பெரியவர்கள் தங்களுடைய உயரத்தை அதிகரிக்க முடியுமா என்பது குறித்து பல ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
- 1-MIN READ | News18 Tamil Tamil Nadu
Last Updated :December 7, 2024, 11:35 AM IST Published by
amudha
01
உலக அளவில் மில்லியன் கணக்கான நபர்களுக்கு தாங்கள் உயரமாக இல்லையே என்ற வருத்தம் இருக்கலாம். ஒரு குழந்தையாக ஆரோக்கியமான உணவு, ஊட்டச்சத்து மற்றும் உடற்பயிற்சியின் மூலமாக உங்களுடைய உயரத்தை அதிகரிக்கலாம் என்று மருத்துவர்களும், விஞ்ஞானிகளும் பரிந்துரை செய்கின்றனர். ஆனால் பெரியவர்கள் தங்களுடைய உயரத்தை அதிகரிக்க முடியுமா? என்பது குறித்து பல ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
02
ஒருவருடைய உயரத்தை நிர்ணயிப்பது எது?: உங்களுடைய மரபணுக்கள், நீங்கள் சாப்பிடும் உணவு, உங்களுடைய வாழ்க்கை முறை மற்றும் நீங்கள் மேற்கொள்ளும் அன்றாட உடல் செயல்பாடு போன்ற பல விஷயங்கள், உங்களுடைய ஒட்டுமொத்த உயரத்தில் பங்களிப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். ஆய்வுகளின்படி, மரபணுக்கள் மட்டுமே உங்களுடைய உயரத்தில் 60 முதல் 80 சதவீத பங்கைக் கொண்டுள்ளன. இந்த காரணியை நம்மால் கட்டுப்படுத்த முடியாது. எனினும் மீதம் இருக்கும் 40-20 சதவீதம் நம்முடைய கையில் உள்ளது. பெரும்பாலான நபர்களுக்கு 18 வயதை அடைந்த பிறகு உயரம் அதிகரிக்காது.
03
புள்ளி விவரத்தின்படி, வயது வரும்வரை பெரும்பாலான நபர்கள் ஒவ்வொரு ஆண்டும் 2 இன்ச் அளவு சராசரியாக தங்களுடைய உயரத்தை அதிகரிக்கின்றனர். அதன்பிறகு 18 வயதை அடையும்வரை 4 சதவீதமாக இந்த விகிதம் அதிகரிக்கிறது. இந்த காலகட்டத்தில் நமது உடலானது செங்குத்தாக வளர்ச்சி அடைவதை நிறுத்தி விடுகிறது. நம்முடைய உடல் உயரம் அதிகரிப்பதை நிறுத்துவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று நம்முடைய எலும்புகள். அதிலும் குறிப்பாக வளர்ச்சித் தட்டுகள். இந்த வளர்ச்சித் தட்டுகள் பெண்களில் 16 வயதில் மூடி விடுகிறது. இதுவே ஆண்களில் 14 முதல் 19 வயதில் முடிவடையும்.
04
பெரியவர்கள் தங்களுடைய உயரத்தை அதிகரிக்க முடியுமா?: ஒரு சில எளிமையான வாழ்க்கை முறை மாற்றங்களை செய்வதன் மூலம் உங்களுடைய உயரத்தை அதிகரிக்கலாம். எனினும் இது 18 முதல் 19 வயதில் மட்டுமே ஏற்படுமே தவிர, வாழ்க்கை முழுவதும் அல்ல என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இப்போது உயரத்தை அதிகரிப்பதற்கான ஒரு சில வழிகளை பார்க்கலாம்.
05
சரிவிகித ஊட்டச்சத்து நிறைந்த உணவு: சிறுவர்களாக உடல் அதனுடைய அளவு மற்றும் வடிவத்தில் வளர்ந்து கொண்டிருக்கும்போது, அதற்கு தேவையான வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். உங்களுடைய உயரத்தை அதிகரிப்பதற்கு தடையாக இருக்கும் எந்த ஒரு ஊட்டச்சத்து குறைபாடும் இருக்கக் கூடாது. அதிலும் குறிப்பாக வைட்டமின் D மற்றும் கால்சியம் போன்றவை வலுவான எலும்புகள், முக்கியமாக நீளமான எலும்புகளுக்கும், அவற்றை வலுப்படுத்தவும், நீளமாக வளர்வதற்கும் உதவும்.
06
புகைப்பிடிப்பதை தவிர்த்தல்: புகைபிடித்தல் என்பது உங்களுடைய வளர்ச்சியை மட்டுமின்றி, உங்களை சுற்றி இருப்பவர்களின் வளர்ச்சியையும் நிச்சயமாக பாதிக்கும். புகைப்பிடிக்கும் அம்மாக்களின் குழந்தைகள், புகைப்பிடிக்காத அம்மாக்களுக்கு பிறந்த குழந்தைகளை விட 0.65 சென்டிமீட்டர் குறைவான உயரம் கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்று ஆய்வு மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
07
தரமான தூக்கம்: தனி நபரின் வளர்ச்சியில் தரமான தூக்கம் என்பது நீண்ட கால தாக்கத்தை ஏற்படுத்தும். ஏனெனில் தூக்கத்தின்போது வளர்ச்சி ஹார்மோன் வெளியிடப்படுகிறது. தொடர்ச்சியாக உங்களுக்கு தரமான தூக்கம் கிடைக்காவிட்டால் இந்த வளர்ச்சி ஹார்மோன் கட்டுப்படுத்தப்படும்.
08
நல்ல தோரணை: மோசமான தோரணை உங்களை உயரம் குறைந்தவர்களாக காட்சியளிக்க செய்யும். எனவே உட்காரும்போதும், நிற்கும்போதும் சரியான தோரணையை பின்பற்றுவது உங்களுடைய உண்மையான உயரத்தை வெளிப்படுத்தும். கூன் விழுந்தவாறு உட்காருவது அல்லது நடப்பது நாளடைவில் உங்களுடைய உண்மையான உயரத்தை மாற்றலாம். மேலும் அதனால் கூன் விழுந்த தோள்பட்டை மற்றும் வளைந்த முதுகெலும்பு போன்ற பிரச்சினைகள் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. மேலும் இதனால் கழுத்து மற்றும் முதுகில் வலி உண்டாகலாம்.
- FIRST PUBLISHED : December 7, 2024, 11:35 AM IST
18 வயதுக்கு பிறகு கூட ஒருவரால் உயரத்தை அதிகரிக்க முடியுமா..? ஆய்வுகள் கூறுவது என்ன?
உலக அளவில் மில்லியன் கணக்கான நபர்களுக்கு தாங்கள் உயரமாக இல்லையே என்ற வருத்தம் இருக்கலாம். ஒரு குழந்தையாக ஆரோக்கியமான உணவு, ஊட்டச்சத்து மற்றும் உடற்பயிற்சியின் மூலமாக உங்களுடைய உயரத்தை அதிகரிக்கலாம் என்று மருத்துவர்களும், விஞ்ஞானிகளும் பரிந்துரை செய்கின்றனர். ஆனால் பெரியவர்கள் தங்களுடைய உயரத்தை அதிகரிக்க முடியுமா? என்பது குறித்து பல ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
MORE
GALLERIES