ஆயுர்வேதத்தில் நமது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும், நோய்களை எதிர்த்துப் போராடவும் பல இயற்கையான முறைகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. தினமும் காலையில் வெறும் வயிற்றில் வேப்பிலை, துளசி மற்றும் தேன் சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியம் மட்டுமன்றி, உடலை உள்ளிருந்து வலுவாக்கும்.
- 1-MIN READ | News18 Tamil Tamil Nadu
Last Updated :December 6, 2024, 3:44 PM IST Published by
Sivaranjani E
01
ஆயுர்வேதத்தில், வேப்பிலை, துளசி மற்றும் தேன் ஆகியவை மருத்துவ குணங்கள் கொண்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இவற்றை தினமும் காலையில் சாப்பிட்டால், உங்கள் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளைத் தரும். ஆயுர்வேதத்தில் நமது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும், நோய்களை எதிர்த்துப் போராடவும் பல இயற்கையான முறைகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. தினமும் காலையில் வெறும் வயிற்றில் வேப்பிலை, துளசி மற்றும் தேன் சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியம் மட்டுமன்றி, உடலை உள்ளிருந்து வலுவாக்கும். அவற்றை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்ப்போம்.
02
1. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது: வேம்பு மற்றும் துளசியில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் ஆன்டிமைக்ரோபியல் பண்புகளை கொண்டுள்ளது . தேன் உடல் உறுப்புகளை அமைதிப்படுத்தும் பண்புகளை கொண்டுள்ளது. எனவே, இவற்றை சாப்பிடுவதால், சளி மற்றும் காய்ச்சல் ஆகியவற்றை வரவிடாமல் தடுத்து உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
03
2. நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது: வேப்பிலை நச்சுகளை வெளியேற்றி உடலை சுத்தப்படுத்துகிறது, துளசி ஆனது கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது மற்றும் தேன் ஆனது உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது. இந்நிலையில், இவை மூன்றும் உடலில் உள்ள நச்சுகளை வெளியேறுவதோடு மட்டுமல்லாமல் சருமம் பராமரிப்புக்கு உதவுகிறது.
04
3. செரிமானத்தை மேம்படுத்துகிறது: துளசி ஆனது செரிமான மண்டலத்தை மேம்படுத்துகிறது, வேப்பிலை ஆனது கெட்ட குடல் பாக்டீரியாவை எதிர்த்துப் போராடுகிறது, மற்றும் தேன் ஆனது குடல் நுண்ணுயிரிகளின் சமநிலையை பராமரிக்கிறது. இதன் விளைவாக வீக்கத்தை குறைகிறது மற்றும் ஊட்டச்சத்துக்களை எளிதாக உறிஞ்சுகிறது.
05
4. சுவாச ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது: சுவாச பிரச்சனைகளை போக்க வேப்பிலை துளசி மற்றும் ஆகியவை இயற்கை மருந்தாக செயல்படுகிறது. தேன் ஆனது தொண்டை சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை போக்குகிறது. இந்த மூன்று கலவையானது இருமல், சளி மற்றும் ஆஸ்துமாவை சமாளிக்க சுவாச பாதைகளை சுத்தம் செய்ய உதவுகிறது.
06
5. சருமத்திற்கு ஊட்டமளிக்கிறது: வேப்பிலையின் ஆன்டிபாக்டீரியல் பண்புகள், துளசியின் ஆன்டி இன்ஃபிளமேட்டரி பண்புகள் மற்றும் தேனின் ஈரப்பதமூட்டும் நன்மைகள் உள்ளது. இவை தோல் தொற்றுகள் மற்றும் முகப்பருவைத் தடுக்கவும், தழும்புகளைக் குறைக்கவும், சருமத்திற்கு இயற்கையான பளபளப்பைக் கொடுக்கவும், சருமத்திற்கு ஈரப்பதத்தை அளித்து மென்மையாக்கவும் உதவுகிறது.
07
6. இரத்த சர்க்கரை அளவை சீராக்க உதவுகிறது: வேப்பிலை மற்றும் துளசி ஆனது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. இந்த இரண்டு மருந்துகளும் உடலில் இன்சுலின் அளவை மேம்படுத்த உதவுகின்றன. தேன்-ஐ மிதமாக சாப்பிடும் போது, ஆரோக்கியமான இனிப்பு மாற்றாக உள்ளது. இந்த கலவையானது நீரிழிவு மேலாண்மைக்கு உதவுகிறது.
08
7. வாய் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது: வேப்பிலை மற்றும் துளசி ஆனது வாய்வழி பாக்டீரியாவை எதிர்த்து போராடுகிறது, இது ஈறு தொற்று மற்றும் வாய் துர்நாற்றத்தை தடுக்கிறது. தேன் ஆனது வாய் புண்களை ஆற்றும் மற்றும் தொடர்ந்து சாப்பிடும்போது வாய் சுகாதாரத்தை மேம்படுத்துகிறது.
09
8. மன அழுத்தத்தையும், பதட்டத்தையும் குறைக்கிறது: துளசி ஆனது மன அழுத்தத்தை எதிர்த்துப் போராட உதவுகிறது, வேப்பிலை ஆனது மனதை அமைதிப்படுத்துகிறது மற்றும் தேன் ஆனது விரைவான ஆற்றலை வழங்குகிறது. இந்த கலையானது மன ஆரோக்கியத்தை சமநிலைப்படுத்துகின்றது மற்றும் பதட்டத்தை குறைக்கிறது.
10
9. எடை குறைக்க உதவுகிறது: தேன் ஆனது இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்காமல் இயற்கையான இனிப்பை வழங்குகிறது, அதே நேரத்தில் வேப்பிலை மற்றும் துளசி ஆனது வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது, இது எடை குறைக்க உதவுகிறது. வெந்நீரில் தேன் கலந்து குடிப்பதால் கொழுப்பு கரையும்.
11
10. இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது: வேப்பிலை ஆனது இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது, அதே நேரத்தில் துளசி கொழுப்பைக் குறைக்க உதவுகிறது மற்றும் தேன் ஆனது ஆற்றலை அளிக்கிறது. இந்த கலவையானது இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதன் மூலமும் ஆக்ஸிடேடிவ் ஸ்ட்ரெஸ்-ஐ குறைப்பதன் மூலமும் இதய ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது.
- FIRST PUBLISHED : December 6, 2024, 3:44 PM IST
வேப்பிலை, துளசி மற்றும் தேன்.. காலையில் சாப்பிட்டால் கிடைக்கும் 10 நன்மைகள்..!
ஆயுர்வேதத்தில், வேப்பிலை, துளசி மற்றும் தேன் ஆகியவை மருத்துவ குணங்கள் கொண்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இவற்றை தினமும் காலையில் சாப்பிட்டால், உங்கள் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளைத் தரும். ஆயுர்வேதத்தில் நமது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும், நோய்களை எதிர்த்துப் போராடவும் பல இயற்கையான முறைகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. தினமும் காலையில் வெறும் வயிற்றில் வேப்பிலை, துளசி மற்றும் தேன் சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியம் மட்டுமன்றி, உடலை உள்ளிருந்து வலுவாக்கும். அவற்றை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்ப்போம்.
MORE
GALLERIES