Flower price: கிறிஸ்மஸ் பண்டிகை எதிரொலி... ராக்கெட் வேகத்தில் உயர்ந்த பூக்களின் விலை...

3 weeks ago 11

Last Updated:December 24, 2024 2:50 PM IST

Flower Price: கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு முன்னிட்டு கன்னியாகுமரி தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை உயர்ந்துள்ளது.

X

Flower

Flower price: கிறிஸ்மஸ் பண்டிகை எதிரொலி... ராக்கெட் வேகத்தில் உயர்ந்த பூக்களின் விலை...

கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு கன்னியாகுமரி தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை உயர்ந்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தோவாளை மலர்ச்சந்தை தமிழகத்தின் மிகப்பெரிய மலர் சந்தையாகும். இங்கு தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்தும் பூக்கள் கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும், கன்னியாகுமரி மாவட்டத்தின் பிற பகுதிகளிலிருந்தும் பூக்கள் தோவாளை மலர் சந்தை கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், இங்கிருந்து திருவனந்தபுரம் உள்படக் கேரள மாநிலத்தின் பல பகுதிகளுக்கும் விற்பனைக்காகப் பூக்கள் வாங்கிச் செல்லப்படுகின்றன.

இதையும் படிங்க: Christmas Kudil: மரியாள் மடியில் வயநாடு... நெஞ்சை உருக்கும் சம்பவங்களைத் தாங்கிய கிறிஸ்மஸ் குடில்...

தோவாளை மலர்ச் சந்தையில் நேற்று மல்லிகை ரூ. 1900க்கும், பிச்சி ரூ.1000க்கும், சம்பங்கி ரூ.220க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில் கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு பூக்கள் விலை பன்மடங்கு உயர்ந்துள்ளது.

அதன்படி, பிச்சிப்பூ கிலோ ரூ.1500க்கும், மல்லிகைப்பூ கிலோ ரூ.2400க்கும், அரளிப்பூ கிலோ ரூ.150க்கும், வாடாமல்லி கிலோ ரூ.150க்கும், கேந்தி பூக்கள் கிலோ ரூ.130க்கும், சம்பங்கி கிலோ ரூ.270க்கும், முல்லைப் பூ கிலோ ரூ.900க்கும், ரோஸ் கிலோ ரூ.170க்கும் விற்பனையாகிறது.

மேலும், ஸ்டெம் ரோஸ் ஒரு கட்டு ரூ.350க்கும், துளசி கிலோ ரூ.50க்கும், தாமரைப் பூ ஒன்று ரூ.20க்கும், மரிக்கொழுந்து கிலோ ரூ.240க்கும், செவ்வந்தி கிலோ ரூ.270க்கும். விற்கப்படுகிறது.

இதையும் படிங்க: Christmas Cake Expo: கேக்ல நீந்தும் மீன்... சுவையான டைட்டானிக்... மக்களைக் கவர்ந்த கேக் கண்காட்சி...

இதுகுறித்து தோவாளை மலர் சந்தையைச் சேர்ந்த வியாபாரிகள் கூறும்பொழுது தற்போது நாளை கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் சபரிமலை மண்டலப் பூஜை நடைபெற இருப்பதால் பூக்களின் தேவை அதிகம் இருப்பதினால் பூக்கள் விலை வழக்கத்தை விட உயர்ந்துள்ளது.

மேலும், குமரி மாவட்டத்திற்கு வெளி மாவட்டங்களிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பூக்களின் அளவும் குறைவாக இருக்கிறது இதனால் தேவைக்கேற்பப் பூக்கள் கிடைப்பதில் சிரமம் ஏற்படுகிறது. இதன் காரணமாகப் பூக்களின் விலை உயர்ந்து வருகிறது எனத் தெரிவித்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

Location :

Kanniyakumari,Tamil Nadu

First Published :

December 24, 2024 2:47 PM IST

தமிழ் செய்திகள்/வணிகம்/

Thovalai Flower Market: கிறிஸ்மஸ் பண்டிகை எதிரொலி... ராக்கெட் வேகத்தில் உயர்ந்த பூக்களின் விலை...

Read Entire Article