2024-ல் தமிழ் சினிமாவில் எழுந்த சர்ச்சைகளும் பின்னணியும்!

3 weeks ago 14

Year ender 2024 | “போஸ்ட் புரொடக்ஷன் பணிகளின்போது 21 நாள் படப்பிடிப்பு காட்சிகள் அடங்கிய ஹார்ட் டிஸ்க் காணவில்லை. படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கிவிட்டதால் மீண்டும் படப்பிடிப்பை நடத்த முடியாத சூழல் நிலவியது” என்று தெரிவித்தார்.

01

 தமிழ் சினிமா இந்த ஆண்டில் பல்வேறு சர்ச்சைகளை எதிர்கொண்டது. அதில் குறிப்பாக தனுஷ் மீது நடிகை நயன்தாரா புகார் தெரிவித்தது பூதாகரமாக வெடித்தது. அதேபோல ‘கங்குவா’ படம் குறித்த எதிர்மறை விமர்சனங்கள் திரையுலகில் பேசுபொருளானது. இதன் நீட்சியாக சினிமா விமர்சனங்களுக்கு தடை விதிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளும் எழுந்தன. அந்த வகையில் இந்த ஆண்டில் திரையுலகில் நிகழ்ந்த சர்ச்சைகள் குறித்து பார்ப்போம்.

தமிழ் சினிமா இந்த ஆண்டில் பல்வேறு சர்ச்சைகளை எதிர்கொண்டது. அதில் குறிப்பாக தனுஷ் மீது நடிகை நயன்தாரா புகார் தெரிவித்தது பூதாகரமாக வெடித்தது. அதேபோல ‘கங்குவா’ படம் குறித்த எதிர்மறை விமர்சனங்கள் திரையுலகில் பேசுபொருளானது. இதன் நீட்சியாக சினிமா விமர்சனங்களுக்கு தடை விதிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளும் எழுந்தன. அந்த வகையில் இந்த ஆண்டில் திரையுலகில் நிகழ்ந்த சர்ச்சைகள் குறித்து பார்ப்போம்.

02

 Beyond the Fairy Tale’ ஆவணப்படத்தின் முன்னோட்டத்தில் ‘நானும் ரௌடி தான்’ படத்தின் காட்சிகளை பயன்படுத்தியதற்காக ரூ.10 கோடி நஷ்ட ஈடு கேட்டதாக தனுஷ் மீது நயன்தாரா குற்றம்சாட்டி பகிரங்க கடிதம் ஒன்றை வெளியிட்டிருந்தார். இது தொடர்பாக சமூக வலைதளங்களில் நெட்டிசன்களின் ஆதரவும் எதிர்ப்பும் எழுந்தது. நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட இந்தப் பதிவுக்கு நடிகைகள் பார்வதி, நஸ்ரியா, ஐஸ்வர்யா லட்சுமி, கவுரி கிஷன், காயத்ரி உள்ளிட்ட பலரும் லைக் செய்து தங்கள் ஆதரவை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

நயன்தாரா ஆவணப்பட சர்ச்சை: நடிகை நயன்தாரா - இயக்குநர் விக்னேஷ் சிவன் திருமணம் கடந்த 2022-ம் ஆண்டு நடைபெற்றது. அவர்களின் திருமண வீடியோ வெளியீட்டு உரிமையை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியது. நீண்ட காலமாக வெளியாகாமல் இருந்த இவர்களின் திருமண வீடியோ இந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியானது. திருமண வீடியோவாக மட்டுமல்லாமல் நயன்தாராவின் வாழ்க்கை வரலாற்றை குறிப்பிடும் ஆவணப்படமாகவும் வெளியானது. ‘Nayanthara: Beyond the Fairy Tale’ ஆவணப்படத்தின் முன்னோட்டத்தில் ‘நானும் ரௌடி தான்’ படத்தின் காட்சிகளை பயன்படுத்தியதற்காக ரூ.10 கோடி நஷ்ட ஈடு கேட்டதாக தனுஷ் மீது நயன்தாரா குற்றம்சாட்டி பகிரங்க கடிதம் ஒன்றை வெளியிட்டிருந்தார். இது தொடர்பாக சமூக வலைதளங்களில் நெட்டிசன்களின் ஆதரவும் எதிர்ப்பும் எழுந்தது. நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட இந்தப் பதிவுக்கு நடிகைகள் பார்வதி, நஸ்ரியா, ஐஸ்வர்யா லட்சுமி, கவுரி கிஷன், காயத்ரி உள்ளிட்ட பலரும் லைக் செய்து தங்கள் ஆதரவை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

