ஆனால், அட்டகாசமான ஸ்கிரிப்ட் என ரசிகர்களால் பாராட்டப்பட்டது. ஒரு கொலை, அதைத் தொடர்ந்து நடக்கும் விசாரணை, ட்விஸ்ட், மர்மம், எங்கும் விலகாத திரைக்கதை ஆகியவை படத்தைக் கண்டிப்பாகப் பரிந்துரை செய்யலாம் என்ற எண்ணத்தை உருவாக்கிவிடும். அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் இந்தப் படம் காணக் கிடைக்கிறது.
- 1-MIN READ | News18 Tamil Tamil Nadu
Last Updated :January 6, 2025, 12:19 PM IST Published by
Khalilullah S
01
ஒரு த்ரில்லர் படம் என எடுத்துக்கொண்டால், அது 3 முக்கியமான அம்சங்கள் கண்டிப்பாக இருந்தால் அந்தப் படம் ‘என்கேஜிங்’ தன்மைக்கு உத்தரவாதம் அளிக்கும். அதில் முதலாவது, அழுத்தமான கதைக்களம்; இரண்டாவது, எதிர்பாராத திருப்பங்கள்; அடுத்து ஆழமாக எழுதப்பட்ட கதாபாத்திரங்கள். நல்ல த்ரில்லர் படங்கள் பார்வையாளர்களை இருக்கை நுனிக்கு கொண்டு வந்து மெய்மறக்கச் செய்யும் வல்லமை படைத்தவை. அடுத்து என்ன என்ற ஆச்சரியத்தையும் ஆர்வத்தையும் தூண்டுபவை.
02
நல்ல த்ரில்லர் படத்தின் காட்சிகள், புதிராகவும் சுவாரஸ்யமாகவும் பல அடுக்குகளை உள்ளடக்கியும் இருப்பதால், பார்வையாளர்களை எளிதாக உள்ளிழுத்து விடும். ஆழமாக எழுதப்பட்ட கதாபாத்திரங்கள் பார்வையாளர்களை கதையுடன் ஒன்ற வைப்பதுடன், கற்பனை என்ற தளத்திலிருந்து விலகி உண்மைக்கு நெருக்கமாகிவிடும்.
03
அப்படியான ஒரு நல்ல சஸ்பென்ஸ் த்ரில்லர் படத்தைத்தான் நாம் இன்று பார்க்க இருக்கிறோம். பார்வையாளர்களிடம் அந்தப் படம் செலுத்தும் தாக்கம் படம் பார்த்த ஒரு சில நாட்களுக்கு பார்வையாளர்களிடம் தேங்கியிருக்கும். அப்படியான படம்தான் பாலிவுட்டில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற ‘Rahasya’. இந்தப் படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.
04
மணீஷ் குப்தா இயக்கத்தில் கடந்த 2015-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் ‘Rahasya’. 2008-ம் ஆண்டு நடந்த இரட்டைக் கொலை வழக்கை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவானது. கே.கே.மேனன், ஆஷிஷ் வித்யார்த்தி, டிஸ்கா சோப்ரா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்துக்கு ரஞ்சித் பரோட் இசையமைத்துள்ளார்.
05
2 மணி நேரத்துக்கும் குறைவான நீளம் கொண்ட இந்தப் படம் தொடங்கிய 3 நிமிடத்திலேயே அதன் பரபரப்புக்குள் நம்மை இழுத்துவிடும். ட்விஸ்டுடன் தொடங்கும் இந்தப் படம் அடுத்து என்ன என்ற ஆவலைத் தூண்டி இறுதிவரை கொண்டு செல்லும். சஸ்பென்ஸ் த்ரில்லர் விரும்பிகளுக்கான ஓடிடி விருந்து இந்தப் படம்.
06
டெல்லியின் நொய்டாவைச் சேர்ந்த பெண் ஒருவர் கொல்லப்படுகிறார். குற்றவாளி யார் என நடத்தப்படும் விசாரணையில், பெண்ணின் தந்தையே முதன்மைக் குற்றவாளியாகக் கருதப்படுகிறார். தொடக்கத்திலேயே அவ்வளவுதான் முடிந்துவிட்டது எனத் தோன்றும் இந்தப் படம், அடுத்தடுத்து விசாரணையில் நடக்கும் அதிர்ச்சி தகவலால், இன்னும் எதுவும் முடியவில்லை எனப் பயணிப்பது சிறப்பு.
07
பொய்கள், ரகசியங்கள், மர்மங்கள், திருப்பங்கள் என அட்டகாசமான த்ரில்லராக நகரும் திரைக்கதை படத்துக்குப் பலம். இதுதான் என இந்த முடிவுக்கும் வரவிடாமல் திருப்பங்களைக் கொண்டு நகர்த்துவது ‘அடே’ என்று சொல்ல வைக்கும் மலைப்பை ஏற்படுத்துகிறது. இந்தப் படம் வெளியானபோது, பாக்ஸ் ஆஃபீஸில் பெரிய அளவில் வரவேற்பைப் பெறவில்லை.
08
ஆனால், அட்டகாசமான ஸ்கிரிப்ட் என ரசிகர்களால் பாராட்டப்பட்டது. ஒரு கொலை, அதைத் தொடர்ந்து நடக்கும் விசாரணை, ட்விஸ்ட், மர்மம், எங்கும் விலகாத திரைக்கதை ஆகியவை படத்தைக் கண்டிப்பாகப் பரிந்துரை செய்யலாம் என்ற எண்ணத்தை உருவாக்கிவிடும். அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் இந்தப் படம் காணக் கிடைக்கிறது.
- FIRST PUBLISHED : January 6, 2025, 12:19 PM IST
OTT Spot | படம் தொடங்கி 3 நிமிடத்திலேயே ட்விஸ்ட்.. விறுவிறுப்பான கதைகளம்... கடைசி வரை சஸ்பென்ஸ்.. இந்த த்ரில்லர் படத்தை பார்த்திருக்கீங்களா?

MORE
GALLERIES