வேலைக்கே போகாம மாசம் ரூ.5,000 அக்கவுண்ட்-ல வேணுமா? இந்த ஒரு திட்டம் போதும்!

1 week ago 4

Published: Thursday, March 13, 2025, 14:35 [IST]

வேலைக்கு போறவங்களுக்கே வரக்கூடிய சம்பளம் பத்தலன்னு யோசிக்கிற காலத்துல வேலைக்கே போகாம மாசம் மாசம் காசு வந்தா எப்படி இருக்கும்? அட ஆமாங்க! அப்படி ஒரு திட்டத்தை போஸ்ட் ஆபீஸ் கொடுத்துட்டு இருக்காங்க. இதுல நீங்க ஒரு முறை முதலீடு செஞ்சா போதும்! மாசம் மாசம் டான்னு உங்க அக்கவுண்டுக்கு பணம் வந்துடும்.

இப்பெல்லாம் நிறைய பேரு கைக்கு வர சம்பளம் பத்தாம வேறு ஏதாவது தொழில் செய்யலாமான்னு யோசிச்சிட்டே இருக்காங்க. அப்படிப்பட்டவங்க இந்த ஒரு திட்டத்தில் முதலீடு செஞ்சா.. எந்த வேலையுமே செய்யாம காசு பாக்கலாம். இந்தத் திட்டத்தின் பேரு தான் "போஸ்ட் ஆபீஸ் மாதாந்திர வருமான திட்டம்". இங்கிலீஷ்-ல "Post Office Monthly Income Scheme (MIS)"-னு சொல்லுவாங்க. இது ஒரு முறை முதலீடு செய்யக்கூடிய திட்டம்.

வேலைக்கே போகாம மாசம் ரூ.5,000 அக்கவுண்ட்-ல வேணுமா? இந்த ஒரு திட்டம் போதும்!

மாதாந்திர வருமான திட்டத்தில் முதலீடு செய்வதால் என்ன பலன்?: மியூச்சுவல் ஃபண்டில் பணத்தைப் போட்டுட்டு விழி பிதுங்கி உட்காருவதற்கு பதிலா அரசாங்க திட்டத்தில் பணத்தை போட்டா மாச மாசம் உங்க அக்கவுண்ட்ல பணத்தை வரவு வச்சுடுவாங்க.

அக்கவுண்ட்: மாதாந்திர வருமான திட்டத்துல நீங்க தனியாவும் அக்கவுண்ட் தொடங்கலாம். இல்ல ரெண்டு பேர் சேர்ந்து கூட்டுக்கணக்காவும் தொடங்கலாம். ஒவ்வொரு போஸ்ட் ஆபீஸ் திட்டத்துக்கும் குறிப்பிட்ட வரம்பு இருக்கும். அதேபோல இந்த திட்டத்துக்கும் இருக்கு.

Also Read

வரலாற்று உச்சத்தில் தங்கம் விலை.. இன்று ஒரு நாளில் சவரனுக்கு ரூ.440 அதிகரிப்பு! நகைபிரியர்கள் சோகம்!

முதலீட்டுத் தொகை: அதிகபட்சமா சிங்கிள் அக்கவுண்ட் வச்சிருக்கவங்க ரூ.9 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம். அதுவே ஜாயிண்ட் அக்கவுண்ட்டா இருந்தா ரூ.15 லட்சம் வரை டெபாசிட் செய்ய முடியும். போஸ்ட் ஆபீஸ் மாதாந்திர வருமானத் திட்டத்திற்கு இப்போதைய நிலவரப்படி 7.4 சதவீத வட்டி தராங்க.

சரி அதிகபட்ச தொகை என்னன்னு பாத்துட்டோம். குறைந்தபட்சமா எவ்வளவு முதலீடு செய்யலாம் தெரியுமா? 500 ரூபாயிலிருந்து உங்களால டெபாசிட் செய்ய முடியும். ஆனா இது ஒரு முறை முதலீடு தான். நீங்க எவ்வளவு பணத்தை டெபாசிட் செய்றீங்களோ அதற்கு தகுந்தபடி தான் உங்களுக்கு வட்டி கிடைக்கும். இதை ஒரு உதாரணத்தோடு பார்க்கலாம்.

Also Read

IT ஊழியர்களே வீட்டிலிருந்து சம்பாதிக்க சூப்பர் சான்ஸ்! கோடை விடுமுறைக்கு டக்கரான பிஸ்னஸ் ஐடியா..!

ஒரு தனிநபர் ரூ.9 லட்சத்தை இந்த திட்டத்துல போய் டெபாசிட் செய்யறாருன்னு வச்சுக்குவோம். இவருக்கு 7.4 சதவீத வட்டியில மாசம் 5,500 ரூபாய் அக்கவுண்டுக்கு வந்துடும். இந்தத் திட்டத்தின் முதிர்வு காலம் 5 ஆண்டுகள். அதாவது 5 வருஷத்துக்கு தொடர்ந்து உங்களுக்கு இதே மாதிரி மாசம் மாசம் வட்டி வரவு வச்சிட்டு இருப்பாங்க. அதே போல ரெண்டு பேர் சேர்ந்து கூட்டுக் கணக்காக தொடங்கி ரூ.15 லட்சத்தை முதலீடு செஞ்சிருக்காங்கன்னு வெச்சிக்குவோம். அதுக்கு மாச மாசம் ரூ. 9,250 வட்டி கிடைக்கும்.

Story first published: Thursday, March 13, 2025, 14:35 [IST]

Other articles published on Mar 13, 2025

Read Entire Article