4 நாட்களுக்குப் பிறகு மீண்டும் விண்ணை முட்டிய தங்கம் விலை.. இன்று சவரனுக்கு ரூ. 80 அதிகரிப்பு!

1 week ago 12

Published: Wednesday, January 8, 2025, 12:37 [IST]

ஜனவரி 8-ஆம் தேதியான இன்றைய நிலவரப்படி தங்கம் விலை கிராமுக்கு 10 ரூபாய் அதிகரித்திருக்கிறது. கடந்த 4 நாட்களாக தங்கம் விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் சீராக இருந்து வந்தது. இந்நிலையில் இன்று சவரனுக்கு 80 ரூபாய் அதிகரித்திருக்கிறது. இன்று ரீடைல் சந்தையில் 1 கிராம் 22 கேரட் தங்கம் ரூ. 7,225-க்கும், 1 கிராம் 24 கேரட் தங்கம் ரூ. 7,882-க்கும் விற்பனையாகிறது. இந்தப் பதிவில் சென்னை, கோவை, மதுரை போன்ற தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் குறித்து பார்ப்போம்.

நேற்றைய (07/01/2025) தங்கம் விலை நிலவரம்: தமிழகத்தின் முக்கிய நகரங்களான சென்னை, கோவை மற்றும் மதுரையில் இன்று 1 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.7,215-க்கும், 1 சவரன் 22 கேரட் தங்கம் ரூ. 57,720-க்கும், 10 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.72,150-க்கும் விற்பனையானது.

 4 நாட்களுக்குப் பிறகு மீண்டும் விண்ணை முட்டிய தங்கம் விலை.. இன்று சவரனுக்கு ரூ. 80 அதிகரிப்பு!


1 கிராம் 24 கேரட் தங்கம் ரூ. 7,871-க்கும், 1 சவரன் 24 கேரட் தங்கம் ரூ. 62,968-க்கும், 10 கிராம் 24 கேரட் தங்கம் ரூ. 78,710-க்கும் விற்பனையானது. 1 கிராம் 18 கேரட் தங்கம் ரூ. 5,960-க்கும், 1 சவரன் 18 கேரட் தங்கம் ரூ.47,680-க்கும், 10 கிராம் 18 கேரட் தங்கம் ரூ. 59,600-க்கும் விற்பனையானது.

இன்றைய (08/01/2025) தங்கம் விலை நிலவரம்: சென்னை, கோவை, மதுரை போன்ற முக்கிய நகரங்களில் இன்று 1 கிராம் 22 கேரட் தங்கம் ரூ. 10 அதிகரித்து ரூ. 7,225-க்கும், 1 சவரன் 22 கேரட் தங்கம் ரூ. 80 அதிகரித்து ரூ. 57,800-க்கும், 10 கிராம் 22 கேரட் தங்கம் ரூ. 100 அதிகரித்து ரூ.72,250-க்கும் விற்பனையாகிறது.

1 கிராம் 24 கேரட் தங்கம் ரூ. 11 அதிகரித்து ரூ. 7,882-க்கும், 1 சவரன் 24 கேரட் தங்கம் ரூ. 88 அதிகரித்து ரூ. 63,056-க்கும், 10 கிராம் 24 கேரட் தங்கம் ரூ. 110 அதிகரித்து ரூ. 78,820-க்கும் விற்பனையானது. 1 கிராம் 18 கேரட் தங்கம் ரூ. 5 அதிகரித்து 5,965-க்கும், 1 சவரன் 18 கேரட் தங்கம் ரூ. 40 அதிகரித்து ரூ. 47,720-க்கும், 10 கிராம் 18 கேரட் தங்கம் ரூ. 50 அதிகரித்து ரூ. 59,650-க்கும் விற்பனையாகிறது.

இன்றைய வெள்ளி விலை நிலவரம்: இன்று வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி 100 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சென்னை, கோவை, மதுரை போன்ற முக்கிய நகரங்களில் இன்று 1 கிலோ வெள்ளி ரூ.1,00,000-த்திற்கு விற்பனையாகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold Rate Today (January 08, 2025): 22-Carat Gold Price Rises by Rs.10 per Gram in Chennai and Coimbatore

Check today's gold rate (January 08, 2025) as 22-carat gold prices increase by Rs.10 per gram. Stay updated with the latest gold price trends

Read Entire Article