HDFC வங்கி கொடுக்கும் ஸ்பெஷல் கிஃப்ட்.. பெண்களே உங்களுக்குத்தான் சூப்பர் ஜாக்பாட்..!!

1 week ago 13

Published: Wednesday, January 8, 2025, 11:30 [IST]

தனியார் துறையில் மிகப்பெரிய வங்கியான HDFC வங்கி, பெண்களுக்கு பிரத்யேகமாக தனிநபர் கடனை வழங்குகிறது. ஆன்லைன் மூலம் பெண்களுக்கு தனிநபர் கடன்களை வழங்குகிறது. பெண்கள் தனிப்பட்ட செலவுகள் மற்றும் பிற தேவைகளுக்காக இந்த சலுகையைப் பெறலாம். அவர்களின் நிதி சுதந்திரத்திற்காகவே வங்கி இந்தக் கடனை வழங்குகிறது. இதற்கு எச்டிஎஃப்சி வங்கியில் சம்பளக் கணக்கு இருந்தால் போதுமானது. இப்போது இந்தக் கடன் குறித்த முழு விவரங்களைப் பார்ப்போம்.

இந்த தனிநபர் கடன் மூலம் பெண்கள் ரூ. 50,000 முதல் ரூ. 40,00,000 பெறலாம். சுயவிவரம் மற்றும் தகுதியைப் பொறுத்து எவ்வளவு கடன் கொடுக்கலாம் என்பதை வங்கி தீர்மானிக்கிறது. கடன் காலத்தை 3 மாதங்கள் முதல் 72 மாதங்கள் வரை தேர்வு செய்யலாம். திருப்பிச் செலுத்தும் திறனைப் பொறுத்து, EMI மற்றும் காலவரையறை தேர்வு செய்யலாம்.

HDFC வங்கி கொடுக்கும் ஸ்பெஷல் கிஃப்ட்.. பெண்களே உங்களுக்குத்தான் சூப்பர் ஜாக்பாட்..!!

இந்தக் கடனுக்கு விண்ணப்பிக்கும் பெண்கள் சில ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். இது முற்றிலும் ஆன்லைன் விண்ணப்ப செயல்முறையாகும். வங்கிக் கிளைக்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை. எச்டிஎஃப்சி வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது செயலி மூலம் ஒருவர் இந்தக் கடன் வசதியைப் பெறலாம். விவரங்களுக்கு வங்கியின் இலவச எண்ணை அழைக்கலாம்.

கடன் பெறுவதற்கான தகுதி: பெண்கள் 21 வயது முதல் 60 வயது வரை உள்ள பெண்களுக்கு இந்த கடன் வசதி உள்ளது.

எச்டிஎஃப்சி வங்கியில் சம்பளக் கணக்கு இருந்தால் சம்பளம் ரூ. 25,000 போதுமானது. இதற்கான வட்டி விகிதம் 10.85 ஆக வழங்கப்படுகிறது. சம்பளம் என்றால் மற்ற வங்கிகளில் சம்பள கணக்கு ரூ. 50,000 ஆக இருக்க வேண்டும்.

HDFC வங்கி வாடிக்கையாளர்களுக்கு அடித்த ஜாக்பாட்.. இனி நோ டென்ஷன்.. EMI குறையும்..!!HDFC வங்கி வாடிக்கையாளர்களுக்கு அடித்த ஜாக்பாட்.. இனி நோ டென்ஷன்.. EMI குறையும்..!!

சுயதொழில் செய்யும், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள் இந்தக் கடனுக்கு விண்ணப்பிக்கலாம்.

கடன் பெற குறைந்தது இரண்டு வருட பணி அனுபவம் தேவை. ஒரே நிறுவனத்தில் ஓராண்டு பணிபுரிந்திருக்க வேண்டும்.

கிரெடிட் ஸ்கோர்: சிபில் ஸ்கோர் நன்றாக இருந்தால், கடன் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். 750 மதிப்பெண்களுக்கு மேல் இருந்தால் கடன் பெறுவது எளிதாக இருக்கும். மேலும் வட்டி விகிதம் குறைவாக இருக்க வாய்ப்புள்ளது.

இந்த கடன் செயலாக்க கட்டணம் ரூ. 6,500 ஆக இருக்கும். ஜிஎஸ்டி கூடுதலாக செலுத்த வேண்டும்.

EMIகள் 3 மாதங்கள் முதல் 72 மாதங்கள் வரை இருக்கும்.

கோயம்புத்தூர் ஐடி ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. Capgemini மெகா முதலீடு, அதுவும் 'இந்த' இடத்தில்..!கோயம்புத்தூர் ஐடி ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. Capgemini மெகா முதலீடு, அதுவும் 'இந்த' இடத்தில்..!

தேவையான ஆவணங்கள்: பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், ஆதார் அட்டை, முகவரிச் சான்று போன்ற அடையாளச் சான்று இருக்க வேண்டும்.

கடந்த மூன்று மாத வங்கி அறிக்கை

கடந்த இரண்டு மாத சம்பள சீட்டுகளுடன் படிவம் 16ஐ சமர்ப்பிக்க வேண்டும்.

மற்ற விவரங்கள் வங்கிகள் கேட்டால் அவையும் சேர்க்கப்பட வேண்டும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

HDFC Bank happy news bank offers special personal loans for womens upto 4000000

HDFC Bank offers special personal loans for women customers upto 4000000 you should need to know the full details about the loan

  • Block for 8 hours

  • Block for 12 hours

  • Block for 24 hours

  • Don't block

Read Entire Article