5 ரூபாய்க்கு 1 கிலோ தக்காளி... மக்களைக் கவர்ந்த வியாபாரியின் செயல்...

1 month ago 19

Last Updated:December 18, 2024 8:06 PM IST

காய்கறி விலை நாளுக்கு நாள் உயரும் நிலையில் இந்த கடையில் 1 கிலோ தக்காளி ரூ.5க்கும், 1 கிலோ வெள்ளைப்பூண்டு ரூ.300க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

X

5

5 ரூபாய்க்கு 1 கிலோ தக்காளி... மக்களைக் கவர்ந்த வியாபாரியின் செயல்...

தமிழகத்தில் கடந்த மாதம் முதல் பரவலாகப் பெய்து வரும் மழையால் காய்கறி சாகுபடி கணிசமாகக் குறைந்துள்ளது. இதனால் மார்க்கெட்டுக்கு காய்கறி வரத்து குறைந்ததால் காய்கறிகள் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது.

அன்றாடம் பயன்படுத்தும் காய்கறிகள் விலை உயர்ந்து வருவது பொதுமக்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், கன்னியாகுமரியில் ஒரு காய்கறிக் கடையில் ரூ.5க்கு ஒரு கிலோ தக்காளி விற்பனை செய்து வாடிக்கையாளர்களைக் கவர்ந்துள்ளனர்.

கன்னியாகுமரியின் மற்ற பகுதிகளில் தக்காளி கிலோ 30 ரூபாய், பூண்டு கிலோ 400 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், கலெக்டர் ஆபிஸ் அருகே துவங்கப்பட்டுள்ள ஒரு புதிய காய்கறிக் கடையில் ஒரு கிலோ தக்காளி 5 ரூபாய்க்கும், ஒரு கிலோ பூண்டு 300 ரூபாய்க்கும் விற்பனை செய்கின்றனர். இந்த திறப்பு விழா சலுகையைப் பயன்படுத்தி மக்கள் முண்டியடித்து தக்காளி வாங்கிச் சென்றனர்.

இதையும் படிங்க: PWD Vacancy: பொதுப்பணித்துறையில் 760 அப்ரண்டிஸ் காலியிடங்கள்... உடனே அப்ளை பண்ணுங்க...

இதுகுறித்து கடையின் உரிமையாளர் சாம் கூறுகையில், “எங்களது கடையின் புதிய கிளை நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகத்திற்கு அருகில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழாவை முன்னிட்டு இன்று ஒரு நாள் மட்டும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு கிலோ தக்காளி 5 ரூபாய்க்கு விற்று வருகிறோம்.

மேலும், இந்த வாரம் முழுவதும் பூண்டு கிலோ 300 ரூபாய்க்கும் பல்லாரி கிலோ 60 ரூபாய்க்கு என சலுகை விலையில் விற்று வருகிறோம். இன்று ஒரு நாள் மட்டுமே எங்களது கடையில் 250 கிலோ தக்காளி விற்பனையாகியுள்ளது” எனத் தெரிவித்தார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

Location :

Kanniyakumari,Tamil Nadu

First Published :

December 18, 2024 8:04 PM IST

Read Entire Article