Sholay Deleted Scenes | இந்தப் படத்தின் மீதான ஆர்வம் தற்போதுவரை அதிகமாகவே உள்ளது. ஆனால் இந்த படத்தின் பல காட்சிகளை சென்சார் போர்டு நீக்கியது. அதற்கான காரணம் என்னவென்று இங்கே தெரிந்து கொள்ளலாம்.
- 1-MIN READ | News18 Tamil Tamil Nadu
Last Updated :January 4, 2025, 5:53 PM IST Published by
Soundarya Kannan
01
1975ஆம் ஆண்டு வெளியான ஷோலே திரைப்படம், ஹிந்தி சினிமாவின் எவர்கிரீன் படங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இன்றும் ஷோலே திரைப்படத்திற்கு என்று தனி ரசிகர்கள் உள்ளனர். அதன் வசீகரிக்கும் கதை ரசிகர்களின் இதயங்களை வென்றது என்றே சொல்லலாம்.
02
இதில், அமிதாப் பச்சன், ஜெயா பச்சன், தர்மேந்திரா, ஹேம மாலினி மற்றும் அம்ஜத் கான் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இந்தப் படம் வெளியானபோது பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அற்புதமான கதை, அசாத்தியமான நடிப்பு, ஆர்.டி.பர்மன் இசையமைத்த ஒவ்வொரு பாடலும் அபாரமானதாக இருந்தது. இவை அனைத்தும் ஷோலே திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பங்களித்தது.
03
மொத்தத்தில், 'ஷோலே' சினிமா என்ற எல்லையைத் தாண்டி 'கல்ட்' ஆகிவிட்டது. இந்தப் படத்தின் மீது ரசிகர்கள் தற்போது வரை மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால் இந்த படத்தின் பல காட்சிகள் நீக்கப்பட்டது. அது ஏன் என்று தெரியுமா?.
04
இந்த படம் வெளியாவதற்கு முன்பே பல காட்சிகள் நீக்கப்பட்டன. பல்வேறு வன்முறை காட்சிகளை சென்சார் போர்டு நீக்கியது. அப்படி நீக்கப்பட்ட காட்சி ஒன்று சுமார் 49 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது மீண்டும் வெளிவந்துள்ளது. அந்த வகையில், ஷோலே படத்தின் நீக்கப்பட்ட காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
05
இந்தப் படத்தில் ‘கப்பர் சிங்’ வேடத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் அம்ஜத் கான். இந்நிலையில் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அந்த புகைப்படம் ஓல்ட் இஸ் கோல்ட் இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டது. அதில் அம்ஜத் கான் நிற்கிறார். மேலும் சச்சின் பில்கோன்கர் அவருக்குப் பக்கத்தில் தரையில் படுத்திருப்பார்.
06
இப்படத்தில் சச்சின் அகமது என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தில், கப்பர் சச்சினை முடியைப் பிடித்து இழுப்பது போல் இருக்கும். மேலும், அவர்களை சுற்றி கொள்ளையர்கள் காணப்படுகிறார்கள். இந்த காட்சி வன்முறையாக இருப்பதாக கூறி படத்தில் இருந்து நீக்கப்பட்டது.
- FIRST PUBLISHED : January 4, 2025, 5:53 PM IST
Sholay Deleted Scenes: 'ஷோலே' படத்தின் நீக்கப்பட்ட காட்சிகள்.. 49 ஆண்டுகளுக்கு பின் இணையத்தில் வைரல்!
1975ஆம் ஆண்டு வெளியான ஷோலே திரைப்படம், ஹிந்தி சினிமாவின் எவர்கிரீன் படங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இன்றும் ஷோலே திரைப்படத்திற்கு என்று தனி ரசிகர்கள் உள்ளனர். அதன் வசீகரிக்கும் கதை ரசிகர்களின் இதயங்களை வென்றது என்றே சொல்லலாம்.
MORE
GALLERIES