1999 ஆம் ஆண்டு 'பியார் மே கபி கபி' மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார், இது பாக்ஸ் ஆபிஸில் முற்றிலும் தோல்வியடைந்தது. பெரிய தோல்வியாக இருந்தாலும்.. பின்னடைவுகள் இருந்தாலும், டினோ 2002 இல் 'ராஸ்' என்ற த்ரில்லர் மூலம் கம்பேக் கொடுத்தார்.
- 1-MIN READ | News18 Tamil Tamil Nadu
Last Updated :December 27, 2024, 8:26 PM IST Published by
Musthak
01
நீங்க படிச்சது சரிதான்.. ஒரு நடிகர் 23 படங்கள் நடித்திருக்கிறார். அவற்றில் ஒன்றல்ல, இரண்டல்ல.. அதில் 22 படங்கள் படுதோல்வி... எல்லாப் படங்களிலும் ஒரு ஃப்ளாப் ஹீரோவுக்கு எப்படி வாய்ப்பு கொடுத்தாங்க என்பது ஆச்சரியமான விஷயமாக உள்ளது.
02
அவர் யார்.. அந்த நடிகரின் பின்னணி என்ன.. ஜூஸ் கடையில் இருந்து இத்தனை கோடி ரூபாயை எப்படி சம்பாதித்தார் என்பது குறித்து பார்க்கலாம்.
03
டினோ மோரியா 1999 ஆம் ஆண்டு 'பியார் மே கபி கபி' மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார், இது பாக்ஸ் ஆபிஸில் முற்றிலும் தோல்வியடைந்தது. பெரிய தோல்வியாக இருந்தாலும்.. பின்னடைவுகள் இருந்தாலும், டினோ 2002 இல் 'ராஸ்' என்ற த்ரில்லர் மூலம் கம்பேக் கொடுத்தார்.
04
அந்த படம் டினோ மோரியாவுக்கு நல்ல புகழை பெற்று தந்தது.. நடிகை பிபாஷா பாசுவை வைத்து இந்தப் படம் ₹5 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. இப்படம் 37 கோடி ரூபாய் வசூல் செய்து அனைவரையும் கவர்ந்தது.
05
2002 ஆம் ஆண்டில் அதிக வசூல் செய்த இரண்டாவது படமாக இது அமைந்தது. ஆனால் அதை நிலைநிறுத்துவது சவாலானது. பிரியங்கா சோப்ரா, சஞ்சய் தத் மற்றும் இம்ரான் ஹாஷ்மி போன்ற நட்சத்திரங்களுடன் நடித்திருந்தாலும், டினோவின் 22 படங்கள் தோல்விகளை சந்தித்துள்ளது.
06
பாலிவுட்டில் தனது இடத்தை தக்க வைத்துக் கொள்ள போராடினாலும், கடைசியில் தென்னிந்திய படங்களை நோக்கி வந்தார்.. ஆனால், அந்த படங்கள் அவர் நினைத்தது போல் அமையவில்லை.. அதனால் படங்களில் இருந்து ஒதுங்கிய டினோ, தொழிலதிபராக சூப்பர் வெற்றி பெற்றார்.
07
2012 ஆம் ஆண்டில், அவர் கிரிக்கெட் ஐகான் எம்எஸ் தோனியுடன் இணைந்து கூல் மால் என்ற வணிக நிறுவனத்தை நிறுவினார். 2018 ஆம் ஆண்டில், அவர் மிதில் லோதா மற்றும் ராகுல் ஜெயின் ஆகியோருடன் இணைந்து தி ஃப்ரெஷ் என்ற ஜூஸ் நிறுவனத்தை தொடங்கினார். பிராண்ட் நல்ல அங்கீகாரத்தைப் பெற்றதால், இந்தியா முழுவதும் 36 கிளைகள் ஆரம்பிக்கப்பட்டன. டினோ மோரியா தனது வணிகத் திறமை மற்றும் பல்வேறு முயற்சிகளால் 150 கோடி ரூபாய் நெட்வொர்த்தை குவித்துள்ளார்.
- FIRST PUBLISHED : December 27, 2024, 8:26 PM IST
நடித்த 23-இல் 22 படங்கள் தோல்வி... தொழிலதிபராக சாதித்து காட்டிய பிரபல நடிகர்
நீங்க படிச்சது சரிதான்.. ஒரு நடிகர் 23 படங்கள் நடித்திருக்கிறார். அவற்றில் ஒன்றல்ல, இரண்டல்ல.. அதில் 22 படங்கள் படுதோல்வி... எல்லாப் படங்களிலும் ஒரு ஃப்ளாப் ஹீரோவுக்கு எப்படி வாய்ப்பு கொடுத்தாங்க என்பது ஆச்சரியமான விஷயமாக உள்ளது.
MORE
GALLERIES