Web series 2024 | சென்னையில் பிறந்த அபிஷேக், ஒரு கிராமத்தில் பஞ்சாயத் தலைவராக நியமிக்கப்படுகிறார். அந்த கிராம வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களே கதைக்களம்.
- 2-MIN READ | News18 Tamil Tamil Nadu
Last Updated :December 31, 2024, 2:31 PM IST Published by
Lakshmanan G
01
இந்த ஆண்டில் பல்வேறு வெப்சீரிஸ்கள் தமிழில் வெளியாகின. அவற்றில் சில வெப்சீரிஸ்கள் ரசிகர்களை கவர்ந்தன. அந்த வகையில் ஓடிடி தளங்களில் காணக்கிடைக்கும் இந்த ஆண்டு வெளியான இணையத் தொடர்கள் குறித்து பார்ப்போம்.
02
தலைமைச் செயலகம்: வசந்த பாலன் இயக்கத்தில் கிஷோர், ஸ்ரேயா ரெட்டி, கனி குஸ்ருதி, பரத், ரம்யா நம்பீசன், ஒய்.ஜி.மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இணையத் தொடர் 'தலைமைச் செயலகம்'. ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான முதல்வரும் அவரது நாற்காலியை கைப்பற்ற நடக்கும் ஆடு - புலி ஆட்டங்களும் தான் கதைக்களம். அரசியல் த்ரில்லராக ரசிகர்களுக்கு விருந்து படைத்தது. இந்த தொடரை ராதிகா தனது ராடான் மீடியா நெட்வொர்க்ஸ் தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்தார். ஜிப்ரான் இசையமைத்தார். மொத்தம் 8 எபிசோடுகள் கொண்ட இந்த தொடர் ஜீ5 ஓடிடி தளத்தில் காணக்கிடைக்கிறது. ஒவ்வொரு எபிசோடு முடிவிலும், அடுத்த எபிசோடுக்கான ஆர்வத்தை தூண்டும் வகையில் நேர்த்தியாக உருவாக்கப்பட்டது. ஆழமான அரசியல் வசனங்களுடன் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இந்த தொடரை பார்க்க பரிசீலிக்கலாம். ஷார்ப்பான அரசியல் வசனங்கள், திருப்பங்கள் என த்ரில்லர் ரசிகர்களுக்கு ஏற்ற விருந்து.
03
இன்ஸ்பெக்டர் ரிஷி: ஹாரர் - க்ரைம் ரசிகர்களுக்கு ஏற்ற வெப்சீரிஸ் 'இன்ஸ்பெக்டர் ரிஷி'. பொறுமையாக நகர்வது போல தோன்றினாலும், அடுத்து என்ன என்ற உணர்வை தூண்டக்கூடியது. கண்பார்வையால் பாதிக்கப்பட்ட காவல் ஆய்வாளர் ரிஷி வனப்பகுதிக்கு மாற்றப்படுகிறார். அங்கு நிலவும் மர்மமான வழக்கு ஒன்றை விசாரிக்கிறார். அதில் நடக்கும் திருப்பங்களும், திகில் அனுபவங்களும் தான் கதைக்களம். அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் இந்த தொடர் காணக்கிடைக்கிறது. ஜே.எஸ்.நந்தினி இயக்கியுள்ள இந்த தொடரில், நவீன் சந்திரா, சுனைனா, கண்ணன் ரவி, மாலினி ஜீவரத்தினம், குமரவேல், மைம் கோபி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மொத்தம் 10 எபிசோடுகள். மர்மங்களை நோக்கி நகரவைக்கும் இந்த தொடரின் ஒவ்வொரு எபிசோடும் இறுதியில் நடக்கும் சம்பவத்துக்கான ஆர்வத்தை தூண்டிக்கொண்டே செல்லும். சில இடங்களில் சோர்வை தரலாம். ஆனால், ஒட்டுமொத்தமாக இந்த ஆண்டில் வெளியான கவனிக்க வைக்கும் வெப்சீரிஸ்களில் இதுவும் ஒன்று.
