டோரதி: திரை விமர்சனம்

buzzhy avatar   
buzzhy
Dorothy Movie Review: இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், இசைஞானி இளையராஜா இசையில், கீர்த்தி சுரேஷ், ரிஷிகாந்த் மற்றும் சனந்த் நடிப்பில் உருவாகி இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள 'டோரதி' திர..

கதைக்களம்

பள்ளி பருவத்தில் இருந்து நண்பர்களாக இருக்கும் கார்த்தி (ரிஷிகாந்த்) - சுப்பு (சனந்த்) வளர்ந்து ஊருக்குள் ரௌடிகளாக திரிகிறார்கள். என்னதான் கார்த்தி, சுப்புவின் நண்பனாக இருந்தாலும், சுப்புவின் அப்பா கார்த்தியை வேறொரு சாதி ஆளாகத்தான் பார்க்கிறார். மேலும், சுப்புவின் அம்மா மற்றும் தங்கை இருவரையும் அவர்தான் ஆணவக்கொலை செய்துள்ளார்.

இந்த சூழலில் சுப்புவின் அண்ணன், கீர்த்தி சுரேஷை (டோரதி) திருமணம் செய்து வீட்டிற்கு அழைத்து வருகிறார். அவருடன் சுப்பு பழக ஆரம்பிக்க, ஒரு நாள் அவர் தூக்குபோட்டு இறந்துபோகிறார். இது தற்கொலை இல்லை, என்னுடைய அப்பனும் அண்ணனும் தான் கொலை செய்துள்ளார்கள் என கோபமடைகிறார் சுப்பு.

டோரதி: திரை விமர்சனம் | Dorothy Movie Review

தாய், தங்கை, அண்ணி என அனைவரையும் வீட்டில் உள்ள ஆண்கள் கொலை செய்ததை நினைத்து வாடும் சுப்பு, ஒரு கட்டத்தில் தான் ஆண் இல்லை திருநங்கையாக மாறிவிட்டேன் என என்பதை வெளிப்படுத்துகிறார். இதனால் குடும்ப மானம் போய்விடும் என, கார்த்தியிடம் சுப்புவை கொலை செய்ய சொல்கிறார்கள்.

கார்த்தி சுப்புவை திருநங்கையாக ஏற்றுக்கொண்டாரா? இல்லை கொலை செய்தாரா? இதன்பின் என்னென்ன சம்பவங்கள் நடந்தன என்பதே படத்தின் மீதி கதை.

டோரதி: திரை விமர்சனம் | Dorothy Movie Review

படத்தை பற்றி அலசல்

இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் எடுத்துக்கொண்ட மிகவும் சென்சிட்டிவான கதைக்களத்தை நேர்த்தியான திரைக்கதையில் வழங்கியுள்ளார். மனிதர்கள் எவ்வளவு கொடூரமான மிருகமாக நடந்துகொள்கிறார்கள் என்பதை காட்டிய விதம், ஆணாக இருந்து திருநங்கையாக சனந்த் மாறும் காட்சி, கீர்த்தி சுரேஷின் மரணம், ரிஷிகாந்தின் தவிப்பு என பல விஷயங்கள் தாக்கத்தை ஏற்படுகிறது.

கதாபாத்திரங்களின் வடிவமைப்பு படத்திற்கு மிகப்பெரிய பலமாக உள்ளது. சொல்ல வந்த விஷயத்தை தெளிவாக கார்த்திக் சுப்பராஜ் கூறியிருந்தாலும், இது ஜனரஞ்சகமாக அனைவரும் ஏற்றுக்கொள்ளுவார்களா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

டோரதி: திரை விமர்சனம் | Dorothy Movie Review

திருநங்கையாக மாறிய தனது நண்பனை ஏற்க மறுத்து, அவனை அருவருப்பாக பார்க்கும் காட்சிகளில் இருந்து நண்பனை எப்படி கொலை செய்வது என தவிக்கும் காட்சிகள் வரை சிறப்பாக நடித்துள்ளார் நடிகர் ரிஷிகாந்த்.

திருநங்கையாக மாறியபின் தனது நடிப்பால் கவனத்தை ஈர்க்கிறார் சனந்த். குறிப்பாக தனது நண்பனோடு அவர் செல்லும் பயணம், அதில் இருவருக்கும் இடையே ஏற்படும் மன மாற்றங்கள் அனைத்தும் சிறப்பான காட்சிகள்.

டோரதி: திரை விமர்சனம் | Dorothy Movie Review

பாடல்களாலும் பின்னணி இசையாலும் படத்தை மிகப்பெரிய அளவில் தூக்கி பிடித்துள்ளார் இசைஞானி இளையராஜா. இவருடைய நாஸ்டால்ஜிக் பாடல்கள் மற்றும் பின்னணி இசையும் இப்படத்தில் இடம்பெற்று இருப்பது படத்தின் மிகப்பெரிய பலம். படத்திலுள்ள பல சென்சிட்டிவான காட்சிகளுக்கு பின்னணி இசையால் உயிர் கொடுத்துள்ளார். அன்றும் இன்றும் என்றும் ராஜா ராஜாதான்.

ஒளிப்பதிவு வேற லெவல். படத்தை இன்டர்நேஷனல் லெவலில் காட்டியுள்ளார் ஒளிப்பதிவாளர் திரு. மற்ற அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களின் ஒர்க்ஸ் படத்திற்கு பலம் சேர்க்கிறது.

பிளஸ் பாயிண்ட்ஸ்

  • நடிகர்கள், நடிகைகளின் பங்களிப்பு
  • திரைக்கதை
  • கதைக்களம்
  • இசைஞானியின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை
  • தாக்கத்தை ஏற்படுத்தும் காட்சிகள்

மைனஸ் பாயிண்ட்ஸ்

  • இந்த கதையை அனைவரும் ஏற்றுக்கொள்வார்களா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
  • சிறு வயதில் இருந்து நண்பர்களாக இருந்தவர்களில் ஒருவர் திருநங்கையாக மாறியபின், இருவருக்கும் இடையே காதல் மலர்வது போல் காட்டியது. 

மொத்தத்தில் டோரதி மேக்கிங் நன்றாக இருந்தாலும், சொன்ன கருத்து அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படுமா என்பது கேள்விக்குறிதான்.

டோரதி: திரை விமர்சனம் | Dorothy Movie Review

No comments found