்திருந்தார். இந்த படம் ஐஎம்டிபியில் 10க்கு 8.3 ரேட்டிங் பெற்றுள்ளது.
07
மிகக் குறைந்த செலவில் இந்தப் படம் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 'ஜன கன மன' திரைப்படம் 10 கோடி ரூபாயில் தயாரிக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், இப்படம் திரையரங்குகளில் வெற்றி பெற்று உலகம் முழுவதும் சுமார் 50 கோடி ரூபாய் வசூல் செய்தது. இந்த படத்தை நீங்கள் Netflixல் பார்க்கலாம்.
- FIRST PUBLISHED : December 30, 2024, 1:57 PM IST
Suspense-Thriller Film: IMDb-ல் 8.3 ரேட்டிங் பெற்ற மலையாள சஸ்பென்ஸ் திரில்லர் படம்.. எது தெரியுமா?
இந்தியாவில் சஸ்பென்ஸ் திரில்லர் படங்களுக்கு அதிக ரசிகர்கள் உள்ளனர். அஜய் தேவ்கனின் த்ரிஷ்யம், த்ரிஷ்யம் 2, பட்லா போன்ற திரைப்படங்கள் வெற்றி பெற்றதற்கு இதுவே காரணம். ஆனால், தென்னிந்திய சினிமாவும் இதுபோன்ற படங்களைத் தயாரிப்பதில் பின் தங்கவில்லை என்றே சொல்லலாம். இந்நிலையில், இரண்டு வருடங்களுக்கு முன்பு வெளியான ஒரு தென்னிந்திய படம் பற்றி தான் இன்று நாம் பார்க்கப் போகிறோம். அந்தப் படத்தின் பெயர் தான் ‘ஜன கன மன’.
MORE
GALLERIES