Last Updated:December 27, 2024 1:58 PM IST
நாம் சாப்பிடும் உணவில் உள்ள வைட்டமின் B12 என்பது புரோட்டீன்களோடு இணைக்கப்படுகிறது. செரிமானத்தின் போது வயிற்றில் உற்பத்தியாகும் அமிலம் மற்றும் பெப்சின் என்ற நொதி அதனை வெளியிடுவதற்கு உதவுகிறது.
வைட்டமின் B12 என்பது தண்ணீரில் கரையக்கூடிய ஒரு அத்தியாவசிய வைட்டமின் ஆகும். இது சிவப்பு ரத்த அணுக்கள் உற்பத்தி, DNA உற்பத்தி மற்றும் வழக்கமான நரம்பு செயல்பாட்டுக்கு மிகவும் அவசியமான ஒரு ஊட்டச்சத்தாக அமைகிறது. எனினும் இந்த ஊட்டச்சத்தை நம்முடைய உடல் உறிஞ்சுவது என்பது ஒரு சிக்கலான செயல்முறை மற்றும் இது பல்வேறு காரணிகளின் அடிப்படையில் அமையும்.
பல நோயாளிகள் சப்ளிமெண்ட்களை தொடர்ச்சியாக எடுத்து வந்தாலும் கூட வைட்டமின் B12 குறைபாடு இருப்பதற்கான அறிகுறிகளை உணர்வதாக கூறுகின்றனர். எனவே வைட்டமின் B12 நம்முடைய உடலில் போதுமான அளவு உறிஞ்சப்படுவது மிகவும் முக்கியம். அதிலும் குறிப்பாக சைவ உணவு சாப்பிடுபவர்கள், வயதானவர்கள் மற்றும் ஒரு சில மருத்துவ நிலைகளால் பாதிக்கப்பட்டுள்ள அவர்களுக்கு இது முக்கியமானதாக கருதப்படுகிறது.
வைட்டமின் B12 நாம் சாப்பிடும் உணவிலிருந்து நம்முடைய உடலால் எப்படி உறிஞ்சப்படுகிறது?
வைட்டமின் B12 உறிஞ்சப்படும் செயல்முறை பின்வருமாறு:-
நாம் சாப்பிடும் உணவில் உள்ள வைட்டமின் B12 என்பது புரோட்டீன்களோடு இணைக்கப்படுகிறது. செரிமானத்தின் போது வயிற்றில் உற்பத்தியாகும் அமிலம் மற்றும் பெப்சின் என்ற நொதி அதனை வெளியிடுவதற்கு உதவுகிறது. வைட்டமின் B12 வெளியிட்டபட்டவுடன் அது வயிற்றின் ஓரங்களில் உற்பத்தியான ஒரு புரோட்டினுடன் இணைகிறது. இந்த காம்ப்ளக்ஸ் வைட்டமின் B12 செரிமான பாதையில் நகரும் பொழுது அதனை பாதுகாக்கிறது. சிறுகுடலின் இறுதி பகுதியில் இந்த வைட்டமின் B12-IF காம்ப்ளக்ஸ் உறிஞ்சப்படுகிறது. இந்த செயல்முறையின் இடையில் ஏதேனும் தடங்கல் ஏற்படும் பட்சத்தில் வைட்டமின் B12 உறிஞ்சப்படுவதில் சிக்கல் ஏற்படலாம்.
வயிற்று அமிலம் என்பது உணவில் இருந்து B12 வெளியிடப்படுவதற்கு மிகவும் அவசியம். வயதானவர்கள் மற்றும் ஆன்டி-ஆசிட் மருந்துகளை எடுத்துக் கொள்ளும் நபர்களில் வைட்டமின் B12 மோசமாக உறிஞ்சப்படுவதற்கு காரணம் வயிற்றில் குறைவான அமிலம் உற்பத்தியாவது. வைட்டமின் B12 உணவுகளோடு கால்சியம், (பால் சார்ந்த பொருட்கள், தாவர அடிப்படையிலான பால் மற்றும் கீரை), வைட்டமின் B9 (கீரை, பீன்ஸ் மற்றும் தானியங்கள்) மற்றும் வைட்டமின் B6 (வாழைப்பழம், கோழி இறைச்சி, உருளைக்கிழங்குகள்) போன்ற உணவுகளை சாப்பிடுவது அவசியம்.
வைட்டமின் B12 உறிஞ்சுதலில் ஆரோக்கியமான உடல் செயல்பாடும் முக்கியம். எனவே குடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு நீங்கள் தயிர், புளிக்க வைக்கப்பட்ட உணவுகள் போன்ற ப்ரோபயாடிக்ஸ் நிறைந்த உணவுகளையும், பூண்டு, வெங்காயம், வாழைப்பழம், முழு தானியங்கள் போன்ற ப்ரீபயாட்டிக்ஸ் உணவுகளையும் சாப்பிட வேண்டும். அளவுக்கு அதிகமாக மது அருந்துவது மற்றும் புகைப்பிடிப்பது போன்ற கெட்ட பழக்கங்களும் வைட்டமின் B12 உறிஞ்சப்படுவதில் சிக்கல்களை ஏற்படுத்தி அதன் குறைபாட்டை உண்டாக்கும்.
Also Read | நீங்கள் ஊட்டச்சத்தான உணவு முறையை கடைப்பிடிக்கவில்லை என்பதை உணர்த்தும் 10 அறிகுறிகள்.!
உங்களுடைய உடலில் வைட்டமின் பி12 நன்றாக உறிஞ்சப்படுவதற்கான அறிகுறிகள்
*ஆற்றல் அளவுகள்
*அறிவு திறன் செயல்பாடு *மனநிலை *ஆரோக்கியமான சருமம், தலைமுடி மற்றும் நகங்கள்.
வைட்டமின் B12 நிறைந்த உணவுகள்
அசைவத்தை பொறுத்தவரை இறைச்சி, மீன், நண்டு, பால், சீஸ், தயிர் மற்றும் முட்டை ஆகியவற்றில் வைட்டமின் B12 நிறைந்துள்ளது. சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு தானியங்கள், தாவர அடிப்படையிலான பால், ஈஸ்ட் போன்றவற்றில் வைட்டமின் B12 அதிகமாக உள்ளது.
First Published :
December 27, 2024 1:58 PM IST