வைட்டமின்கள், ஆன்டி-ஆக்சிடன்ட்கள் மற்றும் பிற அத்தியாவசிய காம்பவுண்டுகள் நிறைந்த ஸ்ட்ராபெர்ரி பழங்கள் வயதான அறிகுறிகளை குறைத்து, கறைகளைப் போக்கி சருமத்தின் அமைப்பை மேம்படுத்துகிறது.
- 1-MIN READ | News18 Tamil Tamil Nadu
Last Updated :December 20, 2024, 7:11 PM IST Published by
Sivaranjani E
01
ஸ்ட்ராபெர்ரி பழங்கள் சாப்பிடுவதற்கு சுவையான பழங்கள் மட்டுமல்லாமல், நம்முடைய சருமத்தில் பல அதிசயங்களை ஏற்படுத்தக்கூடிய ஊட்டச்சத்துக்களின் களஞ்சியமாகவும் உள்ளது. வைட்டமின்கள், ஆன்டி-ஆக்சிடன்ட்கள் மற்றும் பிற அத்தியாவசிய காம்பவுண்டுகள் நிறைந்த ஸ்ட்ராபெர்ரி பழங்கள் வயதான அறிகுறிகளை குறைத்து, கறைகளைப் போக்கி சருமத்தின் அமைப்பை மேம்படுத்துகிறது. மேலும் இதன் இயற்கையான எக்ஸ்ஃபோலியேட்டிங் பண்புகள் மற்றும் அதிக அளவு வைட்டமின் C உங்களுடைய சரும பராமரிப்பு வழக்கத்திற்கு ஒரு அற்புதமான பொருளாக மாற்றுகிறது. எனவே இந்த ஜூஸியான சூப்பர்ஃபுட் சருமத்தை ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் மாற்றுவதற்கு எவ்வாறு உதவுகிறது என்பதை பார்க்கலாம்.
02
மினுமினுப்பான சருமத்திற்கு ஸ்ட்ராபெர்ரி பழங்கள் வழங்கும் நன்மைகள் : இளமையான சருமத்திற்கு தேவையான ஆன்டி-ஆக்சிடன்ட்கள் ஸ்ட்ராபெர்ரி பழங்களில் உள்ள ஆன்டி-ஆக்சிடன்ட்கள் அதிலும் குறிப்பாக எலாஜிக் அமிலம் முன்கூட்டிய வயதான அறிகுறிகளை ஏற்படுத்தும் ஃபிரீ ரேடிக்கல்களை எதிர்த்து போராடுகிறது. வழக்கமான முறையில் நீங்கள் ஸ்ட்ராபெர்ரி பழங்களை சாப்பிட்டு வந்தாலோ அல்லது சருமத்தில் பயன்படுத்தி வந்தாலோ மெல்லிய கோடுகள் மற்றும் சுருக்கங்கள் குறைந்து உங்களுடைய சருமம் இளமையாக காட்சியளிக்கும்.
03
பளிச்சென்று சருமத்திற்கு வைட்டமின் C : ஸ்ட்ராபெர்ரி பழங்களில் வைட்டமின் C எக்கச்சக்கமாக உள்ளது. இது டல்லான சருமத்தை பளிச்சிட செய்து கரும்புள்ளிகளை மங்க வைக்கிறது. இந்த ஊட்டச்சத்து கொலாஜன் உற்பத்தியை தூண்டி, சருமத்தின் நெகிழ்வுத்தன்மை மற்றும் மினுமினுப்பை பராமரிக்கிறது.
04
மென்மையான சருமத்திற்கு இயற்கை எக்ஸ்ஃபோலியேஷன் : ஸ்ட்ராபெர்ரி பழங்களில் ஆல்ஃபா ஹைட்ராக்சி அமிலங்கள் காணப்படுகிறது. இந்த அமிலங்கள் சருமத்தை மென்மையாக எக்ஸ்ஃபோலியேட் செய்து இறந்த செல்கள் மற்றும் அழுக்குகளை அகற்றுகிறது. ஸ்ட்ராபெர்ரி அடிப்படையிலான ஸ்க்ரப்புகளை இதற்கு நீங்கள் பயன்படுத்தலாம். இதன் மூலமாக உங்களுக்கு மென்மையான சருமம் கிடைக்கும்.
05
முகப்பருக்கள் மற்றும் கறைகள் : ஸ்ட்ராபெர்ரி பழங்களின் சாலிசிலிக் அமிலம் முகப்பருக்களை எதிர்த்து போராடுவதற்கான இயற்கை பண்புகளை கொண்டுள்ளன. சருமத்தின் துளைகளில் ஏற்பட்டுள்ள அடைப்புகளைப் போக்கி, வீக்கத்தை குறைத்து, எதிர்காலத்தில் முகப்பருக்கள் ஏற்படுவதை தடுத்து, தெளிவான மற்றும் கறைகள் இல்லாத அழகான சருமத்தை கொடுக்கிறது.
06
சருமத்திற்கான நீர்ச்சத்து : ஸ்ட்ராபெர்ரி பழங்களில் இயற்கையாகவே நீர்ச்சத்து காணப்படுகிறது. இது சருமத்திற்கு நீரேற்றத்தை அளிக்கிறது. மேலும் இதில் உள்ள வீக்கம் எதிர்ப்பு பண்புகள் தோலில் உள்ள எரிச்சல் மற்றும் சிவத்தலை ஆற்றுகிறது. இதனால் வறண்ட மற்றும் சென்சிடிவ் சருமம் கொண்டவர்களுக்கு இது ஒரு அற்புதமான தீர்வு.
07
UV சேதம் : ஸ்ட்ராபெர்ரி பழங்களில் உள்ள எலாஜிக் அமிலம் சருமத்தை தீங்கு விளைவிக்கும் UV கதிர்களிடமிருந்து பாதுகாக்கிறது. ஆனால் இதனை நீங்கள் சன் ஸ்கிரீனுக்கு பதிலாக பயன்படுத்தக் கூடாது. ஸ்ட்ராபெர்ரி பழங்களை சூரிய சேதம் மற்றும் பிக்மென்ட்டேஷனுக்கு எதிராக ஒரு கூடுதல் பாதுகாப்பு அடுக்காகவே நீங்கள் பயன்படுத்தலாம்.
08
ஸ்ட்ராபெர்ரி பழங்களை உங்களுடைய சரும பராமரிப்பு வழக்கத்தில் சேர்ப்பதன் மூலமாக இளமையான சருமத்தை பெறலாம். இது தவிர அதனை ஃபிரெஷாகவோ அல்லது ஸ்மூத்தியாகவோ சாப்பிடுவது சருமத்தின் ஆரோக்கியத்தையும், தோற்றத்தையும் மேம்படுத்தும். இந்த ஊட்டச்சத்து நிறைந்த பழத்தை உங்களுடைய டயட் மற்றும் அழகு பராமரிப்பில் சேர்த்து மினுமினுப்பான மற்றும் ஆரோக்கியமான சருமத்தை பெற்றிடுங்கள்.
- FIRST PUBLISHED : December 20, 2024, 7:11 PM IST
வைரத்தைப் போல மினுமினுக்கும் சருமத்தை தரும் ஸ்ட்ராபெர்ரி.. ஸ்கின்கேரே தேவைப்படாது.!

MORE
GALLERIES