வெளியாகி 26 ஆண்டுகள் ஆகியும் இணையத்தில் ட்ரெண்டிங்கில் இருக்கும் பாடல்.
- 1-MIN READ | News18 Tamil Tamil Nadu
Last Updated :December 28, 2024, 8:22 PM IST Published by
Karthi K
01
1998ல், ஷாருக்கான் மற்றும் மனிஷா கொய்ராலா நடித்த 'தில் சே' திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தின் அனைத்துப் பாடல்களும் மிகப்பெரிய ஹிட் அடித்தது. ப்ரீத்தி ஜிந்தாவை வைத்து படமாக்கப்பட்ட இந்தப் படத்தின் ஒரு பாடல் தற்போது வரை மக்கள் மனதை வென்று வருகிறது. இந்த படம் உயிரே தமிழில் வெளியாகி ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தது. தமிழில் நெஞ்சினிலே நெஞ்சினிலே என்ற பாடல் தான் ஹிந்தியில் ஜியா ஜலே என இன்று ரசிகர்கள் மனதில் இடம்பிடித்துள்ளது.
02
இந்தி திரையுலக வரலாற்றில் இதுவரை பல பாடல்கள் எழுதப்பட்டு, பல ஆண்டுகளாக மக்களின் விருப்பமான பாடல்களாக திகழ்கின்றன. இந்தப் பாடல்களின் சில ட்யூன்களும் வார்த்தைகளும் மக்கள் மனதில் நிலைத்து நிற்கின்றன. 1998ஆம் ஆண்டு வெளியான 'தில் சே' திரைப்படத்தில், குல்சார் ஒரு பாடலை எழுதியிருப்பார். அந்தப் பாடல் மணமகளின் உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாக எழுத்தப்பட்டிருக்கும்.
03
இந்த பாடலுக்கென தற்போது வரை ஒரு தனி ரசிகர் கூட்டம் உள்ளது. இந்த பாடலின் சிறப்பு என்னவென்றால், இந்த பாடலில் வரும் ஒரு வார்த்தை கூட ஆபாசமாக இருக்காது. இந்த பாடலில் வரும் ஒவ்வொரு வரியும் பல உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாக இருக்கும்.
04
ஷாருக்கான் மற்றும் மனிஷா கொய்ராலா நடித்த 'தில் சே' திரைப்படத்தில் வரும் 'ஜியா ஜலே' பாடலை குல்சார் எழுதியிருப்பார். அந்தப் பாடலுக்கு இன்று வரை தனி ரசிர்கள் கூட்டம் உள்ளது.
05
இந்தப் பாடலின் வரிகள் மட்டுமல்ல. அதன் இசையும் ரசிகர்களால் அதிகளவில் பாராட்டப்பட்டது. குல்சாரின் பாடல்கள் குறித்து புத்தகம் எழுதியிருக்கும் மொழிபெயர்ப்பாளர் நஷ்ரீன் முன்னி கபீர் ஒரு உரையாடலில் இந்தப் பாடல் குறித்து பேசியிருப்பார். அதில், மணமகளின் உணர்வுகளை வெளிப்படுத்தும் இந்தப் பாடலில் எந்தவொரு அநாகரிக வார்த்தையும் இல்லை. அதேபோல், திரையில் வெளிப்படுத்திய விதமும் அருமை என கூறினார்.
06
1998ல் வெளியான இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் பாடலை, இயக்குநர் மணிரத்னம் தனது படத்தில் மிக அழகாகக் காட்டியிருப்பார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் பாடலின் வரிகளை குல்சார் எழுதியுள்ளார்.
07
இந்தப் படத்தின் மூலம் ப்ரீத்தி ஜிந்தா அறிமுகமானார். இந்த படத்தில் வரும் பாடல்களில் ஒன்று தற்போது வரை ரசிகர்களின் முதல் தேர்வாக உள்ளது.
- FIRST PUBLISHED : December 28, 2024, 8:22 PM IST
வெளியாகி 26 ஆண்டுகள் ஆகியும் இன்றும் ட்ரெண்டிங்கில் இருக்கும் பாடல்.. எந்த படம் தெரியுமா?

MORE
GALLERIES