2025-இல் அதிகம் எதிர்பார்க்கப்படும் படம்… வசூலில் சாதனை படைக்குமா?

3 weeks ago 11

Last Updated:December 25, 2024 6:21 PM IST

தற்போது வரை உலக அளவில் சுமார் 1650 கோடி ரூபாய்க்கும் அதிகமாக புஷ்பா 2 திரைப்படம் வசூலித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தெலுங்கு சினிமாவில் இந்த திரைப்படம் எடுக்கப்பட்டாலும், பான் இந்தியா திரைப்படமாக வெளியான அனைத்து மாநிலங்களிலும் நல்ல வரவேற்பை பெற்றது.

News18

2024 ஆம் ஆண்டு இன்னும் சில நாட்களில் நம்மை விட்டு கடந்து செல்ல போகிறது. இந்த ஆண்டில் வெளியான படங்களில் புஷ்பா 2 திரைப்படம் அதிக வசூலை அள்ளி குவித்து வருகிறது.

தற்போது வரை உலக அளவில் சுமார் 1650 கோடி ரூபாய்க்கும் அதிகமாக இந்த திரைப்படம் வசூலித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தெலுங்கு சினிமாவில் இந்த திரைப்படம் எடுக்கப்பட்டாலும், பான் இந்தியா திரைப்படமாக வெளியான அனைத்து மாநிலங்களிலும் நல்ல வரவேற்பை பெற்றது.

முதல் பாகம் வசூலில் சாதனை படைத்ததை போன்று இரண்டாவது பாகமும் உச்சபட்ச வசூலை அள்ளிக் குவித்து இருக்கிறது. இந்நிலையில், அடுத்த ஆண்டு மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக காந்தாரா படத்துடைய இரண்டாம் பாகம் உள்ளது. இந்த படத்திற்கு 'காந்தாரா தி லெஜெண்ட்' என்று பெயர் வைத்துள்ளார்கள்.

2022 ஆம் ஆண்டு வெளியான காந்தாரா திரைப்படம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தாமல், வசூல் ரீதியாக பல சாதனைகளை உருவாக்கியது. மாநிலம் சார்ந்த பாரம்பரியம், விறுவிறுப்பான திரைக்கதை, பார்வையாளர்களுக்கான சுவாரஸ்ய காட்சிகள் என பல அம்சங்கள் காந்தாரா படத்தின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது. இந்த படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதை படத்தின் நாயகனும் இயக்குனருமான ரிஷப் ஷெட்டி பெற்றிருந்தார்.

இந்த நிலையில், அடுத்த ஆண்டு வெளியாக உள்ள 'காந்தாரா தி லெஜெண்ட்' திரைப்படம் வசூலில் சாதனையை ஏற்படுத்துமா? என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

இதையும் படிங்க - 2025-இல் அதிகம் எதிர்பார்க்கப்படும் படம்… வசூலில் சாதனை படைக்குமா?

இந்தப் படத்திற்காக கேரள பாரம்பரிய தற்காப்பு கலையான களரிப்பயட்டை ஓராண்டுக்கு மேலாக ரிஷப் ஷெட்டி பயிற்சி எடுத்து வருகிறார். முதல் பாகத்தை போன்று அடுத்த ஆண்டு வெளியாகயுள்ள 'காந்தாரா தி லெஜெண்ட்' பார்வையாளர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுக்கும் என ரிஷப் ஷெட்டி தெரிவித்திருக்கிறார். இந்த திரைப்படம் 2025 அக்டோபர் 2 ஆம் தேதி ரிலீஸாகிறது.

First Published :

December 25, 2024 6:21 PM IST

Read Entire Article