3 வாரம் ஆகியும் மஞ்சள் கயிற்றை மாற்றாதது ஏன்? - கீர்த்தி சுரேஷ் பதில்

3 weeks ago 16

Last Updated:January 03, 2025 5:15 PM IST

திருமணத்தை முடித்த கையோடு கீர்த்தி சுரேஷ் தான் நடித்த பேபி ஜான் படத்திற்கான புரொமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இந்த படம் கடந்த 25 ஆம் தேதி வெளிவந்தது. அதற்கு முன்பு நடந்த பிரபலப்படுத்தும் நிகழ்ச்சிகளில் பங்கேற்ற கீர்த்தி சுரேஷ் தங்க தாலிக்கு பதிலாக மஞ்சள் கயிற்றை அணிந்திருந்தார்.

கீர்த்தி சுரேஷ்

நடிகை கீர்த்தி சுரேஷின் திருமணம் முடிந்து 3 வாரங்கள் ஆகியுள்ள நிலையில், அவர் தங்க தாலிக்கு பதிலாக மஞ்சள் கயிற்றை தொடர்ந்து அணிந்து வருகிறார். பல்வேறு நிகழ்ச்சிகளிலும் அவர் மஞ்சள் கயிற்றுடன் காட்சி அளிப்பதால் அதுகுறித்து இணையத்தில் பல்வேறு யூகங்களை நெட்டிசன்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.

நடிகை கீர்த்தி சுரேஷுக்கும் அவரது நீண்ட நாள் காதலரான ஆன்டனி தட்டில் என்வருக்கும் இடையே கடந்த 12 ஆம் தேதி திருமணம் நடந்தது. கோவாவில் நடைபெற்ற இந்த திருமணத்தில் முக்கிய விஐபிக்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

திருமணத்தை முடித்த கையோடு கீர்த்தி சுரேஷ் தான் நடித்த பேபி ஜான் படத்திற்கான புரொமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இந்த படம் கடந்த 25 ஆம் தேதி வெளிவந்தது. அதற்கு முன்பு நடந்த பிரபலப்படுத்தும் நிகழ்ச்சிகளில் பங்கேற்ற கீர்த்தி சுரேஷ் தங்க தாலிக்கு பதிலாக மஞ்சள் கயிற்றை அணிந்திருந்தார்.

திருமணமாகி 3 வாரங்கள் கடந்த நிலையிலும் கீர்த்தி சுரேஷ் மஞ்சள் கயிற்றை கழற்றாமல் இருப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது. இதற்டையே துரதிருஷ்டவசமாக அவர் நடித்த பேபி ஜான் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை.

இந்நிலையில் தொடர்ந்து மஞ்சள் கயிற்றை அணிவது ஏன் என்று நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற கீர்த்தி சுரேஷிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் மஞ்சள் கயிற்றை ஒரு குறிப்பிட்ட நாட்களுக்கு அகற்றக் கூடாது என்பதால் அதை தொடர்ந்து அணிந்து வருகிறேன்.

இதையும் படிங்க - OTT | சைக்காலஜிக்கல் த்ரில்லர் ரசிகர்களுக்கான விருந்து... வீக் எண்ட்ல மிஸ் பண்ணக்கூடாத படம்!

ஜனவரி இறுதியில் நல்ல நாள் வருகிறது. அப்போது மஞ்சள் கயிற்றை அகற்றி விடுவேன். இது புனிதமாகவும், சக்தி வாய்ந்ததாகவும் கருதப்படுகிறது. அதனை அணிவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்று தெரிவித்தார்.

First Published :

January 02, 2025 10:04 PM IST

Read Entire Article