03

  பிரேம்குமார் இயக்கத்தில் கார்த்தி, அரவிந்த்சாமி நடித்துள்ள ‘மெய்யழகன்’ திரைப்படம் கடந்த செப்டம்பர் 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் புரமோஷன் நிகழ்வு ஹைதராபாத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தொகுப்பாளர், நடிகர் கார்த்தியிடம், “லட்டு வேண்டுமா?” என நகைச்சுவையாகக் கேட்க, அதற்கு கார்த்தி, “லட்டு இப்போது சென்சிடிவான விஷயம். அதைப் பற்றி பேசாதீர்கள்” என்று கூறினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. லட்டு விவகாரம் குறித்து நடிகர் கார்த்தி கிண்டல் செய்துள்ளதாக ஆந்திர துணை முதல்வரும், நடிகருமான பவன் கல்யாண் ஆதங்கம் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் பேசும்போது, “லட்டு விவகாரத்தை பலரும் கேலி செய்வதை பார்க்க முடிகிறது. சமீபத்திய சினிமா நிகழ்வில் லட்டு சென்சிட்டிவ் டாப்பிக் என பேசப்பட்டுள்ளது. ஒரு நடிகராக நான் உங்களை மதிக்கிறேன். ஆனால், சனாதன தர்மம் என வரும்போது, ஒரு வார்த்தை பேசுவதற்கு முன் நூறு முறை யோசிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் கார்த்தி மன்னிப்பு கோரியது குறிப்பிடத்தக்கது.

கார்த்தி - பவன் கல்யாண் சர்ச்சை: பிரேம்குமார் இயக்கத்தில் கார்த்தி, அரவிந்த்சாமி நடித்துள்ள ‘மெய்யழகன்’ திரைப்படம் கடந்த செப்டம்பர் 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் புரமோஷன் நிகழ்வு ஹைதராபாத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தொகுப்பாளர், நடிகர் கார்த்தியிடம், “லட்டு வேண்டுமா?” என நகைச்சுவையாகக் கேட்க, அதற்கு கார்த்தி, “லட்டு இப்போது சென்சிடிவான விஷயம். அதைப் பற்றி பேசாதீர்கள்” என்று கூறினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. லட்டு விவகாரம் குறித்து நடிகர் கார்த்தி கிண்டல் செய்துள்ளதாக ஆந்திர துணை முதல்வரும், நடிகருமான பவன் கல்யாண் ஆதங்கம் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் பேசும்போது, “லட்டு விவகாரத்தை பலரும் கேலி செய்வதை பார்க்க முடிகிறது. சமீபத்திய சினிமா நிகழ்வில் லட்டு சென்சிட்டிவ் டாப்பிக் என பேசப்பட்டுள்ளது. ஒரு நடிகராக நான் உங்களை மதிக்கிறேன். ஆனால், சனாதன தர்மம் என வரும்போது, ஒரு வார்த்தை பேசுவதற்கு முன் நூறு முறை யோசிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் கார்த்தி மன்னிப்பு கோரியது குறிப்பிடத்தக்கது.

04

  விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘மழை பிடிக்காத மனிதன்’. இந்தப் படம் வெளியான நாளில் இயக்குநர் விஜய் மில்டன் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில், தனக்குத் தெரியாமலேயே யாரோ படத்தில் ஒரு நிமிட வீடியோவை இணைத்துவிட்டதாக குற்றம்சாட்டினார். தணிக்கை சான்றிதழ் பெற்ற பின்பு ஒரு படத்தில் கூடுதல் காட்சிகளை எப்படி சேர்க்க முடியும் எனவும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார். இந்த காட்சி படத்தின் முழுமையான அனுபவத்தை பாதிப்பதாகவும் அவர் கூறியிருந்தார். இதையடுத்து சில நாட்களுக்குப் பின் படத்தின் காட்சி நீக்கப்பட்டுவிட்டதாக கூறினார். இதற்கு விஜய் ஆண்டனி தான் காரணம் என அப்போது சில வதந்திகள் பரவி வந்தது குறிப்பிடத்தக்கது.

