வேதாளம் மாறி இறங்க மறுக்கும் முருங்கை விலை... தூத்துக்குடி மார்க்கெட் நிலவரம் என்ன...

4 weeks ago 11

Last Updated:December 20, 2024 4:36 PM IST

Drumsticks Price Hike: வரத்து குறைந்ததால் முருங்கைக்காய் விலை உயர்ந்த நிலையில் இன்னமும் அதே நிலையில் நீடிக்கிறது.

X

வேதாளம்

வேதாளம் மாறி இறங்க மறுக்கும் முருங்கை விலை... தூத்துக்குடி மார்க்கெட் நிலவரம் என்ன...

வழக்கமாகச் சுபதினங்கள், முக்கியமான வழிபாடுகள் நடைபெறும் தினங்களில் காய்கறிகளின் தேவை அதிகரிப்பதால் காய்கறிகளில் விலையும் கிடுகிடுவென உயரும்.

ஆனால் கடந்த சில நாட்களாக தூத்துக்குடியில் சில பகுதிகளில் மழை பொழிந்ததால் வரத்து குறைவால் காய்கறிகளின் விலை உயர்ந்து காணப்பட்டது. ஆனால் தற்போது விலை குறைந்து கட்டுப்படி ஆகும் விலையிலேயே விற்பனையாகின்றது.

ஆனால் முருங்கைக்காய் மட்டும் விலை உயர்ந்து காணப்படுகிறது. ஒரு கிலோ முருங்கைக்காய் 250 ரூபாய் வரை விற்பனையாகின்றது. நாட்டுக் காயான தக்காளி, கத்தரிக்காய் உள்ளிட்ட காய்கறி வகைகள் தூத்துக்குடி சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து தூத்துக்குடி மார்க்கெட்டிற்கு வருகிறது.

இதையும் படிங்க: Deivanai Elephant: "நானே டாக்டர் தான் டா” சுய மருத்துவம் பார்த்த தெய்வானை யானையின் கியூட் வீடியோ...

ஆனால் பீன்ஸ், கேரட், உருளைக்கிழங்கு, பட்டர் பீன்ஸ், முட்டைக்கோஸ், காலிஃபிளவர் போன்ற அனைத்துக் காய்கறிகளும் மதுரை மற்றும் ஒட்டன்சத்திரம் போன்ற மார்க்கெட்டுகளில் இருந்து தூத்துக்குடி மார்க்கெட்டிற்கு விற்பனைக்குக் கொண்டுவரப்படுகின்றன.

இது குறித்து வியாபாரி சசிகுமார் கூறுகையில், “தூத்துக்குடி காமராஜர் மார்க்கெட்டில் காய்கறிகளின் விலை பொதுமக்களுக்குக் கட்டுப்படியாகும் விலையிலேயே விற்பனையாகி வருகின்றது. மேலும், இஞ்சி ரூ.60க்கும், சின்ன வெங்காயம் ரூ.70க்கும், பெரிய வெங்காயம் ரூ.50க்கும், கேரட் ரூ.60க்கும், அவரைக்காய் ரூ.130 க்கும், ஊட்டி பீட்ரூட் ரூ.60க்கும், பச்சை மிளகாய் ரூ.60க்கும், வெண்டைக்காய் ரூ.40க்கும், கத்தரிக்காய் ரூ.60க்கும் விற்பனையாகின்றது.

மேலும், பாகற்காய் ரூ.40க்கும், பீன்ஸ் ரூ.120க்கும், புடலங்காய் ரூ.40க்கும், மாங்காய் ரூ.40க்கும், முருங்கைக்காய் ரூ.250க்கும், உருளைக்கிழங்கு ரூ.40க்கும், பூண்டு ரூ.400க்கும், காலிஃபிளவர் ரூ.50க்கும், முட்டைக்கோஸ் ரூ.30க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அனைத்துக் காய்கறிகளும் விற்பனை ‌விலை குறைந்து காணப்படும் நிலையில் முருங்கைக்காய் விலை உயர்ந்து காணப்படுகிறது” எனத் தெரிவித்தார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

Location :

Thoothukkudi,Tamil Nadu

First Published :

December 20, 2024 4:36 PM IST

தமிழ் செய்திகள்/வணிகம்/

Drumsticks Price Hike: வேதாளம் மாறி இறங்க மறுக்கும் முருங்கை விலை... தூத்துக்குடி மார்க்கெட் நிலவரம் என்ன...

Read Entire Article