Last Updated:December 23, 2024 12:37 PM IST
Christmas Greetings Card| 10 வருடங்களுக்குப் பிறகு கிறிஸ்துமஸ் கிரீட்டிங்ஸ் கார்டுக்கு வரவேற்பு.
கிறிஸ்துமஸ் கிரீட்டிங்ஸ் கார்டுக்கு வரவேற்பு
விழுப்புரத்தில் கிறிஸ்மஸ் பண்டிகை முன்னிட்டு புது ரக ஸ்டார்கள், கிரீட்டிங் கார்டுகள், பனி பொம்மைகள் விற்பனைக்கு வந்துள்ளது. இதனை பொதுமக்கள் ஆர்வமாக வாங்கி செல்கிறார்கள்.
கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்று கிறிஸ்துமஸ். இப்பண்டிகையை முன்னிட்டு இயேசுவின் பிறப்பை முன்னறிவிக்கும் வகையில், கிறிஸ்தவர்கள் தங்கள் இல்லங்களில் ஸ்டார்களை தொங்க விடுவது வழக்கம். அதேபோல், இயேசு பாலனாக மாட்டுத்தொழுவத்தில் பிறந்த நிகழ்வை நினைவுகூரும் வண்ணமாக வீடுகளில் குடில்களும் அமைப்பார்கள். இந்த குடிலில் இயேசு பாலன், அவரது பெற்றோர் சூசையப்பர்-மாதா, சம்மனசுகள், ராஜாக்கள் ஆகியோரின் சொரூபங்கள் வைக்கப்பட்டு இருக்கும். மேலும் ஆடு, மாடுகளின் சிறிய உருவங்களும் குடில்களில் இடம் பெற்றிருக்கும்.
அதுபோல, விழுப்புரத்தில் பழைய பேருந்து நிலையம், அடுத்துள்ள வீரவாழி அம்மன் கோயில் தெரு, ரயில்வே நிலையம், திருவிக வீதி, ஆகிய பகுதிகளிலுள்ள கடைவீதிகளில், கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வீடுகளில் தொங்கவிடப்படும் ஸ்டார்கள், கிறிஸ்மஸ் பண்டிகைக்கு தேவையான அனைத்து பொருட்களின் விற்பனை அதிகரித்துள்ளது என வியாபாரிகள் கூறுகின்றனர். ஒவ்வொரு வருடமும் பலவிதமான ஸ்டார்கள் விற்பனைக்கு வருகிறது. காகித ஸ்டார்கள், பிளாஸ்டிக் ஸ்டார்கள், போர்டு ஸ்டார்கள், எல்இடி ஸ்டார்கள், கலர் சேஞ்சிங் ஸ்டார்கள், என பல டிசைன்களில் ஸ்டார்கள் விற்பனைக்கு வந்துள்ளன.
இந்த வருடம் புதுவிதமாக டான்சிங் கிறிஸ்மஸ் தாத்தா, பனி பொம்மைகள், LED கேண்டில்கள், கிறிஸ்மஸ் தோரணங்கள், கிறிஸ்மஸ் மரங்கள் என அனைத்தும் விற்பனைக்கு வந்துள்ளன. தற்போது எந்த பண்டிகை என்றாலும் கிரீட்டிங்ஸ் (வாழ்த்துக்கள்) நாம் மொபைல் போனில் தான் ஷேர் பண்ணுவோம். ஆனால் தற்போது 10 வருடங்களுக்குப் பிறகு கிறிஸ்துமஸ் கிரீட்டிங் கார்டுகள் வந்துள்ளது. இதற்கான வரவேற்பு பொதுமக்களிடையே அதிகரித்து உள்ளது என வியாபாரி கண்ணன் தெரிவித்தார்.
கிறிஸ்மஸ் தேவையான அனைத்து பொருட்களும் 50 ரூபாய் முதல் 4000 -ம் ரூபாய் வரை என்ற விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. அதேபோல் குடில் செட்டுகளும் 300 ரூபாய் முதல் 4000 ரூபாய் வரை உள்ளது என வியாபாரி தெரிவித்தார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
First Published :
December 23, 2024 12:35 PM IST
Christmas Greetings Card: வாட்ஸ்அப் , இன்ஸ்டாகிராம் எல்லாம் அங்குட்டு போங்க... எப்படி போனேனோ அப்படியே திரும்ப வந்துட்டேன்...