முன்னதாக 2014 செப்டம்பரில், அரசு சம்பள வரம்பை ரூ.6,500ல் இருந்து ரூ.15,000 ஆக இரட்டிப்பாக்கியது
- 1-MIN READ | News18 Tamil Tamil Nadu
Last Updated :December 18, 2024, 8:07 PM IST Published by
Musthak
01
மத்திய அரசு ஊழியர் வருங்கால வைப்பு நிதி (இபிஎஃப்) திட்டத்தின் கீழ் சம்பள வரம்பை தற்போது ரூ.15 ஆயிரத்தில் இருந்து ரூ.21 ஆயிரமாக உயர்த்த வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
02
தற்போதுள்ள இபிஎப் வரம்பை அதிகரிக்க வேண்டும் என்று சில நாட்களாக ஊழியர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதிகரித்து வரும் கோரிக்கைகளை அடுத்து, இவைகளை நிறைவேற்ற மத்திய அரசு தயாராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் மத்திய நிதித்துறைக்கு பரிந்துரைகளை அனுப்பியுள்ளது.
03
பொதுவாக, EPFக்கு ஒரு பணியாளரின் பங்களிப்பு சம்பளத்தில் 12 சதவீதத்திலிருந்து கழிக்கப்படும். நிறுவனத்தின் உரிமையாளர் மேலும் 12 சதவீதத்தை சேர்த்து பிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்கிறார். எனவே அதிகபட்ச சம்பள வரம்பை இப்போது உயர்த்தினால், ஊழியர் அதிக பலன் அடைவார்.
04
முன்னதாக 2014 செப்டம்பரில், அரசு சம்பள வரம்பை ரூ.6,500ல் இருந்து ரூ.15,000 ஆக இரட்டிப்பாக்கியது. இப்போது அந்த வரம்பை ரூ.21,000 ஆக உயர்த்த அரசு யோசித்து வருகிறது.
05
இந்த சம்பள வரம்பு அதிகரிப்பு EPF, ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டத்தை (EPS) பாதிக்கிறது. ஒரு ஊழியரின் அடிப்படைச் சம்பளம் மாதம் 15,000 ரூபாய்க்கு மேல் இருந்தால், அவர்கள் EPF திட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தாலும், EPS இல் சேர முடியாது என்று வருங்கால வைப்பு நிதிச் சட்டங்கள் கூறுகின்றன.
06
ஆனால் அந்த வரம்பை ரூ.21,000 ஆயிரமாக உயர்த்தினால் பலருக்கு நிவாரணம் கிடைக்கும். இந்த மாற்றம் ஊழியர்களின் ஓய்வுக்குப் பிறகு ஓய்வூதியம் பெறுவதற்குத் தகுதியுடையதாக இருக்கும். இருப்பினும், ஊழியர்கள் இபிஎஸ் உறுப்பினர்களாக மாறினால், இபிஎஃப் கணக்கில் நிறுவன உரிமையாளரின் பங்களிப்பு குறைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
07
ஊழியர்கள் EPS திட்டத்தில் சேர்ந்த பிறகு, நிறுவனத்தின் 12% பங்களிப்பில் 8.33% EPS கணக்கிற்கு மாற்றப்படுகிறது. தற்போது இபிஎஸ் பங்களிப்பு ரூ.15 ஆயிரம் அடிப்படை சம்பளத்தில் கணக்கிடப்படுகிறது. ரூ.1250 ஆக இருக்கும். இதே சம்பள வரம்பை ரூ.21 ஆயிரமாக உயர்த்தினால் மாதம் ரூ.1749 வரை என மாறும். இதன் மூலம் பணியாளர்கள் ஓய்வு பெற்ற பிறகு அதிக ஓய்வூதியம் பெற முடியும்.
- FIRST PUBLISHED : December 18, 2024, 8:07 PM IST
7 கோடி பி.எஃப். சந்தாதாரர்களுக்கு குட் நியூஸ்… இந்த மாற்றத்தை கொண்டு வரப்போகிறது மத்திய அரசு?
மத்திய அரசு ஊழியர் வருங்கால வைப்பு நிதி (இபிஎஃப்) திட்டத்தின் கீழ் சம்பள வரம்பை தற்போது ரூ.15 ஆயிரத்தில் இருந்து ரூ.21 ஆயிரமாக உயர்த்த வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
MORE
GALLERIES