மழை பிடிக்காத மனிதன் பட சர்ச்சை: விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘மழை பிடிக்காத மனிதன்’. இந்தப் படம் வெளியான நாளில் இயக்குநர் விஜய் மில்டன் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில், தனக்குத் தெரியாமலேயே யாரோ படத்தில் ஒரு நிமிட வீடியோவை இணைத்துவிட்டதாக குற்றம்சாட்டினார். தணிக்கை சான்றிதழ் பெற்ற பின்பு ஒரு படத்தில் கூடுதல் காட்சிகளை எப்படி சேர்க்க முடியும் எனவும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார். இந்த காட்சி படத்தின் முழுமையான அனுபவத்தை பாதிப்பதாகவும் அவர் கூறியிருந்தார். இதையடுத்து சில நாட்களுக்குப் பின் படத்தின் காட்சி நீக்கப்பட்டுவிட்டதாக கூறினார். இதற்கு விஜய் ஆண்டனி தான் காரணம் என அப்போது சில வதந்திகள் பரவி வந்தது குறிப்பிடத்தக்கது.

05

  மறைந்த ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு உருவான படம் ‘அமரன்’. ராஜ்குமார் பெரியசாமி இயக்கிய இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி உள்ளிட்ட பலர் நடித்தனர். படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்தது. இந்தப் படத்தில் காஷ்மீர் முஸ்லீம்கள் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து எஸ்டிபிஐ உள்ளிட்ட முஸ்லீம் அமைப்புகள் படத்துக்கு எதிராக ‘அமரன்’ படம் திரையிடப்பட்ட திரையரங்குகளுக்கு முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து திரையரங்குகளுக்கு காவல்துறை பாதுகாப்பு அளிக்கப்பட்டது. சமூக வலைதளங்களில் இது தொடர்பான விவாதங்களும் எழுந்தன. படம் உலக அளவில் ரூ.300 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமரன் சர்ச்சை: மறைந்த ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு உருவான படம் ‘அமரன்’. ராஜ்குமார் பெரியசாமி இயக்கிய இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி உள்ளிட்ட பலர் நடித்தனர். படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்தது. இந்தப் படத்தில் காஷ்மீர் முஸ்லீம்கள் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து எஸ்டிபிஐ உள்ளிட்ட முஸ்லீம் அமைப்புகள் படத்துக்கு எதிராக ‘அமரன்’ படம் திரையிடப்பட்ட திரையரங்குகளுக்கு முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து திரையரங்குகளுக்கு காவல்துறை பாதுகாப்பு அளிக்கப்பட்டது. சமூக வலைதளங்களில் இது தொடர்பான விவாதங்களும் எழுந்தன. படம் உலக அளவில் ரூ.300 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது.

06

  ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினி சிறப்புத் தோற்றத்தில் நடித்த திரைப்படம் ‘லால் சலாம்’. இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்தார். படம் வெளியாகி ரசிகர்களிடையே எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. படத்தின் பலவீனமான திரைக்கதை குறித்த காரணத்தை பேட்டி ஒன்றில் விளக்கிய இயக்குநர் ஐஸ்வர்யா, “போஸ்ட் புரொடக்ஷன் பணிகளின்போது 21 நாள் படப்பிடிப்பு காட்சிகள் அடங்கிய ஹார்ட் டிஸ்க் காணவில்லை. படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கிவிட்டதால் மீண்டும் படப்பிடிப்பை நடத்த முடியாத சூழல் நிலவியது” என்று தெரிவித்தார். இது சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் இந்த கருத்துகள் சமூக வலைதளங்களில் விமர்சனங்களுக்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தின் எதிர்மறை விமர்சனங்கள் காரணமாக எந்த ஓடிடி தளத்திலும் இன்னும் படம் வெளியாகவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

