40 வயதாகும் நபர் 50 வயதில் ஓய்வு பெற எவ்வளவு பணம் முதலீடு செய்ய வேண்டும்?

2 weeks ago 15

Published: Saturday, January 11, 2025, 2:00 [IST]

சீக்கிரமாக பணி ஓய்வு பெற்று விட வேண்டும் என்ற எண்ணம் இந்தியர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. முன்கூட்டியே ஓய்வு பெற வேண்டும் என்றால் அதற்கு சிறுவயதிலிருந்தே திட்டமிட்டு பணத்தை முதலீடு செய்து சேமிக்க வேண்டும்.

ஒருவேளை நீங்கள் சிறுவயதிலேயே முதலீடு மற்றும் சேமிப்பு செய்ய தவற விட்டு தற்போது உங்களுக்கு 40 வயதாகிறது, அடுத்த 10 ஆண்டுகளில் அதாவது 50 வயதிலேயே ஓய்வு பெற வேண்டும் என எண்ணினால் அது சாத்தியமாகுமா என்பது குறித்து நிபுணர்கள் அளிக்கும் பதிலை நாம் தற்போது தெரிந்து கொள்ளலாம்.

40 வயதாகும் நபர் 50 வயதில் ஓய்வு பெற எவ்வளவு பணம் முதலீடு செய்ய வேண்டும்?

50 வயதில் ஓய்வு பெற வேண்டும் என எண்ணும் உங்களுக்கு தற்போது 40 வயது ஆகிறது என்றால் தேவையான நிதி தொகுப்பை உருவாக்குவதற்கு உங்களிடம் 10 ஆண்டுகள் மட்டுமே இருக்கின்றன. ஓய்வு பெறும் காலத்தில் உங்களுக்கு ஓராண்டுக்கு எவ்வளவு பணம் செலவாகும் என்பதை முதலில் கணக்கு செய்து கொள்ளுங்கள். வீட்டு வாடகை, மருத்துவ செலவு, போக்குவரத்து செலவு ,அன்றாட வாழ்க்கை செலவினங்களை நீங்கள் கணக்கிட வேண்டும்.

தற்போது நீங்கள் செய்யக்கூடிய மாதாந்திர செலவுகளில் பல மடங்கு அதிகமாக அப்பொழுது நீங்கள் செலவு செய்ய வேண்டி இருக்கும். வயது ஆக ஆக உங்களுக்கான மருத்துவ தேவைகள் அதிகரிக்கும் என்பதால் மருத்துவ செலவினங்களை முக்கிய கவனத்தில் கொண்டு ஓய்வு கால பணத்தொகுப்பை திட்டமிட வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள். சரியான மருத்துவ காப்பீடு வைத்திருப்பது நலம் என அறிவுரை வழங்குகின்றனர்.

தற்போது உங்களுக்கு 40 வயதாகிறது உங்களுக்கு ஒரு ஆண்டுக்கு 18 லட்சம் ரூபாய் செலவாகிறது என வைத்துக் கொண்டால் 10 ஆண்டுகளில் ஓய்வுபெறும் போது உங்களுக்கு ஆண்டுக்கு தேவைப்படும் தொகையை 18 லட்சத்தை 25 ஆல் பெருக்க வேண்டும். அப்படி என்றால் உங்களுக்கு கிடைக்கக்கூடிய தொகை 4.5 கோடி ரூபாய். எனவே 50 வயதாகும்போது உங்களிடம் 4.5 கோடி ரூபாய் பணம் இருக்க வேண்டும்.

தற்போது உங்களிடம் எவ்வளவு சேமிப்பு இருக்கிறது அந்த சேமிப்பு ஆண்டுதோறும் எந்த விகிதத்தில் வளர்ச்சி அடைகிறது ,அது பணவீக்கத்தைவிட அதிக லாபம் தருபவையாக இருக்கிறதா என்பதை மதிப்பாய்வு செய்ய வேண்டும். 40 வயதில் இருப்பவர்கள் அடுத்த 10 ஆண்டுகளில் ஓய்வு பெற வேண்டும் என விரும்பினால் தங்களுடைய வருமானத்தில் கிட்டத்தட்ட பாதி தொகையை அவர்கள் முதலீடு செய்ய வேண்டும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

பார்கிங் இடம் இருந்தால் மட்டுமே புது கார் வாங்க முடியும்.. மும்பையில் புது ரூல்ஸ்..?! பார்கிங் இடம் இருந்தால் மட்டுமே புது கார் வாங்க முடியும்.. மும்பையில் புது ரூல்ஸ்..?!

உதாரணம்:

வயது - 40
ஆண்டு செலவு - 18 லட்சம் ரூபாய்
ஓய்வு பெறும் போது தேவையான நிதி - 4.5 கோடி ரூபாய்
தற்போதுள்ள சேமிப்பு - 1கோடி ரூபாய்
சேமிப்பு வளரும் விகிதம் - 5%
ஓய்வு பெறும் வயது - 50

ஓய்வுபெற 10 ஆண்டுகளே இருக்கின்றன என்பதால் இந்த ஆண்டுக்கு 24 லட்சம் ரூபாயை முதலீடு செய்ய வேண்டும். அப்படி சேமித்தால் மட்டுமே 10 ஆண்டுகளில் நல்ல ஓய்வு காலத்திற்கான ஒரு நிதி தொகுப்பை பெற முடியும். எனவே உங்கள் வருமானம் குறைந்தது ஆண்டுக்கு 50 லட்சமாக இருந்தால் மட்டுமே இந்த தொகையை சேமிக்க முடியும்.

என்னடா டெஸ்லா, பெராரி.. BYD இறக்கியிருக்கான் பார்.. ஜம்பிங் சூப்பர் கார் - 'யாங்வாங் யூ9'..!! என்னடா டெஸ்லா, பெராரி.. BYD இறக்கியிருக்கான் பார்.. ஜம்பிங் சூப்பர் கார் - 'யாங்வாங் யூ9'..!!

ஓய்வுகாலத்தில் வருமானம் இருக்காது ஆனால் செலவு அதிகமாக இருக்கும் எனவே குறைந்த வாழ்க்கை செலவினம் கொண்ட இடங்களுக்கு வீட்டை மாற்றுவது, வாழ்க்கை செலவினங்களை குறைக்கும் சில குறிப்பிட்ட பழக்க வழக்கங்களை மாற்றுவது உதவியாக இருக்கும்.

Story written by: Devika

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Planning retirement at the age of 50? – here is what you should do?

Here’s a detailed guide exploring the financial principles and strategies necessary to retire at the age of 50.

  • Block for 8 hours

  • Block for 12 hours

  • Block for 24 hours

  • Don't block

Read Entire Article