Last Updated:December 14, 2024 5:19 PM IST
ஒவ்வொரு முறை சாப்பிட்ட பிறகும் சிறிது நேரம் கழித்து சுமார் 10 நிமிடங்கள் நடப்பது செரிமானத்தை மேம்படுத்த, ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த, உடல் எடையை கட்டுப்படுத்த மற்றும் மன ஆரோக்கியத்தை நன்றாக வைத்திருக்க உதவும் என்கிறார்கள் நிபுணர்கள்.
பொதுவாக உணவு சாப்பிட்ட பிறகு அதிகமாக உடற்பயிற்சி செய்வதை தவிர்க்கவே பெரும்பாலும் நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள். ஆனால் நீங்கள் உங்கள் எடையைக் கட்டுப்படுத்தவும், சிறந்த ஆரோக்கியத்தை உறுதிப்படுத்தவும் சாப்பிட்ட பிறகு செய்ய கூடிய மிகவும் எளிமையான மற்றும் பயனுள்ள வழி உள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா.?
ஆம், ஒவ்வொரு முறை சாப்பிட்ட பிறகும் சிறிது நேரம் கழித்து சுமார் 10 நிமிடங்கள் நடப்பது செரிமானத்தை மேம்படுத்த, ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த, உடல் எடையை கட்டுப்படுத்த மற்றும் மன ஆரோக்கியத்தை நன்றாக வைத்திருக்க உதவும் என்கிறார்கள் நிபுணர்கள். நடைபயிற்சி மிக எளிதான உடல் செயல்பாடுகளில் ஒன்று மற்றும் எங்கு வேண்டுமானாலும் இதனை செய்யலாம் என்பதே இதற்கு பிளஸ் பாயின்ட்டாக உள்ளது.
ஒவ்வொரு முறை சாப்பிட்ட பிறகும் 10 நிமிடங்கள் வாக்கிங் செல்வதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி விரிவாக இங்கே பார்க்கலாம்...
செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது:
சாப்பிட்ட பின் நடப்பது செரிமான கோளாறு மற்றும் உப்புசத்தை குறைக்க உதவும். சாப்பிட்ட பிறகு மேற்கொள்ளப்படும் நடைப்பயிற்சி நம் வயிறு மற்றும் குடலை ஆக்ட்டிவாக இயங்க வைத்து, சாப்பிட்ட உணவானது பிரச்சனையின்றி செரிமான அமைப்பிற்கு வேகமாக சென்று செரிமானமாக உதவுவதாக ஓரு ஆய்வு கண்டறிந்துள்ளது. இரிடபிள் பவுல் சின்ட்ரோம் உள்ளவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது:
ஸ்போர்ட்ஸ் மெடிசினில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வு, கிளைசெமிக் கட்டுப்பாட்டில் சாப்பிட்ட பின் செய்யும் நடைபயிற்சி வழங்கும் நன்மைகளை எடுத்துக்காட்டுகிறது. சாப்பிட்ட பிறகு சில நிமிடங்கள் வாக்கிங் செல்வது ரத்த சர்க்கரை அளவில் காணப்படும் ஏற்ற இறக்கங்களை மாற்றியமைக்கிறது மற்றும் இன்சுலின் நிலைத்தன்மையை (insulin stability) பராமரிக்கிறது.
Also Read | பச்சை மற்றும் முளைத்த உருளைக்கிழங்குகளை சாப்பிடக்கூடாது..! மீறினால் என்ன ஆகும் தெரியுமா..?
ரத்த அழுத்தத்தை குறைக்கிறது:
சாப்பிட்ட பிறகு நடப்பது ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது, இதனால் இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயமும் குறைகிறது. தினமும் மூன்று முறை தலா 10 நிமிடங்கள் வாக்கிங் மேற்கொள்வது உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு டயஸ்டாலிக் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் என்று ஆய்வு கூறுகிறது. மேலும் இதய ஆரோக்கியமும் மேம்படுகிறது. எனவே ஒவ்வொரு வேளை ( 3 வேளை ) சாப்பிடும் போதும் சாப்பிட்டு முடித்த பிறகு 10 நிமிடங்கள் வாக்கிங் செல்ல வேண்டும் என்பதை இலக்காக கொள்ளலாம்.
மன ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது:
சாப்பிட்ட பிறகு மேற்கொள்ளும் மிதமான வாக்கிங் நம் மனநிலையை நன்றாக வைத்திருக்க உதவுகிறது. உணவுக்கு பிறகான மிதமான உடற்பயிற்சி கார்டிசோல் போன்ற மன அழுத்த ஹார்மோன்களைக் குறைக்கிறது மற்றும் என்டோர்பின் மற்றும் ஆக்ஸிடாஸின் போன்ற நல்ல-உணர்வை ஊக்குவிக்கும் ஹார்மோன்ஸ்களை அதிகரிக்க செய்கிறது. எனவே சாப்பிட்ட பிறகான 10 நிமிட வாக்கிங் மனதளவில் நன்றாக உணர உதவுகிறது.
10 நிமிடங்கள் என்றில்லாமல் 2-5 நிமிடங்கள் சாப்பிட்ட பிறகு செல்லும் வாக்கிங் கூட ஆரோக்கியத்தில் நேர்மறை மாற்றத்தை ஏற்படுத்தும். அலுவலகத்தில் அல்லது குடியிருப்புகளில் லிஃப்ட் இருந்தால் அதற்கு பதிலாக படிக்கட்டுகளில் ஏறுவது மற்றும் மதிய உணவுக்கு பின் சில நிமிட வாக்கிங் போன்ற எளிய பழக்கங்களை முயற்சித்து பாருங்கள்.
First Published :
December 14, 2024 5:19 PM IST