லால் சலாம் சர்ச்சை: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினி சிறப்புத் தோற்றத்தில் நடித்த திரைப்படம் ‘லால் சலாம்’. இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்தார். படம் வெளியாகி ரசிகர்களிடையே எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. படத்தின் பலவீனமான திரைக்கதை குறித்த காரணத்தை பேட்டி ஒன்றில் விளக்கிய இயக்குநர் ஐஸ்வர்யா, “போஸ்ட் புரொடக்ஷன் பணிகளின்போது 21 நாள் படப்பிடிப்பு காட்சிகள் அடங்கிய ஹார்ட் டிஸ்க் காணவில்லை. படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கிவிட்டதால் மீண்டும் படப்பிடிப்பை நடத்த முடியாத சூழல் நிலவியது” என்று தெரிவித்தார். இது சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் இந்த கருத்துகள் சமூக வலைதளங்களில் விமர்சனங்களுக்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தின் எதிர்மறை விமர்சனங்கள் காரணமாக எந்த ஓடிடி தளத்திலும் இன்னும் படம் வெளியாகவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

07

  ‘ஜெயிலர்’ படத்தின் ‘காவாலா’ பாடல் உள்ளிட்ட பல்வேறு படங்களின் வைரல் பாடல்களுக்கு கோரியோகிராஃப் செய்தவர் பிரபல நடன இயக்குநர் ஜானி மாஸ்டர். பெண் ஒருவர் அளித்த பாலியல் புகாரின் அடிப்படையில் இவர் மீது போக்சோ வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தார். இருவருக்கு ‘திருச்சிற்றம்பலம்’ படத்துக்காக தேசிய விருது அறிவிக்கப்பட்டது. ஆனால், பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர் என்பதால் தேசிய விருது திரும்ப பெறப்படுவதாக மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் தெரிவித்தது. பிரபல நடன இயக்குநர் மீதான பாலியல் குற்றச்சாட்டு சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் தன் மீதான குற்றச்சாட்டை ஜானி மாஸ்டர் நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.

ஜானி மாஸ்டர் கைது: ‘ஜெயிலர்’ படத்தின் ‘காவாலா’ பாடல் உள்ளிட்ட பல்வேறு படங்களின் வைரல் பாடல்களுக்கு கோரியோகிராஃப் செய்தவர் பிரபல நடன இயக்குநர் ஜானி மாஸ்டர். பெண் ஒருவர் அளித்த பாலியல் புகாரின் அடிப்படையில் இவர் மீது போக்சோ வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தார். இருவருக்கு ‘திருச்சிற்றம்பலம்’ படத்துக்காக தேசிய விருது அறிவிக்கப்பட்டது. ஆனால், பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர் என்பதால் தேசிய விருது திரும்ப பெறப்படுவதாக மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் தெரிவித்தது. பிரபல நடன இயக்குநர் மீதான பாலியல் குற்றச்சாட்டு சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் தன் மீதான குற்றச்சாட்டை ஜானி மாஸ்டர் நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.

08

  மலையாளத்தில் வெளியான ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ படத்தில் இளையராஜா இசையமைத்த ‘குணா’ படத்தின் ‘கண்மணி அன்போடு காதலன்’ பாடல் இடம்பெற்றிருந்தது. இந்தப் பாடலுக்காக தன்னிடம் காப்புரிமை பெறவில்லை என கூறி படக்குழுவுக்கு இளையராஜா காப்புரிமை நோட்டீஸ் அனுப்பியதாக தகவல் வெளியானது. இதையடுத்து நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பின் படக்குழு இளையராஜாவுக்கு ரூ.60 கோடி நஷ்டஈடு வழங்கியதாக கூறப்பட்டது. அதேபோல லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் ‘கூலி’ படத்தின் புரொமோ வீடியோவில், ‘தங்க மகன்’ (1983) படத்தில் இடம்பெற்ற‘வா வா பக்கம் வா’ பாடலை பயன்படுத்தியதற்காக இளையராஜா படக்குழுவுக்கு நோட்டீஸ் அனுப்பியதாக கூறப்பட்டது. மேலும் இதன் நீட்சியாக காப்புரிமை தொடர்பான விவாதங்களும் சமூக வலைதளங்களில் எழுந்தன.

