3 கோல்டன் குளோப் விருதுகளை வென்ற படம்…முழு லிஸ்ட்!

1 week ago 11

Last Updated:January 06, 2025 3:10 PM IST

Golden Globes | ‘தி ப்ரூடலிஸ்ட்’ (The Brutalist) படத்திற்கு அடுத்தபடியாக, எமிலியா பெரெஸ் (Emilia Perez) படம், சிறந்த மியூசிக்கல் மற்றும் காமெடி பிரிவில் விருதுகளை தட்டிச் சென்றது. சிறந்த துணை நடிகை, ஆங்கிலம் அல்லாத பிற மொழியில் சிறந்த படம் ஆகிய விருதுகளும் எமிலியா பெரெஸ் படத்திற்கு கிடைத்தது.

News18

ஆஸ்கர் விருதுக்கு முன்னதாக உயரிய விருதாக கருதப்படும் கோல்டன் குளோப் விருது வழங்கும் விழா கலிஃபோர்னியாவில் நடைபெற்றது. இதில் ‘தி ப்ரூடலிஸ்ட்’ திரைப்படம் 3 விருதுகளை வென்றுள்ளது.

சிறந்த திரைப்படங்கள் மற்றும் சிறந்த தொலைக்காட்சி தொடர்களுக்கான 82ஆவது கோல்டன் குளோப் விருதுகள் வழங்கும் விழா கலிபோர்னியாவில் நடைபெற்றது. தி ப்ரூடலிஸ்ட் (The Brutalist) படம் சிறந்த நடிகர், சிறந்த இயக்குநர் என 3 முக்கிய கோல்டன் குளோப் விருதுகளை தட்டிச் சென்றது.

போருக்குப் பிந்தைய அமெரிக்காவின் வடிவமைப்பைப் பற்றிய இந்த படத்தை இயக்கிய பிராடி கார்பெட்டிக்கு சிறந்த இயக்குநருக்கான விருது வழங்கப்பட்டது. இப்படத்தின் நாயகன் அட்ரியன் பிராடி சிறந்த நடிகருக்கான விருதை வென்றார்.

Also read: Cinema | ‘கரகாட்டக்காரன்’, ‘த்ரிஷ்யம்’ படங்கள் இந்த நடிகை நடிக்க வேண்டியது… யார் தெரியுமா?

சிறந்த நடிகையாக 'I'm Still Here' பட நாயகி Fernanda Torres தேர்வானார். இந்தியாவிலிருந்து பரிந்துரைக்கப்பட்ட ‘ஆல் வி இமேஜின் அஸ் லைட்’ (All We Imagine as Light) திரைப்படம் விருது வெல்லும் வாய்ப்பை இழந்தது.

‘தி ப்ரூடலிஸ்ட்’ (The Brutalist) படத்திற்கு அடுத்தபடியாக, எமிலியா பெரெஸ் (Emilia Perez) படம், சிறந்த மியூசிக்கல் மற்றும் காமெடி பிரிவில் விருதுகளை தட்டிச் சென்றது. சிறந்த துணை நடிகை, ஆங்கிலம் அல்லாத பிற மொழியில் சிறந்த படம் ஆகிய விருதுகளும் எமிலியா பெரெஸ் படத்திற்கு கிடைத்தது.

First Published :

January 06, 2025 3:10 PM IST

Read Entire Article