234 தொகுதியும் இனி உங்க கைல தான்... உங்க தொகுதி பற்றி உங்க போனுக்கே வரும் டீடெய்ல்ஸ்...

1 month ago 14

Last Updated:December 22, 2024 7:55 PM IST

TN Assembly Constituency: 234 தொகுதி குறித்தும் ஈசியா இனி மக்கள் செல்போன் மூலமே தெரிந்துகொள்ளும் வகையிலான வசதி இதில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

X

234

234 தொகுதியும் இனி உங்க கைல தான்... உங்க தொகுதி பற்றி உங்க போனுக்கே வரும் டீடெய்ல்ஸ்...

புதிய 2025 ஆண்டு சில நாட்களில் துவங்கவுள்ள நிலையில், புதிய வருடத்திற்கான காலண்டர்கள் தயாரிக்கும் பணி சிவகாசியில் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

தமிழ்நாட்டின் காலண்டர் தேவையில் பெரும்பான்மை சிவகாசியில் தயார் செய்யப்பட்டு வரும் நிலையில், காலண்டர் தயாரிப்பாளர்கள் வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் காலண்டரில் புதிய புதிய மாடல் காலண்டர்களை அறிமுகம் செய்து வருகின்றனர்.

கோல்டு பாயில் காலண்டர், ஸ்டோன் காலண்டர் போன்ற போன்ற புதிய ரக காலண்டர்களுக்கு மத்தியில் இந்த 234 QR காலண்டருக்கு வாடிக்கையாளர் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.

இதையும் படிங்க: DHS Recruitment: 8ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை... ரூ.60,000 வரை சம்பளம்... டிச.31 தான் லாஸ்ட்...

QR காலண்டர்: இன்றைய நவீன உலகை கலக்கி வரும் டிஜிட்டல் யுக கான்செப்டை பின்பற்றி ஒவ்வொரு தேதியிலும் QR பார் கோடு அச்சிடப்பட்ட QR காலண்டர்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த பார் கோடை ஸ்கேன் செய்யும் போது அன்றைய நாளின் முக்கிய தகவல்கள் பற்றிய வீடியோ ப்ளே ஆகும் வகையில் தயார் செய்யப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதற்கு வாடிக்கையாளர் மத்தியில் கிடைத்த வரவேற்பின் அடிப்படையில் அடுத்தபடியாக 234 QR காலண்டர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அதென்ன 234 காலண்டர்? முன்பு ஸ்கேன் செய்தால் அன்றைய தினத்தின் முக்கிய நிகழ்வுகள் வீடியோவாக ப்ளே ஆகும் வகையில் தயார் செய்யப்பட்ட நிலையில், தற்போது பார் கோடை ஸ்கேன் செய்தால் தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகள் பற்றிய வீடியோ வரும் வகையில் தயார் செய்யப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க: Healthy Vegetable: மட்டன், மீன் எல்லாம் இது முன்ன ஜுஜுபி... உலகின் சக்தி வாய்ந்த காய்கறி பற்றி தெரியுமா...

இது பற்றி பேசிய சிவகாசி கற்பகா காலண்டர்ஸ் உரிமையாளர் மகரிஷ் குமார், “QR காலண்டருக்கு கிடைத்த வரவேற்பின் அடிப்படையில், அடுத்தகட்டமாக நாள் ஒன்றுக்கு ஒரு சட்டமன்றத் தொகுதி வீதம் 234 சட்டமன்ற தொகுதி பற்றிய பார் கோடு கொண்ட காலண்டர் அறிமுகம் செய்துள்ளோம்.

மொத்தம் 365 நாட்கள் உள்ள நிலையில், 234 சட்டமன்ற தொகுதிகளுக்கு 234 நாட்கள் போக மீதி நாட்களுக்கு முக்கியமான சட்டமன்றத் தொகுதிகளின் இதர விபரங்களைக் கொடுத்துள்ளோம்” எனத் தெரிவித்தார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

Location :

Virudhunagar,Tamil Nadu

First Published :

December 22, 2024 7:53 PM IST

தமிழ் செய்திகள்/ட்ரெண்டிங்/

TN Assembly Constituency: 234 தொகுதியும் இனி உங்க கைல தான்... உங்க தொகுதி பற்றி உங்க போனுக்கே வரும் டீடெய்ல்ஸ்...

Read Entire Article