இளையராஜா காப்புரிமை சர்ச்சை: மலையாளத்தில் வெளியான ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ படத்தில் இளையராஜா இசையமைத்த ‘குணா’ படத்தின் ‘கண்மணி அன்போடு காதலன்’ பாடல் இடம்பெற்றிருந்தது. இந்தப் பாடலுக்காக தன்னிடம் காப்புரிமை பெறவில்லை என கூறி படக்குழுவுக்கு இளையராஜா காப்புரிமை நோட்டீஸ் அனுப்பியதாக தகவல் வெளியானது. இதையடுத்து நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பின் படக்குழு இளையராஜாவுக்கு ரூ.60 கோடி நஷ்டஈடு வழங்கியதாக கூறப்பட்டது. அதேபோல லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் ‘கூலி’ படத்தின் புரொமோ வீடியோவில், ‘தங்க மகன்’ (1983) படத்தில் இடம்பெற்ற‘வா வா பக்கம் வா’ பாடலை பயன்படுத்தியதற்காக இளையராஜா படக்குழுவுக்கு நோட்டீஸ் அனுப்பியதாக கூறப்பட்டது. மேலும் இதன் நீட்சியாக காப்புரிமை தொடர்பான விவாதங்களும் சமூக வலைதளங்களில் எழுந்தன.

09

  சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ‘கங்குவா’ படத்தை ஞானவேல் ராஜா தயாரித்தார். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவின்போது, “இந்த பாஸை படத்தின் வெற்றிவிழாவுக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம்” என அதீத நம்பிக்கையுடன் பேசியிருந்தார். இதையடுத்து படம் வெளியாகி அதன் பலவீனமான திரைக்கதையால் ரசிகர்களிடையே எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. மோசமான விமர்சனங்கள் திரையுலகில் தாக்கத்தை ஏற்படுத்தின. இதன் எதிரொலியாக சினிமா விமர்சனங்களுக்கு எதிராக தயாரிப்பாளர் சங்கம் நீதிமன்றத்தை நாடியதும் கவனிக்கத்தக்கது.

கங்குவா சர்ச்சை: சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ‘கங்குவா’ படத்தை ஞானவேல் ராஜா தயாரித்தார். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவின்போது, “இந்த பாஸை படத்தின் வெற்றிவிழாவுக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம்” என அதீத நம்பிக்கையுடன் பேசியிருந்தார். இதையடுத்து படம் வெளியாகி அதன் பலவீனமான திரைக்கதையால் ரசிகர்களிடையே எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. மோசமான விமர்சனங்கள் திரையுலகில் தாக்கத்தை ஏற்படுத்தின. இதன் எதிரொலியாக சினிமா விமர்சனங்களுக்கு எதிராக தயாரிப்பாளர் சங்கம் நீதிமன்றத்தை நாடியதும் கவனிக்கத்தக்கது.

  • FIRST PUBLISHED : December 31, 2024, 5:30 PM IST
  •  தமிழ் சினிமா இந்த ஆண்டில் பல்வேறு சர்ச்சைகளை எதிர்கொண்டது. அதில் குறிப்பாக தனுஷ் மீது நடிகை நயன்தாரா புகார் தெரிவித்தது பூதாகரமாக வெடித்தது. அதேபோல ‘கங்குவா’ படம் குறித்த எதிர்மறை விமர்சனங்கள் திரையுலகில் பேசுபொருளானது. இதன் நீட்சியாக சினிமா விமர்சனங்களுக்கு தடை விதிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளும் எழுந்தன. அந்த வகையில் இந்த ஆண்டில் திரையுலகில் நிகழ்ந்த சர்ச்சைகள் குறித்து பார்ப்போம்.

    Year ender 2024 | நயன்தாரா vs தனுஷ் முதல் கங்குவா எதிர்மறை விமர்சனங்கள் வரை: 2024-ல் தமிழ் சினிமா சர்ச்சைகள்!

    தமிழ் சினிமா இந்த ஆண்டில் பல்வேறு சர்ச்சைகளை எதிர்கொண்டது. அதில் குறிப்பாக தனுஷ் மீது நடிகை நயன்தாரா புகார் தெரிவித்தது பூதாகரமாக வெடித்தது. அதேபோல ‘கங்குவா’ படம் குறித்த எதிர்மறை விமர்சனங்கள் திரையுலகில் பேசுபொருளானது. இதன் நீட்சியாக சினிமா விமர்சனங்களுக்கு தடை விதிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளும் எழுந்தன. அந்த வகையில் இந்த ஆண்டில் திரையுலகில் நிகழ்ந்த சர்ச்சைகள் குறித்து பார்ப்போம்.

    MORE
    GALLERIES

Read Entire Article