800க்கும் மேல் கிரெடிட் ஸ்கோர் இருந்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்?

1 month ago 14

Last Updated:December 17, 2024 6:35 PM IST

Credit score | 800க்கு மேல் கிரெடிட் ஸ்கோர், பிரீமியம் கிரெடிட் கார்டுகளுக்கான வாய்ப்புகள் அல்லது கவர்ச்சிகரமான கடன் வழங்கல்கள் போன்றவற்றை எளிதாக்குவதுடன், உங்கள் நிதி நிலையை மேம்படுத்த இது ஒரு சக்திவாய்ந்த கருவியாக செயல்படுகிறது.

News18

அதிகமான கிரெடிட் ஸ்கோர், மலிவான கடன்கள் மற்றும் சிறந்த காப்பீட்டுத் தள்ளுபடிகளை வழங்குவதன் மூலம் நிதி ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றன. அதிகமான கிரெடிட் ஸ்கோருடன், குறைக்கப்பட்ட காப்பீட்டு பிரீமியங்கள், சிறந்த கடன் வட்டி விகிதங்கள் மற்றும் பல்வேறு சலுகைகளை வழங்கும் பிரீமியம் கிரெடிட் காரடுகள் போன்றவற்றை பெற முடியும்.

800க்கு மேல் கிரெடிட் ஸ்கோர், பிரீமியம் கிரெடிட் கார்டுகளுக்கான வாய்ப்புகள் அல்லது கவர்ச்சிகரமான கடன் வழங்கல்கள் போன்றவற்றை எளிதாக்குவதுடன், உங்கள் நிதி நிலையை மேம்படுத்த இது ஒரு சக்திவாய்ந்த கருவியாக செயல்படுகிறது.

இந்த விதிவிலக்கான கிரெடிட் ஸ்கோர், வலுவான நிதிப் பொறுப்புக்கு முக்கிய காரணமாகிறது மற்றும் பணத்தை மிச்சப்படுத்தக்கூடிய பல்வேறு நன்மைகளை வழங்குகிறது. அதுமட்டுமின்றி, பல்வேறு நிதி சம்பந்தப்பட்ட தயாரிப்புகளில் மிகவும் சாதகமான விதிமுறைகளுக்கு உங்களை அனுமதிக்கிறது. சிறந்த கிரெடிட் ஸ்கோரை பராமரிப்பது, எவ்வாறு உங்களுக்குச் சாதகமான சூழலை உருவாக்கும் என்பது பற்றிய தகவலை இங்கே பார்க்கலாம்.

மலிவான காப்பீட்டு பிரீமியங்கள்

காப்பீட்டு நிறுவனங்கள், ஒரு தனி நபரை காப்பீட்டில் இணைக்கும் முன், அபாயத்தை மதிப்பிடுவதற்காக கிரெடிட் ஸ்கோரைப் பயன்படுத்துகின்றன. அதிக கிரெடிட் ஸ்கோர் உள்ளவர்கள் பெரும்பாலும் நிதி ரீதியாக அதிக பொறுப்புள்ளவர்களாக பார்க்கப்படுகிறார்கள். எனவே, காப்பீட்டாளர்கள் அவர்களுக்கு குறைந்த பிரீமியங்களை வழங்குகிறார்கள்.

கார், உடல்நலம் மற்றும் பொதுக் காப்பீட்டுக் கொள்கைகளுக்கு இது பொதுவாக பொருந்தும். இதில் வலுவான கிரெடிட் ஸ்கோர்களைக் கொண்ட தனி நபர்கள் சிறப்புத் தள்ளுபடியின் மூலம் பயனடையலாம்.

கடன்களுக்கு குறைந்த வட்டி விகிதங்கள்

ஒரு சிறந்த கிரெடிட் ஸ்கோரின் மிக முக்கியமான நன்மைகளில் ஒன்று குறைந்த வட்டி விகிதத்தில் கடன்களைப் பெறுவதாகும். வீட்டுக் கடன், கார் கடன் அல்லது தனிநபர் கடன் என எதுவாக இருந்தாலும் கடன் வழங்குபவர்கள், அதிக கிரெடிட் ஸ்கோர்களைக் கொண்ட நபர்களுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் போட்டி போட்டுக்கொண்டு கடன் வழங்குவதற்கு முன்வரும் வாய்ப்புகள் அதிகம். இது மாதாந்திர பேமெண்டடை குறைத்து, கணிசமான நீண்ட கால சேமிப்புக்கு முக்கிய காரணமாகிறது.

இதையும் படிக்க: ஜன.31-ம் தேதியே கடைசி : மத்திய அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதிய ஆணையம் வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டுதல்கள் என்னென்ன?

ஒரு வலுவான கிரெடிட் ஸ்கோர், நிதி நிலைத்தன்மை மற்றும் பொறுப்பான கடன் மேலாண்மை ஆகியவற்றைக் குறிக்கிறது, இது சிறந்த கடன் விதிமுறைகளுக்கான பேச்சுவார்த்தையை மேலும் எளிதாக்குகிறது.

சிறந்த கிரெடிட் கார்டு சலுகைகள் மற்றும் வெகுமதிகள்

800-க்கு மேல் கிரெடிட் ஸ்கோர் இருந்தால், அதிக வரம்புகள், சிறந்த வெகுமதிகள் மற்றும் குறைந்த வட்டி விகிதங்களை வழங்கும் பிரீமியம் கிரெடிட் கார்டுகளுக்கு நீங்கள் தகுதி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இந்த கார்டுகள் பெரும்பாலும் விமான நிலைய லாஞ்ச் அணுகல், கேஷ்பேக் மற்றும் சில பொருட்களை வாங்கும்போது, சிறந்த வெகுமதிகள் மற்றும் சலுகைகளுடன் வருகின்றன.

கூடுதலாக, சிறந்த கிரெடிட் ஸ்கோரைக் கொண்ட நபர்கள், குறைந்த வட்டி விகிதங்கள் அல்லது அதிகரித்த கடன் வரம்புகள் போன்ற சிறந்த சலுகைகளுக்காக பேச்சுவார்த்தை நடத்தும் வாய்ப்பைப் பெறலாம். இது நிதி நெகிழ்வுத் தன்மையை மேலும் மேம்படுத்தலாம்.

இதையும் படிக்க: எல்ஐசி பீமா சகி யோஜனா: தகுதி, உதவித்தொகை மற்றும் அப்ளிகேஷன் விவரங்கள்...!

ஒட்டுமொத்தமாக பார்த்தால், 800க்கு மேல் அதிக கிரெடிட் ஸ்கோர், குறைந்த செலவுகள், சிறந்த நிதி ஒப்பந்தங்கள் மற்றும் கூடுதல் வாய்ப்புகளை வழங்குவதற்கான முக்கிய காரணமாகிறது, இது குறுகிய கால மற்றும் நீண்ட கால நிதி நல்வாழ்வை மேம்படுத்த உதவுகிறது.

First Published :

December 17, 2024 6:35 PM IST

தமிழ் செய்திகள்/வணிகம்/

800க்கும் மேல் கிரெடிட் ஸ்கோர் இருந்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா...? விரிவான தகவல்...

Read Entire Article