Last Updated:January 01, 2025 7:39 PM IST
எல்லோரும் தலைமுடியை அழகாக வைத்திருக்க வேண்டும் என விரும்புகிறார்கள். முடியை அழகாகவும், கவர்ச்சியாகவும் மாற்றுவதற்கு ஹேர் டைகள் மற்றும் ஸ்ட்ரெய்ட்னர்கள் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் இந்த பழக்கம் உங்கள் ஆரோக்கியத்திற்கு ஆபத்தானது என்பது உங்களுக்குத் தெரியுமா?
எல்லோரும் தலைமுடியை அழகாக வைத்திருக்க வேண்டும் என விரும்புகிறார்கள். முடியை அழகாகவும், கவர்ச்சியாகவும் மாற்றுவதற்கு ஹேர் டைகள் மற்றும் ஸ்ட்ரெய்ட்னர்கள் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் இந்த பழக்கம் உங்கள் ஆரோக்கியத்திற்கு ஆபத்தானது என்பது உங்களுக்குத் தெரியுமா? ஹேர் டை மற்றும் கெமிக்கல் ஸ்ட்ரெய்ட்னர்களை அதிகமாகப் பயன்படுத்தினால் மார்பகப் புற்றுநோயின் அபாயம் அதிகரிக்கும் என ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.
நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் என்விரோன்மெண்டல் ஹெல்த் சயின்சஸ் நடத்திய ஆய்வில், ஹேர் டைஸ் மற்றும் ஸ்ட்ரெய்ட்னர்களில் உள்ள ரசாயனங்கள் உடலில் ஹார்மோன் மாற்றங்களை ஏற்படுத்தலாம், இது மார்பகப் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கும். ஆராய்ச்சியின் படி, தொடர்ந்து ஹேர் டையை பயன்படுத்தும் பெண்களில் மார்பக புற்றுநோயின் ஆபத்து 9% முதல் 60% வரை அதிகரிக்கிறது. குறிப்பாக, டார்க் கலர் ஹேர் டையின் பக்க விளைவு மிகவும் ஆபத்தானது.
அதாவது ஹேர் டைஸ் பயன்படுத்தாத பெண்களுடன் ஒப்பிடும்போது, பெர்மனென்ட் ஹேர் டைஸ் பயன்படுத்தும் பெண்களுக்கு மார்பக புற்றுநோயின் ஆபத்து 9% அதிகரிக்கிறது. குறைந்தது ஐந்து முதல் எட்டு வாரங்களுக்கு ஒருமுறை கெமிக்கல் ஹேர் ஸ்ட்ரெய்ட்னர்களைப் பயன்படுத்தும் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோயின் ஆபத்து 30% அதிகரிக்கிறது.
அழகு சாதனப் பொருட்களில் தீங்கு விளைவிக்கும் எண்டோகிரைன்-டிஸ்ரப்டிங் காம்பௌண்ட்ஸ் மற்றும் கார்சினோஜென்ஸ் போன்ற இரண்டு இரசாயனங்கள் உள்ளன, அவை காலப்போக்கில் ஆரோக்கியத்தில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.
எண்டோகிரைன்-டிஸ்ரப்டிங் காம்பௌண்ட்ஸ் (EDCs): இந்த இரசாயனங்கள் உடலின் ஹார்மோன் உற்பத்தியை தடுக்கின்றன. இது தவிர இனப்பெருக்க பிரச்சனைகள் மற்றும் புற்றுநோய்கள் போன்ற உடல்நலப் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கின்றன.
கார்சினோஜென்கள்: இவை டிஎன்ஏவை சேதப்படுத்துகின்றன மற்றும் புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கின்றன.
மார்பக புற்றுநோயுக்கான பிற காரணங்கள்:
- பெண்களுக்கு வயதாகும்போது புற்றுநோய் ஆபத்து அதிகரிக்கிறது.
- மார்பக புற்றுநோயின் குடும்ப வரலாறு புற்றுநோய் ஆபத்தை அதிகரிக்கிறது.
- இயர்லி மென்ஸ்டுரேஷன், லேட் மெனோபஸ், அல்லது ஹார்மோன் ரீபிளேஸ்மென்ட் தெரஃபி ஆகியவை ஆபத்தை அதிகரிக்கும்.
- மோசமான உணவு, உடற்பயிற்சியின்மை, புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்துதல்.
- ஹேர் டை மற்றும் ஸ்ட்ரைட்னர்களின் பயன்பாட்டைக் குறைக்கவும்.
- மார்பக புற்றுநோயின் அறிகுறிகள்:
- மார்பகம் அல்லது அக்குள் பகுதியில் கட்டி அல்லது தடிமனாதல்.
- மார்பக அளவு, வடிவம் அல்லது தோற்றத்தில் மாற்றங்கள்.
- மார்பக தோலில் ஏற்படும் மாற்றங்கள்.
- நிப்பில் பகுதியில் இருந்து ஃப்லூயிட் வெளியேற்றம் (தாய்ப்பால் தவிர) அல்லது நிப்பில் தோற்றத்தில் ஏற்படும் மாற்றங்கள்.
- தொடர்ந்து மார்பக வலி அல்லது சிவத்தல்.
- மார்பக புற்றுநோய் அபாயத்தைக் குறைப்பதற்கான உதவிக்குறிப்புகள்:
- ஹேர் டை மற்றும் ஸ்ட்ரைட்னர்களின் பயன்பாட்டைக் குறைக்கவும், இயற்கையான மற்றும் ஆர்கானிக் பொருட்களைத் தேர்ந்தெடுங்கள்.
- தினசரி உடற்பயிற்சி ஆனது ஆரோக்கியமான எடை மற்றும் ஹார்மோன் அளவை பராமரிக்க உதவுகின்றன.
- உங்கள் உணவில் பழங்கள், காய்கறிகள் மற்றும் முழு தானியங்களை சேர்த்துக் கொள்ளுங்கள்.
- புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்துவதைத் தவிர்க்கவும், இவை இரண்டும் புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கிறது.
- வழக்கமான உடல்நலப் பரிசோதனைகளை செய்து கொள்ளுங்கள்.
ரசாயனப் பொருட்களின் அதிகப்படியான பயன்பாடு, உடலில் உள்ள ஹார்மோன்களில் தீவிரமான பாதிப்பை ஏற்படுத்துவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இது புற்றுநோய் போன்ற கடுமையான நோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது. எனவே, அழகுபடுத்த இயற்கையான மற்றும் பாதுகாப்பான முறையைப் பயன்படுத்த வேண்டும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
First Published :
January 01, 2025 7:39 PM IST