04
சட்னி சாம்பார்: குடும்பத்துடன் சேர்ந்து பார்க்க ஏற்ற வெப்சீரிஸ் 'சட்னி சாம்பார்'. ராதா மோகன் இயக்கத்தில் யோகி பாபு, வாணி போஜன், நிதின் சத்யா, இளங்கோ குமரவேல், மைனா நந்தினி, நிழல்கள் ரவி, தீபா ஷங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அஜேஷ் இந்த தொடருக்கு இசையமைத்துள்ளார். நகரத்தில் உணவுக்கடை ஒன்றை நடத்தி வரும் யோகிபாபு தந்தையின் இறுதி ஆசையை நிறைவேற்றும் பயணம்தான் இந்த தொடர். ஃபீல் குட் ட்ராமா பாணியில் உருவான இந்தத் தொடர், ஹாட்ஸ்டார் ஓடிடியில் காணக்கிடைக்கிறது. மொத்தம் 6 எபிசோடுகள். ஜாலியாக பார்க்க ஏற்றது. ஐசரி கணேஷ் தயாரித்துள்ள இந்த தொடர், எமோஷனலான ஃபேமிலி ட்ராமாவாக கவனம் பெற்றது.
05
தலைவெட்டியான் பாளையம்: இந்தியில் வெளியாகி வரவேற்பை பெற்ற 'பஞ்சாயத்' வெப்சீரிஸின் தமிழாக்கம் 'தலைவெட்டியான் பாளையம்'. நீங்கள் இந்தி தொடரை பார்க்காதவராக இருந்தால், இந்த தொடர் உங்களுக்கு புதிய அனுபவத்தை கொடுக்கும். அபிஷேக் குமார், சேத்தன், திவ்ய தர்ஷினி, ஆனந்த் சாமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். காமெடி ட்ராமாவான இந்த தொடர் போரடிக்காமல் நகர்வதாக பாசிட்டிவான விமர்சனங்கள் எழுந்தன. அமேசான் ப்ரைம் ஓடிடியில் காணக்கிடைக்கும் இந்த தொடர் 8 எபிசோடுகளை உள்ளடக்கியது. சென்னையில் பிறந்த அபிஷேக், ஒரு கிராமத்தில் பஞ்சாயத் தலைவராக நியமிக்கப்படுகிறார். அந்த கிராம வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களே கதைக்களம். வார இறுதியில் ஜாலியாக பார்ப்பதற்கு ஏற்ற வெப்சீரிஸ்.
06
ஐந்தாம் வேதம்: 'மர்ம தேசம்' புகழ் இயக்குநர் நாகா இயக்கத்தில் சாய் தன்ஷிகா நடித்துள்ள தொடர் 'ஐந்தாம் வேதம்'. அபிராமி மீடியா ஒர்க்ஸ் தயாரித்துள்ள இந்தப் புராணத் தொடரில், சந்தோஷ் பிரதாப், விவேக் ராஜகோபால், ஒய்.ஜி. மகேந்திரா, கிரிஷா குருப், ராம்ஜி, தேவதர்ஷினி, மேத்யூ வர்கீஸ், பொன்வண்ணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் இந்த வெப்சீரிஸ் ஜீ5 ஓடிடியில் காணக்கிடைக்கிறது. மொத்தம் 8 எபிசோடுகள். மர்மத்தை உள்ளடக்கி விறுவிறுப்பாக நகரும் இந்த தொடர் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. மித்தாலஜி விரும்பிகளுக்கு ஏற்ற தொடர்.
- FIRST PUBLISHED : December 31, 2024, 2:31 PM IST
Web series 2024 | போரடிக்காத இந்த தமிழ் வெப்சீரிஸ்களை மிஸ் பண்ணிடாதீங்க...!
இந்த ஆண்டில் பல்வேறு வெப்சீரிஸ்கள் தமிழில் வெளியாகின. அவற்றில் சில வெப்சீரிஸ்கள் ரசிகர்களை கவர்ந்தன. அந்த வகையில் ஓடிடி தளங்களில் காணக்கிடைக்கும் இந்த ஆண்டு வெளியான இணையத் தொடர்கள் குறித்து பார்ப்போம்.
MORE
GALLERIES