Last Updated:January 10, 2025 6:54 PM IST
Game Changer Review: ஷங்கர் இயக்கத்தில் பொங்கல் வெளியிட்டாக ரிலீஸ் ஆகியுள்ள கேம் சேஞ்சர் படம் குறித்து ரசிகர்கள் கருத்து இதோ...
ஷங்கருக்கு ரெக்கார்ட் சேஞ்சரா இந்த கேம் சேஞ்சர்.. படம் குறித்து மக்கள் சொல்லும் பாய்ண்ட்..
தில் ராஜு தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கேம் சேஞ்சர்' திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று வெளியாகியுள்ளது. இதில் ராம் சரண், கியாரா அத்வானி, எஸ்.ஜே. சூர்யா, அஞ்சலி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். தமன் இசையமைத்திருக்கும் இந்தப் படத்திற்கு கார்த்திக் சுப்புராஜ் திரைக்கதை எழுதியுள்ளார்.
இந்தப் படம் சமூகப் பிரச்சினைகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. ராம் சரண் ஒரு ஐஏஎஸ் அதிகாரியாக நடித்து ஊழலுக்கு எதிராகப் போராடும் கதையாக இந்தப் படம் உருவாகியுள்ளது. மதுரையில் கலெக்டராக இருந்த ஐஏஎஸ் அதிகாரியை இன்ஸ்பிரேஷனாகக் கொண்டு, ஆந்திராவை கதைக்களமாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது.
மயிலாடுதுறையில் இன்று வெளியான இந்தப் படத்தைப் பார்த்த ரசிகர்கள், "இரட்டை வேடத்தில் நடித்துள்ள ராம் சரண், தனது நடிப்புத் திறமையால் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளதாகவும், ஸ்டைலிஷ் ஐஏஎஸ் அதிகாரியாகவும், எளிய கிராமத்து இளைஞனாகவும் தன்னை மாற்றிக்கொண்டு, இரண்டு வேடங்களிலும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருப்பதாகவும்" தெரிவித்தனர்.
இதையும் படிங்க: Pongal Seer Varisai: பொங்கலைச் சிறப்பாக்கும் பொறந்த வீட்டு சீர்... கண்ணைக் கவரும் வகைவகையான பாத்திரங்கள்...
"படத்தில் தமன் இசையமைத்த பாடல்கள் அனைத்தும் நன்றாக இருப்பதாகவும், படத்தின் பாடல்களில் காட்சியமைப்புகள் நன்றாக இருப்பதாகவும், திருவின் ஒளிப்பதிவு படத்திற்கு அழகிய காட்சிகளை வழங்கியுள்ளதாகவும்" கூறினர்.
குறிப்பாக ராம் சரணின் நடிப்பு, மற்றும் படத்தின் தொழில்நுட்பம் ஆகியவை படத்திற்குப் பெரும் பலமாக அமைந்துள்ளதாகவும் ரசிகர்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
Location :
Mayiladuthurai,Nagapattinam,Tamil Nadu
First Published :
January 10, 2025 6:52 PM IST